வியாகுலத் தாய்மரி (தொடர்பாடல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெயிட்ரோ பெருகியுனோவின் சிலுவையின் அடியில் வியாகுலத் தாய்மரி, 1482

வியாகுலத் தாய்மரி அல்லது வியாகுலச் சங்கீதம் என்னும் பாடல் தூய மரியாவின் துயரங்களின் நினைவாகப் கத்தோலிக்க திருச்சபையில் பாடப்படும் பாடலாகும். இது 13ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம். இதன் ஆசிரியர் பிரான்சிஸ்கன் சபையினைச் சேர்ந்த ஜெகொபின் த டோடி அல்லது திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்டாகவோ இருக்கலாம்.[1][2][3]

கிறிஸ்துவின் பாடுகளின் போது மரியாள் பட்ட துன்பங்களை நினைவுகூறும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது. 1388-இல் இப்பாடல் வியாகுல அன்னை நவநாளில் பயன் படுத்தப்பட்டதாக ஜார்ஜுஸ் ஸ்டெல்லா என்பவர் எழுதியுள்ளார்.[4][5]

இப்பாடல் திருப்பலியில் தொடர்பாடலாக பாடப்படுவதை திரெந்து பொதுச்சங்கம் நீக்கியது. எனினும் திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்டால் இது தூய மரியாவின் துயரங்களின் நினைவு நாளான செப்டம்பர் 15 அன்று பாடப்பட அனுமதிக்கப்பட்டது.[6]

பாடல்[தொகு]

கீழ்வரும் மொழிபெயர்ப்பு கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாகும். இது கத்தோலிக்க திருச்சபையின் திருப்பலி வாசக நூலிலிருந்து எடுக்கப்பட்டது. இது வார்த்தைக்கு வார்த்தை செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு அல்ல. மாறாக பொருள் மாறாவண்ணம், தமிழ் கவிதை நடைக்கு ஒப்ப பெயர்க்கப்பட்டது ஆகும்.

Stabat mater dolorosa
juxta Crucem lacrimosa,
dum pendebat Filius.

Cuius animam gementem,
contristatam et dolentem
pertransivit gladius.

O quam tristis et afflicta
fuit illa benedicta,
mater Unigeniti!

Quae moerebat et dolebat,
pia Mater, dum videbat
nati poenas inclyti.

Quis est homo qui non fleret,
matrem Christi si videret
in tanto supplicio?

Quis non posset contristari
Christi Matrem contemplari
dolentem cum Filio?

Pro peccatis suae gentis
vidit Iesum in tormentis,
et flagellis subditum.

Vidit suum dulcem Natum
moriendo desolatum,
dum emisit spiritum.

Eia, Mater, fons amoris
me sentire vim doloris
fac, ut tecum lugeam.

Fac, ut ardeat cor meum
in amando Christum Deum
ut sibi complaceam.

Sancta Mater, istud agas,
crucifixi fige plagas
cordi meo valide.

Tui Nati vulnerati,
tam dignati pro me pati,
poenas mecum divide.

Fac me tecum pie flere,
crucifixo condolere,
donec ego vixero.

Juxta Crucem tecum stare,
et me tibi sociare
in planctu desidero.

Virgo virginum praeclara,
mihi iam non sis amara,
fac me tecum plangere.

Fac, ut portem Christi mortem,
passionis fac consortem,
et plagas recolere.

Fac me plagis vulnerari,
fac me Cruce inebriari,
et cruore Filii.

Flammis ne urar succensus,
per te, Virgo, sim defensus
in die iudicii.

Christe, cum sit hinc exire,
da per Matrem me venire
ad palmam victoriae.

Quando corpus morietur,
fac, ut animae donetur
paradisi gloria. Amen.

திருமகன் சிலுவையில் தொங்கிய போது அருகில்,
கண்ணீர் பெருகிடத் துயருடன் அந்தோ!
நின்றார் வியாகுலத் தாய்மரி.

பொருமலும் வருத்தமும் பொங்கிட ஆங்குத்
துயருறும் அவரது நெஞ்சை, அந்தோ!
ஊடுருவிற்றே கூர்வாள், காணீர்.

தேவ சுதனின் அன்பால் அன்னை,
பேரரும் ஆசி பெற்றவர், அன்று
எத்துணைத் துயரும் வருத்தமும் கொண்டார்.

அன்புத் தாயவர் மாண்புறு மகனின்
துன்பம் அனைத்தும் நோக்கிய போது
கொண்ட துயரமும் வருத்தமும் என்னே!

இத்துணைத் துயரில் மூழ்கித் தவிக்கும்
கிறிஸ்துவின் அன்னையைக் காணும் போதில்
எவரும் வருந்தாதிருந்திடுவாரோ!

