லிட்டில் பாய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சின்னப் பையன் (அணுகுண்டு) Little Boy |
|
|---|---|
|
போருக்குப் பின்னரான "சின்னப் பையன்" அணுகுண்டின் மாதிரி |
|
| வகை | அணு ஆயுதம் |
| அமைக்கப்பட்ட நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| அளவீடுகள் | |
| எடை | 8,818.49 இறா. 4,000 கிகி |
| நீளம் | 9.84 அடி 3.0 மீ |
| விட்டம் | 2.3 அடி 0.7 மீ |
|
|
|
| வெடிப்பின் விளைவு | 13 முதல் 16 கிலோதொன் |
லிட்டில் பாய் (ஆங்கிலம்: Little Boy; சின்னப் பையன்) என்பது ஜப்பான் நகரான ஹிரோசிமா மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 இல் ஐக்கிய அமெரிக்காவினால் வீசப்பட்ட அணுகுண்டிற்கு இடப்பட்ட பெயர் ஆகும். இது அமெரிக்காவின் வான்படை விமானியான போல் டிபெட்ஸ் என்பவரால் எனோலா கே (Enola Gay) என்ற பி-29 ரக விமானத்தில் இருந்து வீசப்பட்டது[1]. இதுவே ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட முதலாவது அணுகுண்டாகும். இது வீசப்பட்டு மூன்றாவது நாளில் "கொழுத்த மனிதன்" என்ற பெயரில் இரண்டாவது அணுகுண்டு நாகசாக்கி நகர் மீது வீசப்பட்டது[2].
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ லிட்டில் பாய் என்ற பெயர் முன்னாள் அதிபர் ரூஸ்வெல்ட்டைக் குறீப்பதாக பிபிசியின் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
- ↑ ஹக்கீம், ஜோய் (1995). அமெரிக்க வரலாறு: போர், அமைதி மற்றும் அனைத்து ஜாஸ். நியூயோர்க்: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அச்சகம். ISBN 0-19-509514-6.
வெளி இணைப்புகள் [தொகு]
- ஹிரோஷிமா அணுகுண்டு
- சின்னப் பையன் பற்றிய விபரங்கள் - (ஆங்கிலத்தில்)
- எனோலா கே வரலாறு - (ஆங்கிலத்தில்)