யாங் லிபிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாங் லிபிங்
ஒரு நடன நிகழ்வில் யாங்கின் மயில் நடனம்
பிறப்புநவம்பர் 10, 1958 (1958-11-10) (அகவை 65)
வென் குயாங் கிராமம்,சிபுகு நகரம்,யுனான் மாகானம்
தேசியம்சீனர்
படித்த கல்வி நிறுவனங்கள்மின்சு பல்கலைக்கழகம், சீனா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1971 முதல் தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
Liu Yuqing (தி. 1995)
Chinese name
பண்டைய சீனம்
நவீன சீனம்

யாங் லிபிங் (எளிய சீனம்: 杨丽萍பின்யின்: Yánglí Píng பிறப்பு 10 நவம்பர் 1958) ஒரு சீன நடனக் கலைஞர் மற்றும் கிழக்காசிய பாய் மரபினத்தைச் சோ்ந்த நடன இயக்குனர் ஆவார். அவர் தனது படைப்பாற்றல் மற்றும் டாய் மயில் நடனத்தின் நடிப்பால் சீனா முழுவதும் மிகவும் பிரபலம் வாய்ந்தவராக அறியப்படுகிறார். யாங் "சீனாவின் மயில் இளவரசி" என்ற புனைப்பெயரில் அழைக்கப்படுகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம்[தொகு]

யாங் 1958 ஆம் வருடம் நவம்பர் 10 ஆம் தேதி யுன்னான் மாகாணத்தில் டாலியின் சிபுகு நகரத்தின் வென் கியாங் கிராமத்தில் பிறந்தார். .அவருடன் பிறந்த நான்கு குழந்தைகளில் மூத்தவர் ஆவார். பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி பாய் இன சிறுபான்மையினராவர். இவா்கள் அருகிலுள்ள கிராமத்தில் விவசாயிகளாக பணிபுரிந்தனர். அவரது பாட்டி கிராமத்தில் ஒரு பாடகியாக இருந்தார். [1]

தொழில்[தொகு]

யாங்கின் குடும்பத்தினர் யுன்னான் பகுதிக்குச் சென்ற பிறகு யாங் முறையான நடனப் பயிற்சியை 11 வயதின் பிற்பகுதியில், யுன்னானின் ஜிஷுவாங்பன்னா பகுதியில் உள்ள ஒரு நடனக் குழுவில் தொடங்கினர். யுன்னானின் தெற்கு சமவெளி நிலங்களில், ஷிஷுவாங்பன்னா பர்மா நாட்டின் எல்லையாக உள்ள இந்த பகுதியில் டேய் இனக்குழு ஆதிக்கம் செலுத்துகிறது, அவா்களின் மயில் நடனம் யாங்கிற்கு ஒத்ததாக இருத்தது.. தனது 20 களின் முற்பகுதியில், அவர் மத்திய தேசிய பாடல்களுக்கு ஆடும் நடனக் குழுவுடன் நடனமாட தலைநகர் பெய்ஜிங்கிற்குச் சென்றபின், மயில் நடனத்தை தனது சொந்தமான பாணியாக மாற்றிக் கொண்டார், அதன் சில பகுதிகளை நேர்த்தியான கை மற்றும் விரல் அசைவுகளுடன் மறு உருவாக்கம் செய்தார். 1986 ஆம் ஆண்டில், அந்த நடனம் ஒரு தேசிய அளவிலான நடனப் போட்டியில் முதல் பரிசை வென்றது. [1]

1986 ஆம் ஆண்டில் அவர் தனது அசல் தனிப்பாடலான "மயில் சுழல்" (雀 之 for) க்கான தேசிய நடனப் போட்டியில் முதல் பரிசை வென்றபோது தேசிய அளவில் புகழ் பெற்றார். அப்போதிலிருந்து, அவர் "மயில் இளவரசி" என்ற புனைப்பெயரிட்டு அழைக்கப்படுகிறார். மேலும் "டைனமிக் யுன்னன்" என்ற நடனக்காட்சியின் இன் இயக்குனர், நடன இயக்குனர் மற்றும் நட்சத்திரமாக நடித்த இவரது நடன நாட்டியக் காட்சிகளுக்கு சீனா முழுவதும் மவுசும் கூட்டமும் கூடியது. அவர் 2005 ஆம் ஆண்டில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சுற்றுப்பயணம் செய்தார். 2004 மற்றும் 2008 க்கு இடையில், யாங் லிபிங் "டைனமிக் யுன்னன்", "ஷாங்க்ரி-லாவின் எதிரொலி" மற்றும் "திபெத்திய கட்டுக்கதை". ஆகிய ஒரு முத்தொகுப்பை இயக்கி நடனமாடினார்: 2004 ஆம் ஆண்டில், "டைனமிக் யுன்னன்" சீனாவின் தேசிய தாமரை விருதுகளில் கண்கவர் நடனம், சிறந்த நடனம் மற்றும் சிறந்த பெண் நடிகருக்கான தங்க விருது. கவர்ச்சியான பாடல் மற்றும் நடன அமைப்பு ஆகிய ஐந்து முக்கிய விருதுகளை வென்றது, இதில் "டைனமிக் யுன்னன்" ஐ உருவாக்க, யாங்க் யுன்னானில் உள்ள 26 இன சிறுபான்மை பழங்குடியினரின் தொலைதூர கிராமங்களுக்குச் சென்று பல ஆண்டுகள் கழித்தார் மற்றும் 60 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் இயற்கையான பரிசான பாடல் மற்றும் நடனம் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரு சிறந்த கவரும் விதமான நடன பாணியை உருவாக்கினார்.. [1]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

யாங்கின் முதல் கணவர் மத்திய தேசிய பாடல் மற்றும் நடனக் குழுவின் சகாவாக இருந்தார், பின்னர் அவரை விவாகரத்து செய்தார். தற்போதைய கணவர் லியு யுகிங் ஒரு தைவானிய-அமெரிக்கர். இவர்கள் இருவரும் 1990 இல் சந்தித்து 1995 இல் திருமணம் செய்து கொண்டனர், ஆனால் யாங் நீண்டகால ஆடல் நிகழ்ச்சிகளை கருத்திற் கொண்டு குழந்தை பேற்றை தவிர்த்து வருகிறார். [2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Barboza, David (5 March 2005). "The Peacock Princess of China". The New York Times. https://www.nytimes.com/2005/03/05/arts/dance/the-peacock-princess-of-china.html. 
  2. "揭54岁杨丽萍终身不育内幕 老公系台湾富豪-搜狐娱乐" (in zh). Sohu. 25 September 2012. http://yule.sohu.com/20120925/n353931453.shtml. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாங்_லிபிங்&oldid=2942625" இலிருந்து மீள்விக்கப்பட்டது