யமாசினா பறவையில் நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பறவையியலுக்கான யமாஷினா நிறுவனம்

யமாசினா பறவையில் நிறுவனம் (Yamashina Institute for Ornithology) என்பது யப்பானில் உள்ள இலாப நோக்கற்ற பறவையியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.

வரலாறு[தொகு]

யமாசினா பறவையில் நிறுவனம் முனைவர் யோசிமாரோ யாமசினாவினால் நிறுவப்பட்டது. சிபுயா, தோக்கியோவில் உள்ளது தனது வீட்டில் பறவை மாதிரிகள் மற்றும் பறவைகள் தொடர்பான புத்தகங்களைச் சேகரித்து ஒரு தனியார் அருங்காட்சியகமாக நிறுவினார். மார்க்விஸ் யமாஷினா இளவரசர் யமாஷினா கிகுமாரோவின் இரண்டாவது மகன். இவர் தனது அருங்காட்சியகத்தை 1942இல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளித்தார். இந்த நிறுவனத்தில், யாமசினா குரோமோசோம்களை அடிப்படையாகக் கொண்டு பறவைகளை வகைபிரித்தல் குறித்து ஆராய்ச்சி நடத்தினார். மேலும் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் பறவையியல் பற்றிய புத்தகங்களையும் எழுதினார்.

இந்த நிறுவனம் 1984 ஆம் ஆண்டில்தோக்கியோவிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் கிழக்கே சிபாவின் அபிகோவிற்கு இடம் மாற்றப்பட்டது. இந்த நிறுவனம் யப்பானின் இம்பீரியல் குடும்பத்துடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வருகிறது. இதற்கு யப்பானின் இளவரசர் நருஹித்தோவின் இளைய சகோதரர் எச்.ஐ.எச் இளவரசர் அகிஷினோவும், அவர்களின் தங்கை இளவரசி சாயகோவும் 1992லிருந்து 2005 வரை ஆராய்ச்சியாளராக பணியாற்றினர். அங்கு இவர் மீன் கொத்தி பறவைகள் குறித்த ஆய்வில் நிபுணத்துவம் பெற்றார்.[1]

அமைப்பு[தொகு]

இந்நிறுவனம் மூன்று ஆராய்ச்சி பிரிவுகளாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது:

  • பறவையியல் ஆராய்ச்சி ஆய்வகம்: பறவைகளின் சுற்றுச்சூழல் மற்றும் அமைப்புமுறைகளில் நிபுணத்துவம் பெற்றது. இதில் கடல் பறவைகளின் வடிவங்கள் மற்றும் பறவைகளின் மரபணு மாறுபாடுகள், முக்கியமாக டி.என்.ஏ வரிசை முறையைப் பயன்படுத்துகின்றன.
  • பறவை வலசைபோதல் ஆராய்ச்சி மையம்: ஒவ்வொரு ஆண்டும் 200,000க்கும் மேற்பட்ட பறவைகளை வளையமிட்டு, பிரச்சாரங்களை நடத்துகிறது. இது தொலை அளப்பியல், ரேடார் மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆகியவற்றுடன் பறவைகளின் வலசை முறைகளை ஆராய்கின்றது.
  • நூலகம் மற்றும் சேகரிப்பு மையம் உலகம் முழுவதிலுமிருந்து, குறிப்பாகக் கிழக்கு ஆசியா மற்றும் வடமேற்கு பசிபிக் பிராந்தியங்களிலிருந்து 69,000 வெவ்வேறு பறவை மாதிரிகள் மற்றும் 39,000 பறவையியல் புத்தகங்கள் மற்றும் காலச்சுவடுகள் நூலகத்தில் பராமரிக்கிறது.

வெளியீடுகள் மற்றும் நிகழ்வுகள்[தொகு]

யமஷினா நிறுவனம் பல பத்திரிகைகளையும் ஆய்விதழ்களையும் வெளியிடுகிறது. இதில் யமஷினா இன்ஸ்டிடியூட் ஆப் பறவையியல், பறவை இடம்பெயர்வு ஆராய்ச்சி மையத்தின் ஆண்டு அறிக்கை மற்றும் ஆதரவு குழு உறுப்பினர்களுக்கான மாதாந்திர செய்தித்தாள் ஆகியவை அடங்கும்.

பறவையியல் மேம்பாடு அல்லது பறவைகளின் பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்த ஒரு தனிநபர் அல்லது குழுவிற்கு யமஷினா யோஷிமரோ நினைவு பறவையியல் விருதை வழங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. [1] The Times, Nov 12 2005