வலைவாசல்:சைவம்/தகவல்கள்/1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீனாட்சியம்மன் கோவில்,மதுரை
மீனாட்சியம்மன் கோவில்,மதுரை
  • கட்வங்கம் என்பது சிவபெருமானுடைய ஆயுதங்களில் ஒன்றாகும். இந்த ஆயுதம் எலும்பினால் செய்யப்பட்ட தண்டுப்பகுதியையும், முன்பக்கத்தில் மண்டையோட்டினையும் பெற்று காணப்படுகிறது.
  • ஆதிலட்சுமிக்கும், குபேனனுக்கும் செல்வங்களை வழங்கிய சிவபெருமானின் வடிவம் சுவர்ண ஆகர்ஷன பைரவர் என்று வழங்கப்படுகிறது. சுவர்ண ஆகர்சன பைரவர் என்றால் பொன்னை இழுத்துத் தரும் பைரவர் என்று பொருளாகும்.
  • மங்கையர்க்கரசியார் மற்றும் குலச்சிறையார் என்ற இருவர் மட்டுமே பாண்டிய நாடு முழுவதும் சமண இருள் சூழந்திருந்த போதும், சைவ மதத்தில் இருந்தார்கள்.
  • பாற்கடலை கடையும் பொழுது தோன்றிய ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை சுற்றிய விதத்தினை சோம சூக்தப் பிரதட்சணம் என்கின்றனர்.
  • மதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் பற்றி ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் வடமொழி நூலில் சொல்லப்பட்டுள்ளது.
  • மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலுள்ள நடராசர் சன்னிதி வெள்ளியம்பலம் என அறியப்பெறுகிறது.