விக்டோரியா கௌரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலெட்சுமண சந்திர விக்டோரியா கௌரி (Victoria Gowri)(பிறப்பு 21 மே 1973) என்பவர் தமிழ்நாட்டினைச் சேர்ந்த சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி ஆவார். இவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்பு, பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியாகவும் மத்திய அரசின் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.[1][2]

கல்வி[தொகு]

கௌரி, மதுரையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார். கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[2]

தொழில்[தொகு]

அரசியல்[தொகு]

கௌரியின் குடும்பம் பல தசாப்தங்களாக பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்புடையது.[3][2] இவர் கல்லூரி நாட்களிலிருந்தே சங்க பரிவாரத்தின் துணை அமைப்பான சேவா பாரதியுடன் தொடர்புடையவர். அக்டோபர் 2010ல், கேரளாவில் கட்சியின் மகளிர் பிரிவு தலைவராக கவுரி நியமிக்கப்பட்டார்.[2] 2016ல், மகளிர் பிரிவு தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார்.[2] 2019 இந்திய பொதுத் தேர்தலின் போது, இவர் மெயின் பி சௌகிதார் பிரச்சாரத்தில் பங்கேற்றார்.[2]

சட்டம்[தொகு]

கௌரி 1995-ல் சட்டப் பயிற்சியைத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுத் தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.[2] 2015ஆம் ஆண்டில், பாஜக தலைமையிலான மத்திய அரசு, இவரைச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக நியமித்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கௌரி, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் நியமிக்கப்பட்டார்.[3]

உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு[தொகு]

17 சனவரி 2023 அன்று, இந்திய உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் கௌரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்தது.[1] சுமார் பதினைந்து நாட்களுக்குப் பிறகு, இவர் மத சிறுபான்மையினருக்கு - கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் பேச்சுகளை பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.[4][2] பிப்ரவரி 1ஆம் தேதி, சில வழக்கறிஞர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் இவரது நியமனத்தைத் திரும்பப் பெறுமாறு மனு அளித்தனர். இதே காரணங்களுக்காக இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.[5]

பிப்ரவரி 6, 2023 அன்று, கொலீஜியத்திற்குத் தலைமை தாங்கும் இந்தியத் தலைமை நீதிபதி - இரண்டு நீதிபதிகள் கொண்ட இருக்கையினை ஒரு வாரத்தில் இது குறித்து முடிவெடுக்க அமைத்தார்.[5][4][6] இருப்பினும், முடிவெடுத்த சில நிமிடங்களில், கொலீஜியத்தின் பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்குமாறு கேட்டுக் கொண்டார்.[7][5] விசாரணை மாற்றப்பட்டு, பிப்ரவரி 7 அன்று காலை பூஷன் இராம்கிருஷ்ண கவாய் மற்றும் சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்றது. அரசியல் பின்னணியைத் தகுதி இழப்பாக ஏற்க மறுத்து வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.[4][8]

கௌரியின் வழக்கு விசாரணைக்கு இருந்த ஒரே நேரத்தில் பதவியேற்றார். உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் முடிவடைவதற்கு முன்பு இவர் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.[4][9][a]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

கௌரிக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் 1973 மே மாதம் 21ஆம் தேதி பிறந்தார். இவருக்குத் திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர்.[10]

குறிப்புகள்[தொகு]

  1. Judges, once holding office, can only be removed by impeachment through the Parliament of India.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 S, Mohamed Imranullah (2023-02-07). "Advocate Victoria Gowri assumes office as judge of Madras High Court" (in en-IN). https://www.thehindu.com/news/national/tamil-nadu/advocate-l-victoria-gowri-assumes-office-as-judge-of-madras-high-court/article66480309.ece. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Nath, Akshaya (2023-02-07). "From BJP leader & Hindutva activist to Madras HC judge — who is L Victoria Gowri". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-07.
  3. 3.0 3.1 Das, Saurav (30 January 2023). "'Problem of Christian, Love Jihad': A Future Judge's Bias Reveals Supreme Court Collegium's Enduring Opacity — Article 14". article-14.com (in ஆங்கிலம்).
  4. 4.0 4.1 4.2 4.3 "Why SC Dismissing Challenge to Victoria Gowri's Appointment Was the Chronicle of a Failure Foretold". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2023-02-07.
  5. 5.0 5.1 5.2 S, Mohamed Imranullah (2023-02-06). "Advocates urge ACJ not to administer oath of office to Victoria Gowri until SC hears case against her elevation as judge of Madras HC" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/advocates-urge-acj-not-to-administer-oath-of-office-to-victoria-gowri-until-sc-hears-case-against-her-elevation-as-judge-of-madras-hc/article66478317.ece. 
  6. Rajagopal, Krishnadas (2023-02-07). "Victoria Gowri appointment | Two views emerge from Supreme Court on what Collegium considered" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/victoria-gowri-appointment-two-views-emerge-from-supreme-court-on-what-collegium-considered/article66481159.ece. 
  7. 7.0 7.1 "Drama over appointment of LC Victoria Gowri in Madras HC: A fifth judges case in making?". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-07.
  8. "Supreme Court Dismisses Plea Against Appointment Of Adv Victoria Gowri As Madras High Court Additional Judge". Live Law (in ஆங்கிலம்). 2023-02-07.
  9. Rajagopal, Krishnadas (2023-02-07). "SC declines to intervene in adv. Victoria Gowri’s appointment as Madras HC Additional Judge even as she took oath of office" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/supreme-court-dismisses-petition-challenging-victoria-gowris-appointment-as-madras-hc-judge/article66480409.ece. 
  10. Arvind, Ayesha. "Will strive to liberate marginalised, nurture fraternity in this diverse, beautiful country: Justice L Victoria Gowri". Bar and Bench - Indian Legal news (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்டோரியா_கௌரி&oldid=3652892" இலிருந்து மீள்விக்கப்பட்டது