தம் திருமகனோடு பெருந்துயர் கொள்ளும்
கிறிஸ்துவின் அன்னையை நோக்கிடும் போதில்
உளம் உருகாமல் நிற்பவர் யாரோ!

தம்முடைய மக்களின் பாவம் நீங்க
தாங்கரும் வேதனை, கசையடி ஏற்ற
தம் திருமகனாம் இயேசுவைக் கண்டார்.

தேனினுமினிய தேவனின் மைந்தன்
அனைவரும் கைவிட ஆறுதலின்றித்
தனிமையில் தமது உயிர்விடக் கண்டார்

அன்பின் ஊற்றாம் அன்னையே, அம்மா,
அடியேன் உம்முடன் அழுது வருந்த,
உமதுள்ளத் துயரை உணர்ந்திடச் செய்வீர்.

இறைவனாம் கிறிஸ்துவுக் கன்பு செய்து
என்றும் அவருக் குகந்தவராக,
என்னுளம் அன்பால் எரிந்திடச் செய்வீர்.

தூய நல்தாயே இவ்வரம் வேண்டும்:
துயருறும் சிலுவை நாதரின் காயம்
ஆழமாய் நெஞ்சில் அழுந்திடச் செய்வீர்.

அடியேனுக்காய்க் காயமும் துன்பமும்
ஏற்கத் திருவுளம் கொண்ட உம் மகனின்
துயரில் எனக்கொரு பங்கு தருவீர்.

சிலுவை நாதருடன் துயருறவும்,
பக்தியால் உம்முடன் புலம்பவும்,
என்றன் உயிருள்ளளவும் அருள் புரிவீரே.

சிலுவையடியில் உம்மோடு நின்று, சிந்தும்
கண்ணீர் அழுகையில் நானும் சேர்ந்து
பங்குற விரும்புகின்றேனே.

கன்னியர் தம்முள் சிறந்த கன்னியே,
கனிவுடன் என்னைக் கடைக்கண் நோக்கி
உம்மோடழுதிட அருள் செய், அம்மா.

கிறிஸ்துவின் சாவை நானும் தாங்கவும்
பாடுகள் யாவிலும் பங்கு கொள்ளவும்
காயம் நினைத்து இரங்கவும் செய்யும்.

நின் மகன் காயம் நினைந்துளம் வருந்தவும்
அவரது சிலுவையும், சிந்திய இரத்தமும்
என் மனம் நிரப்ப அருள் செய்வீரே.

என்றன் இறுதித் தீர்ப்பு நாளில் எரியில்
வீழ்ந்து அவதியுறாமல் கன்னியே,
என்னைக் காத்திடுவீரே.

கிறிஸ்துவே, நான் இம்மை விட்டங்கே
வந்திடும் வேளை வெற்றிக் குருத்தைத்
தாங்க நும் அன்னை வழியாய் அருள்வீர்.

என்னுடல் மரித்து அழியும் போதில்
என்றன் ஆன்மா பரகதி மகிமை
எய்திடும் வரத்தை வேண்டி நின்றேன். ஆமென்.

இசை[தொகு]

இப்படலின் ஆங்கில மற்றும் இலத்தீன் வரிகளுக்கு ஆன்டோனியோ விவால்டி, பிராண்ஸ் சூபேர்ட், ஜூசெப்பே வேர்டி, எபிகா இசைக்குழு, ஜோசப் ஹேடன், அன்டனின் டுவோராக் முதலிய பலர் இசையமைத்துள்ளனர்.

ஆதாரங்கள்[தொகு]

  1. Sabatier, Paul Life of St. Francis Assisi Charles Scribner Press, NY, 1919, page 286
  2. The seven great hymns of the Mediaeval Church by Charles Cooper Nott 1868 ASIN: B003KCW2LA page 96
  3. p. 574, Alighieri, Durling, Martinez (2003) Dante, Robert M., Ronald L. Oxford The Divine Comedy of Dante Alighieri: Purgatorio Volume 2 of The Divine Comedy of Dante Alighieri Oxford University Press. "The Stabat Mater by the Franciscan Jacopone da Todi."
  4. Catholic encyclopedia
  5. "Stabatmater Speciosa". Archived from the original on 2012-12-08. பார்க்கப்பட்ட நாள் 2012-09-15.
  6. Heartz, Daniel (1995). Haydn, Mozart and the Viennese School: 1740-1780. W.W. Norton & Co.. பக். 305. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-393-03712-6. http://books.google.com/books?id=3k5T_S91BE0C&lpg=PA305&dq=%22benedict%20xiii%22%20%22stabat%20mater%22&pg=PA305#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 3 April 2011. 

வெளி இணைப்புகள்[தொகு]