மேரி மக்கிலொப்
| சிலுவையின் புனித மேரி Saint Mary of the Cross |
|
|---|---|
மேரி மக்கிலொப், 1869 |
|
| பிறப்பு | சனவரி 15, 1842 ஃபிட்ஸ்ரோய், விக்டோரியா, ஆத்திரேலியா |
| இறப்பு | ஆகத்து 8 1909 (அகவை 67) சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா |
| ஏற்கும் சபை/சமயம் | கத்தோலிக்கத் திருச்சபை |
| அருளாளர் பட்டம் | திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்-ஆல் 19 சனவரி 1995, சிட்னி |
| புனிதர் பட்டம் | திருத்தந்தை பெனடிக்ட் XVI-ஆல் 17 அக்டோபர் 2010, வத்திக்கான் |
| முக்கிய திருத்தலங்கள் | மேரி மக்கிலொப் இடம், வடக்கு சிட்னி |
| திருவிழா | 8 ஆகத்து |
| பாதுகாவல் | ஆத்திரேலியா, பிறிஸ்பேன் |
மேரி மக்கிலொப் (Mary MacKillop, அல்லது சிலுவையின் புனித மேரி சனவரி 15, 1842 - ஆகத்து 8, 1909) என்பவர் ஆத்திரேலிய ரோமன் கத்தோலிக்க கன்னித்துறவி ஆவார். இவர் பாதிரியார் ஜூலியன் டெனிசன் நூட்ஸ் என்பவருடன் இணைந்து சென் யோசேப்புவின் புனித இருதய சகோதரிகள் என்ற அமைப்பு உட்பட பல கத்தோலிக்கப் பள்ளிகள், நலன்புரி அமைப்புகளை வறிய மக்களுக்கான கல்வி மேம்பாட்டைக் குறிக்கோளாகக் கொண்டு ஆஸ்திரலேசியா எங்கணும் தோற்றுவித்தார். ஆத்திரேலியாவில் புனிதர் பட்டம் பெற்ற ஒரே ஒருவர் மேரி மக்கிலொப் ஆவார்.
போப்பாண்டவர் பதினாறாம் பெனடிக்ட் 2008 சூலை 17 இல் சிட்னிக்குப் பயணம் மேற்கொண்டபோது மேரி மக்கிலொப்பின் கல்லறைக்கு சென்று வழிபாடு நடத்தினார். மேரி மக்கிலொப்ப்பினால் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் அதிசயம் 2009 டிசம்பர் 19 இல் ரோமன் கத்தோலிக்க உயர் சபையினால் அங்கீகரிக்கப்பட்டது[1]. இதனையடுத்து 2010, அக்டோபர் 17 ஆம் நாள் வத்திக்கான் நகரில் போப்பாண்டவரினால் புனிதராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்[2][3][4][5].
மேற்கோள்கள் [தொகு]
- ↑ MacKillop has become Australia's first saint, ஏபிசி செய்திகள், 20 டிசம்பர் 2009, http://www.abc.net.au/news/stories/2009/12/19/2776743.htm
- ↑ "Australia's first saint canonised". ஆத்திரேலியா டைம்ஸ். 17 அக்டோபர் 2010. http://www.australia-times.com.au/national/article.php?id=19285. Retrieved 17 அக்டோபர் 2010.
- ↑ "Canonisation for Mary MacKillop underway". சிட்னி மோர்னிங் ஹெரால்ட். 17 அக்டோபர் 2010. http://news.smh.com.au/breaking-news-national/canonisation-for-mary-mackillop-underway-20101017-16oxs.html. Retrieved 17 அக்டோபர் 2010.
- ↑ Consistory for the vote on Cause of canonisation, 19.02.2010, வத்திக்கான், 19 பெப்ரவரி 2010, http://212.77.1.245/news_services/bulletin/news/25160.php?index=25160&lang=en, retrieved 20 February 2010
- ↑ "Date set for MacKillop's sainthood". ஏபிசி செய்திகள் (ஏபிசி). 19 பெப்ரவரி 2010. http://www.abc.net.au/news/stories/2010/02/19/2825313.htm. Retrieved 19 பெப்ரவரி 2010.
வெளி இணைப்புகள் [தொகு]
- மேரி மக்கிலொப் அதிகாரபூர்வ வலைத்தளம் - (ஆங்கிலத்தில்)
- Sisters of Saint Joseph of the Sacred Heart official website