விசுவ குமார் குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசுவ குமார் குப்தா
Vishwa Kumar Gupta
பிறப்புகான்பூர், இந்தியா
பணிஓமியோபதி மருத்துவர்
பெற்றோர்ஓம் பிரகாசு குப்தா
விருதுகள்பத்மசிறீ

விசுவ குமார் குப்தா (Vishwa Kumar Gupta) என்பவர் ஓர் இந்திய ஓமியோபதி மருத்துவராவார். இவர் புதுடெல்லியில்[1] அமைந்துள்ள நேரு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.[2] மருத்துவத் துறையில் குப்தாவின் சிறந்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு நான்காவது உயர் குடிமகன் விருதான பத்மசிறீ விருதை 2013 ஆம் ஆண்டு குப்தாவுக்கு வழங்கி கவுரவித்தது.[3].

வாழ்க்கை[தொகு]

ஓம் பிரகாசு குப்தாவின் மகனாகிய விசுவ குமார் குப்தா கான்பூரைச் சேர்ந்தவர்.[4] இந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ள ஓமியோபதி மருத்துவ கல்லூரியில் மாற்று மருத்துவத் துறையான ஓமியோபதி துறையில் பட்டம் பெற்றார். [4] குப்தா புதுதில்லியில் உள்ள நேரு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவ பணியை ஆரம்பித்து அங்கேயே கல்லூரியின் முதல்வராக பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார்.[1]

இந்திய ஓமியோபதி மருத்துவர்கள் நிறுவனத்தின் தலைவராக குப்தா 1998 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக இரண்டு ஆண்டு காலம் பொறுப்பு வகித்தார்.[1] 1990 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை [1] மத்திய ஓமியோபதி மன்றத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.[5] இவை தவிர குப்தா இந்திய அரசு சார்பாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரகம் திட்டமிடும் பல்வேறு திட்டங்களுக்காக பல குழுக்களில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[1] [1] இந்திய குடியரசு தலைவருக்கு கவுரவ மருத்துவராகவும் சிறிது காலம் இருந்தார்.[1]

குப்தா பல தேசிய மற்றும் பன்னாட்டு மாநாடுகளில் பங்கேற்று தன்னுடைய அறிவியல் கட்டுரைகளை வழங்கியுள்ளார்.[1] மேலும் 2013 ஆம் ஆண்டு இந்திய அரசின் நான்காவது உயர் குடிமகன் விருதான பத்ம சிறீ விருது பெற்றார்.[3] புதுதில்லியில் உள்ள ராசோரி கார்டனில் வசிக்கிறார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "Similima". Similima. 2013. Archived from the original on 26 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 26 October 2014.
  2. "NHMC". NHMC. 2014. Archived from the original on 26 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 26 October 2014.
  3. 3.0 3.1 "Padma 2013". Press Information Bureau, Government of India. 25 January 2013. பார்க்கப்பட்ட நாள் 10 October 2014.
  4. 4.0 4.1 4.2 "Delhi Homoeo Board". Delhi Homoeo Board. 2014. Archived from the original on 26 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 26 October 2014.
  5. 5.0 5.1 "Central Council of Homoeopathy". Central Council of Homoeopathy. 2014. Archived from the original on 26 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 26 October 2014.

புற இணைப்புகள்[தொகு]

  • "Padma Awards List". Indian Panorama. 2014. பார்க்கப்பட்ட நாள் 12 October 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுவ_குமார்_குப்தா&oldid=3591905" இலிருந்து மீள்விக்கப்பட்டது