விக்கிப்பீடியா பேச்சு:எழுத்துப் பெயர்ப்பு முறைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொடர்புடைய ஆ.வி. பக்கங்கள்[தொகு]

-- Sundar \பேச்சு 11:33, 27 ஏப்ரல் 2007 (UTC)

ja,ji,ju,je....[தொகு]

ஜ -- ய, ஜி -- யி, ஜு -- யு, ஜூ -- யி  ?? --Natkeeran 01:39, 28 ஏப்ரல் 2007 (UTC)

நற்கீரன் கூறியது போல வரிசை வடமொழி உச்சரிப்பை வரிசயால் பிரதியிடலாம். எ.கா. ஜப்பான் -->>யப்பான், ஜேர்மனி --->>> யேர்மனி.... ஆனால் ஜாதி--->>சாதி இதை எப்படி தீர்ப்பது. மேலும் செல்வா போன்றோர் வை கொண்டே எழுத முனைகிறார்கள் எ.கா. சப்பான்...--டெரன்ஸ் \பேச்சு 02:34, 28 ஏப்ரல் 2007 (UTC)

டெரன்ஸ், ஜ-வரிசை ஒலிகள் வடமொழிக்கு மட்டும் சொந்தமானது இல்லை. தமிழிலும் உண்டு (ஆனால் தமிழ் முறைக்கு மாறான வழிகளிலும் பிற மொழிகளில் வரும்). ஜ-வரிசையை ச-வரிசையாக எழுத்துப் பெயர்ப்பதே தமிழகத்தில் வழக்கமாக உள்ளது. ஜகன்னாதன் -> சகன்னாதன், ஜோதி -->சோதி, ஜன்னல் -> சன்னல். எனவே, ஜ-வரிசைக்கு நெருக்கமான எழுத்து வரிசை ச-வரிசைதான் (தமிழக வழக்கத்தில்). எல்லா இடத்திலும் ஈடாக இடவும் முடியும். ஜார்ஜ், ஜேக்கப், ஜெர்மனி முதலியவற்றை சார்ச்சு (சியார்ச்சு), சேக்கப்பு, செருமனி என்றெல்லாம் எழுதலாம்., ஆனால் இன்றைய நிலையில் ஜ-வரிசையை ஜ-வரிசையாக எழுதுவதே பலரும் விரும்புகிறனர். இதற்காகத்தான் ஜவை ' என்று எழுத பரிந்துரைத்தேன். என் வலைப்பதிவைப் பாருங்கள். இம்முறையில் எளிதாக மேலும் பல எழுத்தொலிகளைப் பெறலாம்.--செல்வா 03:03, 28 ஏப்ரல் 2007 (UTC)

வலைப்பதிவைப் பார்த்தேன் நல்லக் கருத்துக்கள். இதைப்பற்றி நீங்கள் தவி யிலும் உரையாடிய ஞாபகம் உள்ளத்து.அதை இங்கு நகர்த்தினால் பொருத்தமாக இருக்கும். இலங்கை வழக்கில், இராஜ்ஜியம்---->இராச்சியம், ராஜா--->>ராசா போன்றவற்றை கொண்டு எழுதும் அதேவேலை யப்பான் போன்ற எதிர்மாறான முறைகளும் காணப்படுகின்றன. எனது கருத்துப்படி விதி சிக்கலற்றதாக இருக்க வேண்டும். இலங்கை முறைச் சற்று சிக்கலானது, இடத்துக்கிடம் முரண்பாடுகளைக் கொண்டது போல தோன்றுகிறது. வரிசையக் வரிசைக் கொண்டே எழுதலாம் என்பது என் கருத்து.