வனீசா அஹமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வனீசா அகமது அலி, (Vaneeza Ahmad Ali) ஒரு பாகிஸ்தான் மாடல் மற்றும் நடிகை ஆவார். வின்னி என்பது இவரது செல்லப்பெயர் ஆகும். இவர், ஜூன் 29, 1971இல் பிறந்தார். மேலும், பாக்கிஸ்தானில் மிகவும் பிரபலமான மற்றும் விரும்பப்பட்ட [1] பெண் மாடல் மற்றும் நடிகையாக வனீசா அஹமது புகழ் பெற்றார். ஆரம்பத்தில் உளவியலில் பட்டம் பெற்று மருத்துவத்தில் ஆர்வம் கொண்ட இவர், வடிவழகு தொழிலில் ஒரு சாதாரண பொழுதுபோக்கிற்காக சேர்ந்தார். பாக்கிஸ்தானின் சில முன்னணி நிறுவனங்களின் முகமாக மாறினார். இவர் ஜூலை 2010 இல் பாகிஸ்தான் தொழிலதிபர் அலி அப்சல் மாலிக் என்பவரை மணந்தார். இவருக்கு இனயா மற்றும் சோபியா ஜஹான் அலி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

சுயசரிதை[தொகு]

வனீசா அஹமது, பாகிஸ்தானின் முர்ரேயில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். ஆனால் பின்னர் அவர் தனது பெற்றோருடன் ஜெர்மனி சென்றார். அங்கு, உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது மருத்துவத்தில் சேரும்படி அவருடைய பெற்றோரால் அழுத்தம் கொடுக்கப்பட்டார். மேலதிக மருத்துவம் படிக்க அவர் தனது 18 வது, வயதில் பாகிஸ்தானுக்கு திரும்பவிருந்தார்; ஆனால், அவரது திட்டங்கள் முறியடிக்கப்பட்டன, மேலும் அவர் லாகூரில் உள்ள கின்னெய்ட் கல்லூரியில் சேர முடிவு செய்தார்.[2]

அவரது ஆர்வங்கள் இன்னும் மருத்துவத்தின் மீது இருந்த நிலையில், அவர் கின்னார்ட் கல்லூரியில் உளவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். கல்லூரியில் சிறிது காலம் தங்கியிருந்தபோது, அவர் சாதாரணமாக விளம்பர மாதிரியாக நடிக்கத் தொடங்கினார்.[2] தொழில் விருப்பமாக வடிவழகு செய்வதில் அதிக ஆர்வம் காட்டாத அவர், பல்வேறு ஆடை வடிவமைப்பாளர்களின் சலுகைகளுடன் மேடை ஏறினார். அவற்றில், பாக்கிஸ்தானிய நவீன ஆடைகள் துறையில் குறிப்பிடத்தக்க நவீன ஆடை வடிவமைப்பாளர் நிலோஃபர் ஷாஹித் போன்றவர்கள் உட்பட பலர் இவருக்கு வாய்ப்பளித்துள்ளனர்.

அவர் 2010 இல் தொழிலதிபர், அலி அப்சல் மாலிக் என்பவரை மணந்தார். அவர் சில நேர்காணல்களைக் கொடுத்துள்ளார், அதில், தனது கணவரும் அவரும் ஒருவருக்கொருவர் உருவாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். 90 களின் முற்பகுதியிலிருந்து லாகூரில் அவர் கணவரைப் பற்றி அறிந்திருந்தார். அவரது கணவர், அமெரிக்காவிற்குச் செல்ல புறப்பட்டபோது மனம் உடைந்தார். அவர் 2009 இல் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தார். அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி ஒருவருக்கொருவர் மயக்கப்படுவதாக அறியப்படுகிறது. அவர்கள் 2012 இல் பெற்றோரானார்கள்.

