விஷ்ணுகுப்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஷ்ணுகுப்தர்
14வது குப்தப் பேரரசர்
ஆட்சிக்காலம்கி பி 540 – 550
முன்னையவர்மூன்றாம் குமாரகுப்தர்
பின்னையவர்?
அரசமரபுகுப்த வம்சம்

விஷ்ணுகுப்தர் (Vishnugupta) (சமக்கிருதம்: विष्णुगुप्त), குப்தப் பேரரசர்களில் குறைவாக அறியப்பட்டவரும், இறுதி குப்தப் பேரரசரும் ஆவார். பகைவர்களின் தொடர் தாக்குதல்களால், வட இந்தியா முழுவதும் பரந்திருந்த குப்தப் பேரரசு விஷ்ணுகுப்தர் காலத்தில், மகத நாட்டளவில் சுருங்கியது.

நரசிம்ம குப்தரின் பேரனும், மூன்றாம் குமாரகுப்தரின் மகனுமான விஷ்ணுகுப்தர், குப்த பேரரசை கி பி 540 – 550 முடிய ஆண்டதாக நாளந்தாவில் 1927-28-இல் அகழ்வாய்வின் போது கிடைத்த களிமண் முத்திரைகள் மூலம் அறியப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Agarwal, Ashvini (1989). Rise and Fall of the Imperial Guptas, Delhi:Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0592-5, pp.238-9
அரச பட்டங்கள்6
முன்னர்
மூன்றாம் குமாரகுப்தர்
குப்தப் பேரரசர்
540 – 550
பின்னர்
?
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணுகுப்தர்&oldid=3102379" இலிருந்து மீள்விக்கப்பட்டது