விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை ஆழம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கை சிறப்பான வகையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அண்மைய ஆண்டுகளில் உருவாக்கப்படும் கட்டுரைகளில் பெரும்பாலானவை, முழுமைப்பெற்றக் கட்டுரைகளாக பதிப்பிடப்படுகின்றன.

இந்திய மொழிகளில், கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில், உருது விக்கிப்பீடியாவிற்கு அடுத்தபடியாக தமிழ் விக்கிப்பீடியா இருக்கிறது. கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, கட்டுரை ஆழத்தின் அளவையும் அதிகரிக்க வேண்டும் எனும் கருத்து தமிழ் விக்கிப்பீடியர்களால் தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகிறது. இந்த எண்ணங்களை ஒன்றிணைத்து, ஆழத்தின் அளவை அதிகரிப்பதற்கான முயற்சிகளை எடுப்பதற்காக இந்தத் திட்டப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் தமிழ் விக்கிப்பீடியாவில் நடைபெற்று வந்தாலும், 'ஆழத்தை அதிகரித்தல்' என்பதுவும் தமிழ் விக்கிப்பீடியாவின் பெருமைக்கு அவசியம். ஏனெனில், ஆழத்தின் அடிப்படையில் ஒப்பீடு நடக்கும்போது, தமிழ் விக்கிப்பீடியா கீழே இறங்கிவிடுகிறது. தொடர் முன்னேற்றமே பெருமைகளை தக்கவைக்க உதவும். முயற்சிகளின் முதல் படியாக, ஆழத்தின் அளவை தொடர்ந்து கவனிக்கும் அட்டவணை திட்டப் பக்கத்தில் இடப்பட்டுள்ளது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:51, 26 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

ஆழம் அதிகரிக்கும் கூறுகள் யாவை[தொகு]

எந்த கருவி இதனைத் தெரிவிக்கிறது? என்னென்ன கூறுகள் இருந்தால் இப்புள்ளி அதிகமாகும்? படம், சான்று எண்ணிக்கை, கட்டுரை அளவு, உட்பிரிவுகள் எண்ணிக்கை, பகுப்பு எண்ணிக்கையும் கணக்கில் வருமா? என அறிய தந்தால் நானும் கற்று, பிறருக்கும் அறிமுகம் செய்து பின்பற்றும் பழக்கத்தினை ஏற்படுத்த இயலும். முடிந்தால் இக்கணிப்பீடு குறித்த ஒரு திரை நிகழ்வு செய்து தந்தால், பைத்தான் போன்ற கட்டற்ற மொழியில் எழுதித் தர கேட்டு பார்க்க விருப்பமாக இருக்கிறேன். உழவன் (உரை) 15:34, 26 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

திட்டப் பக்கத்தின் முதல் பத்தியில் ஒரு இணைப்பு இருக்கிறது. உதவிப் பக்கங்கள் எனும் தலைப்பின்கீழ் இரண்டு இணைப்புகள் உள்ளன. முந்தைய உரையாடல்கள் எனும் தலைப்பின்கீழ் இரண்டு இணைப்புகள் உள்ளன. இவற்றையெல்லாம் படித்துப் பார்த்தால், ஓரளவு புரிந்துகொள்ளலாம். மாணவர்கள் ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு இதில் நிறைய விசயங்கள் உள்ளடங்கியுள்ளன! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:55, 26 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
நன்றி. கற்று, கற்பிப்பேன். உழவன் (உரை) 00:35, 27 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

கட்டுரை ஆழம் - விரிதாள் மூலம் எளிய கணக்கீடு[தொகு]

எளிய கணக்கீடுக்காக விரிதாள் ஒன்றைப் பயன்படுத்தியுள்ளேன். இதனை பதிவிறக்கம் செய்து நீங்களும் ஆராயலாம். இப்போது கணக்கிடுதல் எளிதாகியிருக்கும் என நினைக்கிறேன். என்ன செய்யலாம் என ஆராய்ந்தால், அடுத்த கட்டம் நகரலாம்.

பொதுவான கணக்கீடு
  • தொகுப்புக்களின் எண்ணிக்கை (தொகுப்புக்கள்) = 3907940
  • பக்கங்களின் மொத்த எண்ணிக்கை (மொத்த பக்கங்கள்) = 518360
  • கட்டுரை பக்கங்களின் எண்ணிக்கை (கட்டுரைகள்) = 164650
  • கட்டுரை அல்லாத பக்கங்களின் எண்ணிக்கை (கட்டுரைகள் அல்லாதவை) = மொத்தப் பக்கங்கள் - கட்டுரைகள்

முதலில், கட்டுரை அல்லாத பக்கங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட வேண்டும்.

