ரசக்கார் (பாக்கித்தான்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரசக்கார்
செயற் காலம்1971
நாடுபாக்கித்தான் பாக்கித்தான் (1971)
பற்றிணைப்புபாக்கித்தான்
வகைஉள்ளகப் பாதுகாப்பு, சட்டச் செயலுறுத்தம்
அளவு30,000–40,000
அரண்/தலைமையகம்குல்னா, வங்காளதேசம்
சுருக்கப்பெயர்(கள்)இரசக்கார் வாகினி
சண்டைகள்வங்காளதேச விடுதலைப் போர்
தளபதிகள்
குறிப்பிடத்தக்க
தளபதிகள்
AKM Yusuf

இரசக்கார் (அரபு மொழி: رضا کار‎,உருது: رضاکار, பொருள்: "தன்னார்வலர்"; வங்காள மொழி: রাজাকার) கிழக்குப் பாக்கித்தானில்,(தற்போதைய வங்காள தேசம்), பாக்கித்தான் இராணுவத்தால் 1971இல் வங்காளதேச விடுதலைப் போரின் போது ஒருங்கிணைக்கப்பட்ட கிழக்குப் பாக்கித்தானின் துணைப்படை அமைப்பாகும். இது முதன்மையாக தானாக உருவான முக்தி வாகினிக்கு எதிராக எழுப்பப்பட்டது. இதன் உறுப்பினர்களாக பாகித்தானை ஆதரிக்கும் வங்காளிகள், கிழக்கு பாகித்தானிய பீகாரிகள் இருந்தனர். இவர்களுடன் ஜமாத்தே இஸ்லாமியின் அல் பதர், பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக், நாட்டு இஸ்லாமிய கட்சிகளின் அல் ஷம்ஸ் மூவரும் இணைந்து வங்காளதேச மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் காரணமாக இவற்றின் மீது நீதிமன்ற நடவடிக்கைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் தற்கால வங்காள தேசத்தில் இந்தச் சொல் அவமதிக்கும் சொல்லாக (நாட்டைக் காட்டிக் கொடுப்பவர் என்ற பொருளில்) பயன்படுத்தப்படுகின்றது.

உருவாக்கம்[தொகு]

கிழக்குப் பாக்கித்தான் இரசக்கார்கள் அவசரச் சட்டத்தை 2 ஆகத்து 1971இல் கிழக்கு பாக்கித்தான் ஆளுநர் லெப்.ஜெனரல் டிக்கா கான் வெளியிட்டார்.[1] இந்த சட்டம் மாகாண அரசால் தன்னார்வல துணைப்படையை உருவாக்கிக் கொள்ளவும் பயிற்சி அளிக்கவும் வழி வகுத்தது. வங்காள தேச விடுதலைக்காகப் போராடிய மக்கள் புரட்சியை அடக்கிட அரசுப் படைகளுக்குத் துணையாக இப்படை எழுப்பப் பட்டது. பாக்கித்தானிற்கு ஆதரவளித்த நூருல் அமின், குலாம் ஆசாம், குவாஜா கைருதின் போன்ற தலைவர்கள் அடங்கிய அமைதிக் கமிட்டி இவர்களை ஆளெடுப்பு செய்ததாகக் கூறப்படுகின்றது.[2] ஜமாத்-இ-இசுலாமி அமைப்பிலிருந்து 96 பேர் முதலில் சேர்ந்தனர். இவர்களுக்கு குல்னாவில் ஷாஜகான் அலி சாலையில் இருந்த அன்சார் கேம்ப்பில் இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது.[3]

வங்காளதேச[ விடுதலைக்கு முந்தைய இனப்படுகொலையின் போது பாக்கித்தானியப் படைகளும் ஆதரவான குடிப்படைகளும் (இரசக்கார்) 300,000 முதல்[4] 3,000,000 பேர் வரை கொன்றதாக மதிப்பிடப்படுகின்றது. தவிரவும் 200,000–400,000 வங்காளப் பெண்கள் திட்டமிடப்பட்ட இனவழிப்பு வன்கலவியில் வன்கலவி செய்யப்பட்டனர்.[5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The East Pakistan Razakars Ordinance, 1971, An Ordinance" (PDF). The Dacca Gazette Extraordinary. 2 August 1971. Archived from the original (PDF) on 4 October 2013. பார்க்கப்பட்ட நாள் 10 February 2013 – via International Crimes Strategy Forum.
  2. The Wall Street Journal, 27 July 1971; quoted in the book Muldhara 71 by Moidul Hasan
  3. "Razakar was launched with 96 Jamaat men". The Daily Star. 31 October 2012. http://www.thedailystar.net/news-detail-255595. 
  4. "Bangladesh war: The article that changed history". BBC News. 25 March 2010. https://www.bbc.com/news/world-asia-16207201. 
  5. Sharlach, Lisa (2000). "Rape as Genocide: Bangladesh, the Former Yugoslavia, and Rwanda". New Political Science 22 (1): 92–93. doi:10.1080/713687893. 
  6. Sajjad, Tazreena (2012). "The Post-Genocidal Period and its Impact on Women". in Totten, Samuel. Plight and Fate of Women During and Following Genocide. Transaction. பக். 225. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4128-4759-9. 
  7. White, Matthew, Death Tolls for the Major Wars and Atrocities of the Twentieth Century
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரசக்கார்_(பாக்கித்தான்)&oldid=3271523" இலிருந்து மீள்விக்கப்பட்டது