முற்கால மரங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முற்கால மரங்கொத்தி
யூரேசியா முற்கால மரங்கொத்தி(Jynx torquilla)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மரங்கொத்திக் குடும்பம் (Picidae)

Species

J. torquilla
J. ruficollis

முற்கால மரங்கொத்திகள் சிறிய தனித்துவமான மரங்கொத்தி இனத்தை சார்ந்த பறவை இனமாகும். இவைJynx என்னும் பேரினத்தை சார்ந்தவை. Jynx என்பது பழங்கால கிரேக்க சொல்லான iunx என்பதிலிருந்து வந்தது. கிரேக்கத்தில் iunx என்றால் முற்கால மரங்கொத்தி என்பது பொருள். [1]

மற்ற மரங்கொத்தி இனங்களை போல முற்கால மரங்கொத்திகளுக்கும் பெரிய தலையும் நீண்ட நாக்கும் உடையது . அதன் நீண்ட நாக்கை பயன்படுத்தி அதன் இரையான பூச்சிகளை பிடித்து உண்ணும். இதன் வால் இறக்கைகள் மற்ற மரங்கொத்தி வகைகளை போல கடினமானது இல்லை . இவை மரத்தண்டுகளைவிட மரத்தின் கிளைகளில் அமர்ந்து இருக்கும்.

இதன் அலகுகள் சிறியவை மற்றும் கூர்மையானவை . இதன் பிரதான இரை எறும்புகள் ஆகும். இவை தானே மரத்தில் துளை இடாமல் , கூடு கட்டுவதற்காக மற்ற மரங்கொத்திகள் கொற்றிய துளைகளை பயன்படுத்தும். இதன் முட்டைகள் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

முற்கால மரங்கொத்திகள் சாம்பல் மற்றும் பழுப்பு நிறம் கொண்ட அழகிய இறகுகளை உடையது. வளர்ந்த பறவைகள் ஜூலை-செப்டம்பர் பருவத்தில் தன் இறகுகளை உதிர்த்திக்கொள்ளும். சில பறவைகளின் இறகு உதிர்தல் பருவம் பனிக்காலம் வரை நீடிக்கும்.[2] The voice is a nasal woodpecker-like call.

இப்பறவைகளால் தன் தலையை கிட்டத்தட்ட 180 டிகிரிகள் திருப்ப இயலும். இதன் ஆங்கில பெயர் தன் தலையை 180 டிகிரி திருப்பும் திறனை கொண்டே பெற்றது. அது தன் கூட்டில் இருக்கும் பொழுது தன்னை அச்சுறுத்த வரும் விலங்குகளிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள பாம்பைப் போல் சத்தமிட்டு தன் தலையை திருப்பி அச்சுறுத்துவது போல் காட்சி உண்டாக்கும்.


இவ்வகை மரங்கொத்திகள் இரண்டு இனம் உள்ளது, அவை:

படம் அறிவியல் பெயர் பெயர் காணப்படும் இடம்
Jynx torquilla யூரேசிய முற்கால மரங்கொத்தி ஆர்டிக் வட்டம் மற்றும் ஸ்பெயின்
Jynx ruficollis சிவப்பு கொண்டை கொண்ட முற்கால மரங்கொத்தி, அல்லது சிவந்த கழுத்து கொண்ட முற்கால மரங்கொத்தி , துணை சஹாரன் ஆபிரிக்கா


  1. Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
  2. RSPB Handbook of British Birds (2014). UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4729-0647-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முற்கால_மரங்கொத்தி&oldid=3588731" இலிருந்து மீள்விக்கப்பட்டது