றோசா பாக்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்டின் லூதர் கிங்குடன், 1955
றோசா பாக்ஸ் (தமிழ் நாட்டு வழக்கு:ரோசா பார்க்ஸ்) (Rosa Parks, பெப்ரவரி 4, 1913 - அக்டோபர் 24, 2005) ஒர் ஆபிரிக்க அமெரிக்க குடியுரிமைகள் செயற்பாட்டாளர். நவீன குடியுரிமை இயக்கத்தின் தாய் என ஐக்கிய அமெரிக்க காங்கிரசால் அழைக்கப்பட்டவர்.
1955 டிசம்பர் 1 இல் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு வெள்ளைப் பயணிக்காக ஆசனத்தைத் தர மறுத்தார். இதற்காகக் கைது செய்யப்பட்டார். இந் நிகழ்ச்சி இனப் பாகுபாட்டுக்கு எதிரான இயக்கத்தைத் தோற்றுவித்தது.
வெளி இணைப்பு [தொகு]