கட்டுரைகள் அல்லாதவை: 518360−164650=353710

இப்போது, ​​சூத்திரத்தில் மதிப்புகளை இணைக்கலாம்:


எனவே, விக்கிபீடியா கட்டுரையின் ஆழம் சுமார் 34.74 ஆகும்.

@Sridhar G and Selvasivagurunathan m: AntanO (பேச்சு) 20:30, 30 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

விளக்கத்திற்கு நன்றி. எங்களது புரிதல் அடிப்படையில் விவாதித்தோம். அதனைச் சுருக்கமாக இங்கு பதிவிடுகிறேன்.
  • கட்டுரை உருவாக்கத்தினை விட தொகுப்புகளின் எண்ணிக்கையினை அதிகப்படுத்தினால் கட்டுரை ஆழத்திற்கு நேர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தும்.
  • ஒரே கட்டுரையில் அதிக பயனர்கள் பங்கெடுப்பது என்பதனை ஆழத்திற்கு கவனத்தில் கொள்வது இல்லை. ஒருவர் செய்யும் தொகுப்பினை மட்டுமே எடுத்துக் கொள்கிறது.
  • எனவே தொகுப்பு எண்ணிக்கையினை அதிகரிக்கச் செய்வது தொடர்பாக திட்டமிடல் வேண்டும்.
ஐயங்கள்
  • தானியக்கத் தொகுப்புகள், தொகுப்புகள் எண்ணிக்கையில் வருமா? - உறுதிபடுத்தவும்.
  • விக்கித்தரவுத் தொகுப்புகள் (விக்கித்தரவில் இணைத்தல், படிமங்களுக்கு விளக்கம் தருதல் ஆகியன தொகுப்புகள் எண்ணிக்கையில் வருமா? - உறுதிபடுத்தவும்.
  • பகுப்புகள் சேர்த்தல்/ நீக்குதல் ஆகியன தொகுப்புகள் எண்ணிக்கையில் வருமா? - உறுதிபடுத்தவும்.
  • கட்டுரைகள் அல்லாத பக்கங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதுபோல அவற்றில் செய்யப்படும் தொகுப்புகளும் ,மொத்தத் தொகுப்புகள் என்பதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா? - உறுதிபடுத்தவும். --
ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 08:39, 31 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
  • //கட்டுரை உருவாக்கத்தினை விட தொகுப்புகளின் எண்ணிக்கையினை அதிகப்படுத்தினால் கட்டுரை ஆழத்திற்கு நேர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தும்.// - அதாவது ஆழ எண்ணிக்கை குறைவடையும் என்றால் இல்லை.
  • //ஒரே கட்டுரையில் அதிக பயனர்கள் பங்கெடுப்பது என்பதனை ஆழத்திற்கு கவனத்தில் கொள்வது இல்லை. ஒருவர் செய்யும் தொகுப்பினை மட்டுமே எடுத்துக் கொள்கிறது.// - இல்லை, எண்ணிக்கையினை அதிகப்படுத்தினால் போதும்.
  • // தானியக்கத் தொகுப்புகள், தொகுப்புகள் எண்ணிக்கையில் வருமா? // ஆம்
  • // விக்கித்தரவுத் தொகுப்புகள் (விக்கித்தரவில் இணைத்தல், படிமங்களுக்கு விளக்கம் தருதல் ஆகியன தொகுப்புகள் எண்ணிக்கையில் வருமா?// இது விக்கிக்கு வெளியில் எனக்கருதுகிறேன். அப்படியாயின் இல்லை.
  • //பகுப்புகள் சேர்த்தல்/ நீக்குதல் ஆகியன தொகுப்புகள் எண்ணிக்கையில் வருமா? // ஆம்
  • //கட்டுரைகள் அல்லாத பக்கங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதுபோல அவற்றில் செய்யப்படும் தொகுப்புகளும் ,மொத்தத் தொகுப்புகள் என்பதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா? // ஆம்
இதுவும், இது தொடர்பில் உரையாடப்பட்ட இடங்களில் விளங்கிக் கொண்டதன்படி, சரியான பதில் வழங்கியுள்ளேன் என நினைக்கிறேன். ஆயினும் எல்லோருக்கும் புரிதல் ஏற்பட மேலும் விவாதிப்பதில் தவறில்லை. இதனால் நீங்கள், நான் உட்பட்ட பலரும் சரியான புரிதல் ஏற்படும். சிலவேளை நான் விளங்கிக் கொண்டதும் தவறாக இருக்கலாம். AntanO (பேச்சு) 06:32, 6 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
@AntanO: உங்களின் விரிதாள் கணக்கீட்டிற்கு நன்றி. இது குறித்து ஆராய்ந்து வருகிறேன். அத்தோடு, மலையாள விக்கிப்பீடியா 199 எனும் ஆழ அளவை எவ்வாறு பெற்றுள்ளது என்பது குறித்தும் பார்த்து வருகிறேன். ஒப்பிட்டு நோக்கும்போது, உண்மைக் காரணிகளை கண்டறிய இயலும் எனும் எண்ணமே இதற்குக் காரணம். வரும் ஞாயிறு அன்று எனது கருத்துக்களை இங்கு இடுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:59, 3 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
நல்லது. சந்தேகங்கள் இருந்தால் தயங்காது உரையாடுவோம். இன்னுமொரு கருவியை உருவாக்கி முடியும் தருவாயில் உள்ளேன். இன்று அல்லது நாளை அறிவிக்க முடியும். AntanO (பேச்சு) 06:35, 6 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா கட்டுரை ஆழக் கணிப்பான்[தொகு]

