ஆன்டோனியோ விவால்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"சிவப்புக் குருவானவர்" என்னும் பட்டப் பெயர் கொண்ட, ஆன்டோனியோ லூசியோ விவால்டி (மார்ச் 4, 1678 – ஜூலை 28, 1741), ஒரு வெனிசியக் குருவானவரும், பரோக் இசையமைப்பாளரும், ஒரு புகழ் பெற்ற வயலின் கலைஞரும் ஆவார். இவர் வெனிஸ் குடியரசிலேயே பிறந்து வளர்ந்தார். நான்கு பருவங்கள் என்னும் நான்கு வயலின் இசை நிகழ்ச்சிகளைக் கொண்ட தொடரே பரவலாக அறியப்பட்டதும், மிகவும் புகழ் பெற்ற பரோக் இசை நிகழ்ச்சியும் ஆகும்.