விக்கிப்பீடியா:வழிமாற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குறுக்கு வழி:
WP:R or WP:RDR

விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரைப் பக்கத்தைத் திறக்கும் போது தானியக்கமாக இன்னொரு பக்கத்துக்குச் செல்லும் படி செய்தல் “வழிமாற்று”தல் அல்லது “மீள்வழி” ப் படுத்துதல் எனப்படுகிறது.

எப்படி செய்வது[தொகு]

ஒரு பக்கத்தை இரண்டாம் பக்கத்துக்கு வழிமாற்ற முதல் பக்கத்தில் உள்ளடக்கங்களை அழித்து விட்டு பின்வரும் நிரல்துண்டை இடவேண்டும்

#REDIRECT [[இரண்டாம் பக்கத்தின் தலைப்பு]]

அல்லது

#வழிமாற்று [[இரண்டாம் பக்கத்தின் தலைப்பு]]

எ.கா. “தமிழகம்” என்ற பக்கத்தை “தமிழ்நாடு” என்ற பக்கத்துக்கு வழிமாற்ற வேண்டுமென்றால், “தமிழகம்” பக்கத்தில் பின்வரும் நிரல் துண்டை இட வேண்டும்:

#வழிமாற்று [[தமிழ்நாடு]]

எதற்காக பயன்படுத்தலாம்[தொகு]

வழிமாற்றுகளை பின்வரும் காரணங்களுக்காகப் பயன்படுத்தலாம்

  • ஒரே கட்டுரைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தலைப்புகள் பொருத்தமானவையாக உள்ள போது
  • ஒரு கட்டுரையின் தலைப்புக்குக்கு குறுக்கங்கள் உள்ள போது
  • ஒரு கட்டுரை தலைப்புக்கு தமிழில் ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துப்பெயர்ப்புகள் உள்ள போது
  • விக்கிப்பீடியா கொள்கை மற்றும் திட்ட பக்கங்களுக்கு குறுக்குவழிகள் ஏற்படுத்த

எதற்கு பயன்படுத்தக் கூடாது[தொகு]

  • தமிழ் தவிர பிற மொழி எழுத்துகளில் தலைப்புகளை உருவாக்க (குறுக்குவழி பக்கங்கள் இதற்கு விதிவிலக்கு)
  • ஒரு சொல்லின் விகுதிகள் சேர்ந்த வடிவங்களுக்கு, எ.கா “தமிழ்நாட்டில்” என்ற தலைப்பில் “தமிழ்நாடு” பக்கத்துக்கு, வழிமாற்று உருவாக்கக் கூடாது. இதற்கு பதில் கட்டுரைகளில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] என்று பயன்படுத்த வேண்டும்.
  • நேரடித் தமிழ்ச் சொற்களுக்கான பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதி வழிமாற்றக்கூடாது. எடுத்துக்காட்டு: ஃபிஷ். விதிவிலக்கு: தனித்தமிழ் இயக்கத் தாக்கத்துக்கு முன்பு தமிழரிடையே வழக்கில் இருந்த வடமொழி, ஆங்கிலம் அல்லா பிறமொழிச் சொற்கள்.

தொடர்புடைய தலைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

meta:redirect - மீடியாவிக்கி மென்பொருளில் வழிமாற்றுகள் பற்றி அறிந்து கொள்ள