முப்பலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முப்பலி என்பது நாட்டார் தெய்வச் சடங்குகளில் ஒன்றாகும். இச்சடங்கில் பன்றி, ஆட்டுக்கிடாய், கோழி என மூன்று உயிர்களையும் பலியிடுதல் வழக்கமாக உள்ளது.[1] நாட்டர் காவல் தெய்வங்களான கருப்பசாமி, முனி, சுடலை போன்ற தெய்வங்களின் வழிபாட்டில் இச்சடங்கு நடைமுறையில் உள்ளது. [2]

பெண் தெய்வங்களான காளி[3], செல்லியம்மன் போன்ற உக்கிரமான தெய்வங்களுக்கும் இப்பலியிடும் முறை வழக்கில் உள்ளது.

சைவ முப்பலி[தொகு]

உயிர்கள் பலியிடப்படுவதை ஏற்காத மக்கள் தேங்காய், வெண்பூசணி, எழுமிச்சம்பழம் ஆகியவற்றில் சிவப்பு எனும் குங்குமம் தடவி உடைத்தும், அறுத்தும் போடுகின்றனர். இதை முப்பலியாக நம்புகின்றனர்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. தமிழ் மண்ணின் சாமிகள் (நூல்) - மணா பக்கம் 60
  2. http://www.tamilhindu.com/2012/02/palavesamuthu-and-thannaasi/
  3. http://temple.dinamalar.com/New.php?id=787

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்பலி&oldid=2095291" இலிருந்து மீள்விக்கப்பட்டது