வடிவழகு ஒரு தொழிலாக[தொகு]

நிலோஃபர் வனீசாவை அணுகியபோது, எந்தத் தொழிலைத் தொடர வேண்டும் என்று தெரியாமல், நவீன வடிவழகு துறையில் தடம் பதித்தார். நவீன ஆடை அலங்கார நிகழ்ச்சிகளில், விமர்சகர்கள் அவரது பூனை-நடைப்பயணத்தில் அவரது நேர்த்தியைப் பாராட்ட வழிவகுத்தன. பொழுதுபோக்கு துறையின் கார்ப்பரேட் தலைவர்களுடன் கையாள்வதில், அவரது வணிக புத்திசாலித்தனம் இதேபோல் பாராட்டப்பட்டது.[2][3]

வனீசா, பிராண்ட்[தொகு]

சமீபத்தில் வனீசா தனது சொந்த தயாரிப்பில் வெளியிட்ட ஆடை ரகங்களுக்கு 'விலான்' [4] என்ற பிராண்ட் பெயரைக் கொடுத்தார், மேலும் இந்த பெயர், நவீன ஆடைகளில் ஆர்வமுள்ள பொதுமக்களிடையே மிகைப்படுத்தலை உருவாக்கியது. இந்த தொகுப்பில் வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட ஒன்பது வெவ்வேறு ஆடை அச்சிட்டுகள் இருந்தன, அதில் நோமி அன்சாரி, உமர் சயீத் மற்றும் ஹசன் ஷெஹார் யாசின் ஆகியோர் அடங்குவர்.[5] மார்ச் 2006 இல், இதன் தொகுப்பு தொடர்ச்சியான கண்காட்சிகளில் விற்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில், வனீசா தனது "விலான்" பெண்களுக்கான ஆடை வடிவமைப்புகளைத் தொடங்கினார். இதன் புதிய கண்காட்சி அனைத்து வயது பெண்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது பாகிஸ்தானின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் வரும் என்று கருதப்படுகிறது.

நடிப்பு மற்றும் பாராட்டு[தொகு]

ஜமால் ஷாவின் சர்ச்சைக்குரிய சாகா கல் படத்தில் வனீசா அஹமது அறிமுகமானார், பின்னர் மெரினா கானின் டும் ஹாய் தௌ ஹோ, ஜானி அஞ்சனே மற்றும் தும் சே மில் கெர் ஆகியவற்றில் நடித்தார் ; அர்மான் ; மற்றும் தலாஷ் . பாக்கிஸ்தானின் முகமது அலி ஜின்னாவின் மகள் டினா வாடியாவின் ஜமீல் டெஹ்லவியின் 1998 வாழ்க்கை வரலாற்றான ஜின்னாவில் அவர் நடித்தார் [6][7][8]

ஏப்ரல் 16, 2008 அன்று, இஸ்லாமாபாத்திற்கு ஒலிம்பிக் தீச்சுடர் வந்தபோது ஒலிம்பிக் தீச்சுடர் தாங்கிகளில் ஒருவராக வனீசா அகமது தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட 66 பேரில் ஓடுதளத்தில் ஜோதியை வைத்திருந்த சில தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபலங்களில் [9][10] அவர் ஒருவராக இருந்தார்.[11]

குறிப்புகள்[தொகு]

  1. "Vaneeza Ahmad: Catty and Tricky". Author's Den. Archived from the original on 2011-06-08. பார்க்கப்பட்ட நாள் 2008-06-17.
  2. 2.0 2.1 2.2 "Page 3 Bollywood: Vaneeza Ahmad". WordPress. பார்க்கப்பட்ட நாள் 2008-06-17.
  3. "The A-to-Z of fashion". DAWN Newspaper. Archived from the original on 2008-08-14. பார்க்கப்பட்ட நாள் 2008-08-17.
  4. "Vaneeza: Biography". Archived from the original on 2008-05-31. பார்க்கப்பட்ட நாள் 2008-06-18.
  5. "Vaneeza Ahmad on Marina Mornings". VidPK. Archived from the original on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2008-06-18.
  6. "Vaneeza Ahmad in Jinnah". Bollywood Sargam. Archived from the original on 2019-12-03. பார்க்கப்பட்ட நாள் 2008-06-18.
  7. http://www.newslinemagazine.com/2009/07/interview-iraj-manzoor/[தொடர்பிழந்த இணைப்பு]
  8. http://dawn.com/2012/09/24/iraj-manzoor-fashions-tempestuous-siren/
  9. "Olympic Torch Relay gets underway in Pakistan". Daily Excelsior. Archived from the original on 2008-12-01. பார்க்கப்பட்ட நாள் 2008-06-18.
  10. "Sports Update: Pakistan torch bearers for Olympics named". DAWN Newspaper. பார்க்கப்பட்ட நாள் 2008-06-18.
  11. "Olympic torch comes to Pakistan after 44 years". All Things Pakistan. பார்க்கப்பட்ட நாள் 2008-06-18.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வனீசா_அஹமது&oldid=3843414" இலிருந்து மீள்விக்கப்பட்டது