யூரி பெல்துமேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யூரி பெல்துமேன் (Uri Feldman) அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஓர் இயற்பியலாளராவார். அமெரிக்க கடற்படை ஆராய்ச்சி ஆய்வகத்தில் இவர் பணிபுரிகிறார். 2000 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் பிளாசுமா இயற்பியல் பிரிவில் பரிந்துரைத்த காரணத்தால் அமெரிக்க இயற்பியல் சமூகத்தில் [1] பெல்துமேனுக்கு உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டது. [2] மிகவும் கிளர்வடைந்த தனிமங்களின் அணு கட்டமைப்பை ஆய்வு செய்வதற்கான அசல் பங்களிப்பு, அவதானிப்புகளை நடத்துவதற்கான மேம்பட்ட கருவிகளின் வளர்ச்சி மற்றும் அதன் விளைவாக வரும் தரவுகளின் பகுப்பாய்வு மற்றும் விளக்கம்; சூரியனின் வளிமண்டலத்தில் ஆற்றல்மிக்க செயல்முறைகளை ஆய்வு செய்வதற்கு மிகவும் கிளர்வடைந்த தனிமங்களின் இயற்பியலைப் பயன்படுத்தியது போன்றவை யூரி பெல்துமேனுக்கு அமெரிக்க இயற்பியல் சமூகத்தில் உறுப்பினர் தகுதியை பெற்றுத்தர காரணமாக இருந்தன. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "APS Fellow Archive". www.aps.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-20.
  2. "APS Fellowship". www.aps.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-20.
  3. "APS Fellows 2000". www.aps.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரி_பெல்துமேன்&oldid=3169013" இலிருந்து மீள்விக்கப்பட்டது