Wikipedia Article Depth Calculator - இதன் மூலம் சோதித்துப் பாருங்கள். தற்போது இலகுவாக இருக்கும் என நினைக்கிறேன். கட்டுரைகள் (Number of Articles), தொகுப்புகள் (Number of Edits), மொத்த பக்கங்கள் (Total Pages) என்பற்றில் பெறுமானத்தை அதிகரித்தும், குறைத்தும் உள்ளிட்டு, ஆழத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கவனியுங்கள். தேவைக்கேற்ற தசம எண்/பதின்மத்தை 2 அல்லது 3 ஆக மாற்றிக் கொள்ளலாம். உள்ளீட்டு பெறுமானத்தின் அடிப்படையில், விரும்பும் ஆழத்தை அடைய எவ்வளவு தொகுப்புக்கள் தேவை என்பதையும், அந்த இலக்கை அடைய ஒருநாளில் செய்யும் தொகுப்புக்களின் அடிப்படையில் எவ்வளவு காலம் தேவை என்பதையும் அறியலாம்.

கட்டுரை ஆழம் பக்கத்தில் இதனை வெளி இணைப்பாக இணைத்துள்ளேன். தேவையில்லை என்றால் நீக்கலாம். AntanO (பேச்சு) 08:30, 6 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

த.வி நிலை

இதன்படி தற்போதைய த.வி நிலை:

  • கட்டுரைகள் (Number of Articles) = 164,777
  • தொகுப்புகள் (Number of Edits) = 3,911,863
  • மொத்த பக்கங்கள் (Total Pages) = 518,829
  • ஆழம் = 34.81 / 34.810

ஒரு நாளைக்கு 1,000 தொகுப்புக்கள் என்ற அடிப்படையில் 100 என்ற ஆழத்தை அடைய 7,325,989 மேலதிகமான தொகுப்புக்களும், சுமார் 20 ஆண்டுகளும் தேவை! இங்கு கட்டுரை எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. --AntanO (பேச்சு) 08:40, 6 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]


மலையாள விக்கி தமிழ் விக்கியைவிட 79,324 குறைவான கட்டுரைகளைக் கொண்டுள்ளது. ஆனால், தொகுப்புகள், மொத்த பக்கங்கள் என்பவற்றில் அதிக பங்களிப்புச் செய்துள்ளது. அட்டவணையைக் கவனியுங்கள். --AntanO (பேச்சு) 08:55, 6 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

8 ஏப்பிரல் 2024

இன்று (8 ஏப்பிரல் 2024) த.வி.யின் ஆழம் 34.85 ஆக 0.04 ஆல் (34.85 - 34.81 = 0.04) அதிகரித்துள்ளது. காரணம்: இங்கு வழமைக்கு அதிகமாக சுமார் 3300 தானியங்கி உட்பட்ட தொகுப்புக்கள் செய்யப்பட்டன. --AntanO (பேச்சு) 09:49, 8 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

