விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்)/தொகுப்பு10

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உள்ளடக்க மொழிபெயர்ப்பில் மேற்கோள் சிக்கல்[தொகு]

தற்போது உள்ள மேம்படுத்தப்பட்ட உள்ளடக்க கொழிபெயர்ப்பு பக்கத்தில் கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிடும்போது தமிழில் கட்டுரை வெளியாகும்போது மேற்கோள்களானது வழுவுடன் தோன்றுகிறது. இதனால் அவற்றை அழித்துவிட்டு ஆங்கிலக் கட்டுரையில் உள்ள மேற்கோள்களை புதியதாக வெட்டி ஒட்டவேண்டியுள்ளது. இதுபோன்ற சிக்கல் யாருக்கவது உள்ளதா. இதை சரிசெய்ய இயலுமா.--அருளரசன் (பேச்சு) 05:59, 6 சனவரி 2019 (UTC)[பதிலளி]

பொதுவாக மேற்கோள்கள் ஒருமுறை சுட்டிக்காட்டிவிட்டு அதன் பெயரையே பின்னர் மேற்கோளாகப் பயன்படுத்தப்படுகிறது. அவ்வகையில் நீங்கள் காட்டிய இடங்களில் name="diamonddivas" name="timesindia" என்பது பெயர்கள், அதற்குமுன் அந்த மேற்கோள் அப்பக்கத்தில் சுட்டிக்காட்டினால் தான் செயல்படும். கூடுமானவரை மொழிபெயர்க்கையில் அனைத்து மேற்கோள்களையும் அப்படியே வைத்திருந்தால் இச்சிக்கலைத் தவிர்க்கலாம் என நினைக்கிறேன் -நீச்சல்காரன் (பேச்சு) 09:30, 6 சனவரி 2019 (UTC)[பதிலளி]

\\\கூடுமானவரை மொழிபெயர்க்கையில் அனைத்து மேற்கோள்களையும் அப்படியே வைத்திருந்தால் இச்சிக்கலைத் தவிர்க்கலாம் என நினைக்கிறேன்\\\ நீச்சல்காரன் இந்தக் கட்டுரையில் அனைத்து மேற்கோள்களையும் அப்படியேதான் வைத்துள்ளேன். இதன் பக்க வரலாற்றைக் கண்டாலே தெரியும்.--அருளரசன் (பேச்சு) 09:46, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Arularasan. G: முதல் வரிசையில் உள்ள ref name="timesindia" என்ற மேற்கோள் கட்டுரையின் பிறிதொரு பகுதியிலேயே முழுமையாகத் தரப்பட்டுள்ளது. இதனாலேயே இப்பிரச்சினை வருகிறது என நினைக்கிறேன். முதலாவதலேயே முழுமையாகத் தந்திருந்தால் சரியாக வரலாம்.--Kanags (பேச்சு) 10:13, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]

18:29, 7 சனவரி 2019 (UTC)

வார்ப்புரு பயன்பாட்டு எண்ணிக்கை[தொகு]

ஒரு வார்ப்புரு எத்தனை கட்டுரைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியவும், அக்கட்டுரைகளின் பெயர்களை பெறவும் கருவியுண்டா? --உழவன் (உரை) 14:20, 11 சனவரி 2019 (UTC)[பதிலளி]

அந்த வார்ப்புரு பக்கம் சென்று இப்பக்கத்தை இணைத்தவை என்று பக்கத்தின் இடது பக்கம் ஒரு இணைப்பு இருக்கும் அதன் மூலம் அறியலாம். அவ்வாறு இல்லாமல் பொதுவாகக் கண்டுபிடிக்க இந்த மாதிரியைப் பயன்படுத்தலாம். https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:WhatLinksHere/<வார்ப்புருவின் பெயர்> இந்த முறையில் பெறலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 14:25, 11 சனவரி 2019 (UTC)[பதிலளி]
நன்றி. ஆனால், குறிப்பிட்ட ஒரு வார்ப்புரு, பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்துக் கட்டுரைகளின் பெயர்களை எடுக்க என்ன செய்ய வேண்டும்?--உழவன் (உரை) 14:46, 11 சனவரி 2019 (UTC)[பதிலளி]
petscan வழியே எடுக்கலாமென்று @Balajijagadesh: எங்களிடையே நடந்த டெலிகிராம் உரையாடலில் வழிகாட்டினார். நன்றி.--உழவன் (உரை) 03:52, 26 சனவரி 2019 (UTC)[பதிலளி]