விருப்பாச்சி ஆறுமுக நாயனார் திருக்கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விருப்பாச்சி ஆறுமுக நாயனார் திருக்கோயில்
பெயர்
பெயர்:விருப்பாச்சி ஆறுமுக நாயனார் திருக்கோயில்
அமைவிடம்
அமைவு:கோடாங்கிபட்டி, தேனி
கோயில் தகவல்கள்
மூலவர்:விருப்பாச்சி ஆறுமுக நாயனார் (முருகன்)
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென்னிந்தியக் கோயில்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்

விருப்பாச்சி ஆறுமுக நாயனார் திருக்கோயில் (Virupatchi Arumuga nainar Temple), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான தீர்த்தத் தொட்டியினை கொண்டுள்ளதாலும், விருப்பாச்சி என்ற ஊரில் பக்தருக்கு அருள்புரிந்த முருகன் எழுந்தருளிய தலம் என்பதாலும்,[1] ஆறு முகங்களை கொண்ட சிலை அமைப்பில் காட்சி தருவதாலும் இத்தலம் தீர்த்தத் தொட்டி விருபாச்சி ஆறுமுக நாயனார் திருக்கோயில் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.[2]

கோவிலின் வழிபாடுகள் மற்றும் சிறப்புகள்[தொகு]

மூலவராக ஆறுமுக நயினார் என அழைக்கப்படும் முருகன் சிலை இங்கு உள்ளது. மயில் மேல் அமர்ந்த நிலையில் ஆறு முகங்களுடன் முருகன் காட்சியளிக்கிறார். அருகில் 7 தலை நாகம் மற்றும் மயில் வாகனத்துடன் நாக சுப்பிரமணியர் சிலை ஒன்றும் உள்ளது. மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் திரிதளம் என அழைக்கப்படுகிறது.[3] கோயில் முன்பு முருக தீர்த்தம் எனப்படும் வற்றாத தீர்த்த தொட்டி உள்ளது. நாக தோசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தோசம் நீங்க வேண்டி இந்த தீர்த்த தொட்டியில் நீராடுகின்றனர். பின்னர் நாகசுப்பிரமணியருக்கு பாலாபிசேகம் செய்து வழிபடுகின்றனர். குடும்ப நலம், தொழில் முன்னேற்றம், கல்வி சிறக்க பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். தீர்த்த தொட்டியின் சுவற்றில் விநாயகர், முருகன், சிவலிங்கம், வழிபட்ட நிலையில் சப்த கன்னியர் சிலைகள் உள்ளன. விருப்பாச்சி ஆறுமுக நயினார் திருக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.[4] [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "https://www.valaitamil.com/murugan-temple-arulmigu-arumuga-nayenaar-thirukyoil-t837.html". வலைத்தமிழ். https://www.valaitamil.com/murugan-temple-arulmigu-arumuga-nayenaar-thirukyoil-t837.html. பார்த்த நாள்: 10 December 2022. 
  2. "அருள்மிகு ஆருமுக நயினார் திருக்கோயில்". தினமலர். https://temple.dinamalar.com/New.php?id=442. பார்த்த நாள்: 10 December 2022. 
  3. "Temples Encyclopedia". Penmai Community Forum (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-10.
  4. "கோயில் தீர்த்தத்தொட்டி பக்தர்களால் சுத்தமானது : அறநிலையத்துறை கண்டுகொள்ளவில்லை". www.dinakaran.com. Archived from the original on 2022-12-10. பார்க்கப்பட்ட நாள் 2022-12-10.
  5. "Government of Tamil Nadu – Hindu Religious & Charitable Endowments Department". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-12-10.