@AntanO: உங்களின் கணிப்பான் கருவிக்கும், மலையாள விக்கிப்பீடியாவுடனான ஒப்பீட்டிற்கும் நன்றி. @AntanO and Sridhar G: சூத்திரத்தில் எண்களை இட்டு, வருவிக்கும்போது, இறுதியாக இரு எண்களை பெருக்கும்படி அமைகிறது. அந்த இரு எண்களின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வதற்காக, விரிதாள் ஒன்றை உருவாக்கினேன். இதில் trial and error முறையில் முயற்சி செய்து பார்த்ததின் அடிப்படையில் சில கருத்துக்கள்:
  1. வலது பக்கம் உள்ள எண்ணின் மதிப்பை அதிகரிக்க... கட்டுரையல்லாத பக்கங்கள், கட்டுரைப் பக்கங்கள் இவற்றிற்கிடையேயான விகிதம் (ratio) அதிகமாக இருக்கவேண்டும். அதாவது, கட்டுரையல்லாத பக்கங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கவேண்டும். மலையாள விக்கிப்பீடியாவில் அந்த விகிதம் 5.1 என உள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவில் அந்த விகிதம் 2.1 என உள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவிலும் அந்த விகிதம் அதிகரிக்க என்ன செய்யவேண்டும் எனப் பார்த்ததில்... 475,000 கட்டுரையல்லாத பக்கங்களைச் சேர்க்கவேண்டும் (இந்த முயற்சியை விரிதாளில் காணலாம்).
  2. ஆனால், பக்கங்களின் எண்ணிக்கையை மட்டும் அதிகரித்தால்... இடது பக்கம் உள்ள எண்ணின் மதிப்பு குறையத் தொடங்குகிறது. எனவே, மலையாள விக்கிப்பிடியாவின் ஆழத்தை அடைய இயலவில்லை (இந்த முயற்சியை விரிதாளில் காணலாம்). பக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, மொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்பது தெரியவருகிறது.
பொதுவான கருத்துக்கள்:
1) கட்டுரைப் பக்கங்களை வலுப்படுத்தும் வகையில் கட்டுரையல்லாத பக்கங்களை (பகுப்புகள், வார்ப்புருக்கள், உரையாடல் பக்கங்கள்) உருவாக்க வேண்டும் என்பது இந்த ஆழக் கணக்கீடின் முக்கிய நோக்கமாக இருக்குமோ? எனும் எண்ணம் தோன்றுகிறது.
  • அவ்வாறெனில், நாம் ஒப்பிடும் மற்ற மொழி விக்கிப்பீடியாக்களில் இருக்கும் கட்டுரையல்லாத பக்கங்களின் வகைகளை (split) தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் தாய் மொழி விக்கிப்பீடியாவை எடுத்துக்கொண்டால்... கட்டுரைகளின் எண்ணிக்கை ஏறத்தாழ தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நிகரானது. ஆனால், மொத்தப் பக்கங்களின் எண்ணிக்கை இரு மடங்காக உள்ளது (1,078,020). கட்டுரையல்லாத பக்கங்கள் அந்த விக்கிப்பீடியாவில் என்னென்ன உள்ளன என்பதனைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளது.
2) மொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை குறித்த எண்ணம்: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழக ஊராட்சிகள் எனும் திட்டத்தின் கீழ் சுமார் 11,154 கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள் எனும் திட்டத்தின் கீழ் சுமார் 12,043 கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு கட்டுரையின் உருவாக்கமும் ஒரு தொகுப்பு என்பதாகவே கணக்கில் சேரும். இதைத் தவிர்த்து, தமிழ் விக்கிப்பீடியாவில்... அண்மைக் காலங்களில் மொழிபெயர்ப்புக் கருவி கொண்டே பெரும்பாலான கட்டுரைகள் உருவாக்கப்படுகின்றன. இதனாலும் தொகுப்புகளின் எண்ணிக்கை குறைவாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. (என்னுள் தோன்றியவற்றை / அலசியதால் கிடைத்த முடிவுகளை இங்கு தெரிவித்துள்ளேன். இதெல்லாம் காரணிகள். மற்றபடி விமர்சனம் எதுவும் அன்று). நாம் ஒப்பிடும் மற்ற மொழி விக்கிப்பீடியாக்களில் தானியங்கி, மொழிபெயர்ப்புக் கருவி உதவி கொண்டு எவ்வளவு கட்டுரைகள் உருவாக்கப்படுகின்றன எனும் விவரங்கள் கிடைக்குமெனில் அலசிப் பார்ப்பதற்கு உதவும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:41, 8 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]