வயல்வெளிப் பதிப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


வயல்வெளிப் பதிப்பகம் தமிழ் நாட்டில் அரியலூர் மாவட்டம், இடைக்கட்டு என்னும் ஊரில் செயல்படும் ஒரு தமிழ்ப் பதிப்பகம். தமிழ் நூல்களை வெளியிடும் நோக்கில் இப்பதிப்பகம் தொடங்கப்பட்டது. ”மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்” என்னும் தலைப்பிலான நூலை முதன்முதல் வெளியிட்ட இப்பதிப்பகம் பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளது. விடுதலைப் போராட்ட வீரர் வெ. துரையனார் அடிகள் (தன்வரலாறு), பொன்னி ஆசிரிய உரைகள், பொன்னி பாரதிதாசன் பரம்பரை, மணல்மேட்டு மழலைகள், பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு, வாய்மொழிப்பாடல்கள், நாட்டுப்புறவியல், அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் உள்ளிட்ட நூல்கள் இப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.[தொகு]

வயல்வெளிப் பதிப்பகம் வெளியிட்டுள்ள முனைவர் மு. இளங்கோவன் நூல்கள்

1.    மாணவராற்றுப்படை (1990)

2.    பனசைக்குயில் கூவுகிறது (1991)

3.    அச்சக ஆற்றுப்படை (1992)

4.    மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் (1994)

5.    விடுதலைப் போராட்ட வீரர் வெ. துரையனார் அடிகள்(1995)

6.    பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு(1996)

7.    இலக்கியம் அன்றும் இன்றும் (1997)

8.    மணல்மேட்டு மழலைகள் (1997)

9.    வாய்மொழிப் பாடல்கள் (2001)

10.  பாரதிதாசன் பரம்பரை (2001)

11.  பழையன புகுதலும் (2002)

12.  அரங்கேறும் சிலம்புகள்(2002)

13.  பொன்னி பாரதிதாசன் பரம்பரை (2003)

14.  பொன்னி ஆசிரியவுரைகள் (ப.ஆ.) (2004)

15.  நாட்டுப்புறவியல் (2006)

16.  அயலகத் தமிழறிஞர்கள் (2009)

17.  கட்டுரைக் களஞ்சியம்(2013)

18.  செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்(2013)

19.  இணையம் கற்போம்(2016)

20.  தொல்லிசையும் கல்லிசையும் (2019)

21.  இசைத்தமிழ்க் கலைஞர்கள் – நோக்கீட்டு நூல் (2022)

"https://ta.wikipedia.org/w/index.php?title=வயல்வெளிப்_பதிப்பகம்&oldid=3804352" இலிருந்து மீள்விக்கப்பட்டது