முரசாக்கி சிக்கிபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முரசாக்கி சிக்கிபு

முரசாக்கி சிக்கிபு, வரைந்தது டோசா மிட்சுவோகி (17ஆம் நூற்றாண்டு)
பிறப்பு {{{birthname}}}
சுமார் 973
கியோட்டோ
இறப்பு சுமார் 1014
கியோட்டோ
தொழில் ஹையன் காலகட்டத்தில் அரசவை சீமாட்டி
நாடு யப்பான்
எழுதிய காலம் ஹையன் காலகட்டம்
இலக்கிய வகை புதினம், கவிதை
உறவினர்(கள்) ஃபுஜிவாரா நோ டமெடோகி, தந்தை
முரசாக்கி சிக்கிபு எழுதும்போது, கிகுச்சி யோசாய் (1788–1878)
கியோட்டோவில் ரோசன்-ஜி, அவருடன் பேசப்படும் ஒரு கோவில்
அவரை பெருமைபடுத்தும் 2000 யென் நோட்டு

முரசாக்கி சிக்கிபு (;(சுமார் 973- சுமார் 1014 அல்லது 1025) (ஆங்கிலத்தில் சீமாட்டி முரசாக்கி), ஜப்பான் நாட்டில் ஹையன் காலகட்டத்தில் அரசவையில் பணிபுரிந்த பெண் நாவலாசிரியரும் புலவருமாவார்.அவர் கி.பி 1000 வாக்கில் எழுதிய "ஜெஞ்சியின் கதை" என்ற புதினத்தால் புகழ்பெற்றவர்.ஜப்பானின் ஆரம்ப கால புதினங்களில் அது ஒன்றாகத் திகழ்ந்தது.

முரசாக்கி சிக்கிபு அவரது இயற்பெயரன்று. அவரது உண்மையான பெயர் எதுவென பல ஊகங்கள் நிலவுகின்றன.[1] அவரது நாவலில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயரே அவருக்கு முரசாக்கி என செல்லப் பெயராயிற்று. சிக்கிபு என்பது அவரது தந்தையின் பதவி குறித்து வந்ததாகும்.

பொருளடக்கம்

வாழ்க்கை வரலாறு [தொகு]

சீமாட்டி முரசாக்கி சுமார் 973இல் ஜப்பானின் கியோட்டோவில் ஒரு சிறிய அரசகுடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே தாயை இழந்த அவரை,அப்போதைய பழக்கவழக்கங்களுக்கு மாறாக, கல்வியாளரும் அரசவையில் முக்கிய அதிகாரியாகவும் இருந்த தந்தையாரே வளர்த்தார். ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இலக்கியத்தை கற்க அவருக்கு உதவினார். இருபதுகளில் திருமணம் செய்துகொண்டு ஒரு பெண் மகவுக்கு,(தைனி நோ சான்மி) தாயானார்.அவர் மகளும் பின்னாளில் ஒரு கவிதாயினியாக பரிமளித்தார்.[2]

அரண்மனையில் அரசி சோஷிக்கு தோழிப்பெண்ணாக பணிபுரிந்து வந்தார். சுமார் 1014இல் அவரது தந்தை திடீரென கியோட்டோ திரும்பிய காலத்தில் இறந்தார் எனவும் அல்லது தனது 50ஆம் வயதுகளில் 1025-1031 காலகட்டத்தில் இறந்திருக்கலாம் எனவும் ஊகங்கள் நிலவுகின்றன.

மூன்று ஆக்கங்கள் அவருடையதாக கொள்ளப்படுகின்றன:

  • ஜெஞ்சியின் கதை (The Tale of Genji)
  • முரசாக்கி சிக்கிபுவின் நாட்குறிப்பு (The Murasaki Shikibu Diary)
  • முரசாக்கி சிக்கிபு தொகுப்பு (The Murasaki Shikibu Collection) - அவரது 128 கவிதைகளை தொகுத்து அவரது மறைவிற்குப்பின் வெளியிடப்பட்டது.

ஜப்பானிய பண்பாட்டில் தாக்கம் [தொகு]

முரசாக்கி ஜப்பானிய இலக்கியத்தில் ஒரு சிறந்த ஆசிரியராக கருதப் படுகிறார். அவரை நினைவு கூறும் வகையில் ஜப்பான் எங்கும் அவரது சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவரது ஆக்கங்கள் கல்விதிட்டங்களில் சிறப்பு பகுதியாக அமைகின்றன. அவரது சிறந்த காவியமான ஜெஞ்சியின் கதையின் நினைவாக 2000 யென் மதிப்புள்ள நோட்டு வெளியிடப்பட்டுள்ளது.

பன்னாட்டு வெளியீடுகள் [தொகு]

  • முரசாக்கியின் வாழ்க்கையை ஒட்டி லிசா டால்பி ஒரு கற்பனை வாழ்க்கை வரலாறு எழுதியுள்ளார்: The Tale of Murasaki: A Novel.
  • அதேவண்ணம் இத்தாலிய மொழியில் காபரில்லா மாக்ரினி ஒரு புதினம் எழுதியுள்ளார்: Mille Autunni, vita di Murasaki Dama di Corte, Edizione Frassinelli 1985;
  • இத்தாலிய புதினத்தை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்துtranslated:La dame de Kyoto, Editions Belfond, 1987, ISBN 2-7144-1973-9.
  • பின்னாளில் ஹன்னிபால் ரைசிங்க் என திகில்படமாக வெளியான தாமஸ் ஹாரியின் நாவலில் சீமாட்டி முரசாக்கியின் கற்பனை சந்ததி ஒருவர் முக்கிய கதாபாத்திரமாக சித்திரிக்கப்பட்டுள்ளார்.

மேற்கோள்கள் [தொகு]

  1. (a) Bunei Tsunoda "முரசாக்கி சிக்கிபுவின் இயற்பெயர்" Kodai Bunka (Cultura antiqua) 1963, no.7. (b) Gen-e Imai "முரசாக்கி சிக்கிபுவின் இயற்பெயர் டககோ எனும் கொள்கை எழுப்பும் கேள்விகள்" Kokugo Kokubun (Japanese Language and Literature) Vol. 34 (no. 1) (1965). இரண்டு கட்டுரைகளும் ஜப்பானிய மொழியில் உள்ளன.
  2. Kenneth Rexroth and Ikuko Atsumi, Women Poets of Japan, New Directions Press (1982) at 143.(ஆங்கிலத்தில்)
  • Dalby, Liza. The Tale of Murasaki: A Novel (Anchor, 2001). ISBN 0-385-49795-4.
  • Lady Murasaki, Arthur Waley (trans.). The Tale of Genji, published in 6 volumes from 1921-33.
  • Shikibu, Murasaki; Tyler, Royall (trans.). The Tale of Genji (Viking, 2001.) ISBN 0-670-03020-1.

வெளியிணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=முரசாக்கி_சிக்கிபு&oldid=1353388" இருந்து மீள்விக்கப்பட்டது