மோகன் மெக்கின்சு துடுப்பாட்ட அரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோகன் மெக்கின்சு துடுப்பாட்ட அரங்கம்
Mohan Meakins Cricket Stadium
அரங்கத் தகவல்
அமைவிடம்காசியாபாத்து, உத்தரப் பிரதேசம்
உருவாக்கம்1971
இருக்கைகள்200
உரிமையாளர்உத்தரப் பிரதேச அரசு
இயக்குநர்உத்தரப் பிரதேச அரசு
பன்னாட்டுத் தகவல்
முதல் மஒநாப11 திசம்பர் 1997:
 நெதர்லாந்து v  நியூசிலாந்து
கடைசி மஒநாப15 திசம்பர் 1997:
 இந்தியா v  நெதர்லாந்து
மூலம்: cricinfo

மோகன் மெக்கின்சு துடுப்பாட்ட அரங்கம் (Mohan Meakins Cricket Stadium) இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள காசியாபாத்து நகரில் அமைந்துள்ளது. இதை நரேந்திர மோகன் விளையாட்டரங்கம் என்ற பெயராலும் அழைக்கிறார்கள். 1977 ஆம் ஆண்டு உள்ளூர் அணியான உத்தரபிரதேச துடுப்பாட்ட அணி பரோடா துடுப்பாட்ட அணியுடன் மோதிய போட்டியின் போது 12 இரஞ்சிக் கோப்பை போட்டிகள் இங்கு நடந்தன. இதே ஆண்டு நடைபெற்ற உத்திரப்பிரதேசம், கர்நாடகா இடையிலான இரஞ்சிக் கோப்பை இறுதி போட்டியும் இங்குதான் நடைபெற்றது.[1]

1997 ஆம் ஆண்டு மகளிர் துடுப்பாட்ட உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற்ற 25 இடங்களில் மோகன் மெக்கின்சு துடுப்பாட்ட அரங்கமூம் ஒன்றாகும். இவ்வரங்கத்தில் இரண்டு மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றன. அவை நெதர்லாந்து பெண்கள் மற்றும் நியூசிலாந்து மகளிர் இடையிலான போட்டியும்[2] இந்திய மகளிர் மற்றும் நெதர்லாந்து மகளிர் இடையேயான போட்டியுமாகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]