விசாம்பர் சிங் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விசாம்பர் சிங் யாதவ் (Vishambhar Singh Yadav)(பிறப்பு: ஜனவரி 1, 1955) என்பவர் இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சமாஜ்வாதி கட்சி அரசியல்வாதி சார்ந்தவர். இவர் உத்தரப்பிரதேசத்தில் பாபேருவின் மூன்றாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1][2][3]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

யாதவ இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாபேருவில் உள்ள பண்டா மாவட்டத்தில் உள்ள பாப்ரெண்டா என்ற சிறிய கிராமத்தில் 1955ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தை மகேசுவரி சிங் யாதவ் ஒரு நிலப்பிரபுவாக இருந்தார். இவர் கான்பூரில் உள்ள தயானந்த் ஆங்கிலோ வேதக் கல்லூரியிலும் கான்பூரில் உள்ள கான்பூர் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் இராம யாதவை மணந்தார். இவர்களுக்கு விவேக், வருண் மற்றும் கௌரவ் என மூன்று மகன்கள் உள்ளனர். இவர் ஒரு வழக்கறிஞர், விவசாயி, அரசியல்வாதி மற்றும் சமூக சேவகர் ஆவார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

விசம்பர் சிங் யாதவ் கான்பூரில் உள்ள டீஏவி கல்லூரியின் மாணவர் தலைவராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, கல்லூரியின் தலைவராக ஆனார். இவர் 2007 மற்றும் 2012[4] உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல்களில் பாபேரு, பண்டா தொகுதியிலிருந்து உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரானார். யாதவ் மீண்டும் பேபேரு சட்டமன்றத் தொகுதியில் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் 2022-ல் போட்டியிட்டு வெற்றிபெற்று மூன்றாவது முறையாகச் 79614 வாக்குகள் பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Party site
  2. Times of India 16 Feb 2012
  3. [1]
  4. "UP Elections Resutls 2012 – Winners, Losers and new Cabinet of Mulayam Singh – hello ap".
  5. https://results.eci.gov.in/ResultAcGenMar2022/ConstituencywiseS24233.htm?ac=233

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசாம்பர்_சிங்_யாதவ்&oldid=3591903" இலிருந்து மீள்விக்கப்பட்டது