முனியேறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனியேறு (Munneru River) என்பது இந்தியாவின் தெலங்காண மாநிலத்தில் ஓடும் கிருஷ்ணா நதியின் இடதுபுற கிளை ஆறாகும்.[1] இது தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில் உருவாகி கம்மம் மாவட்டம் மற்றும் கிருஷ்ணா மாவட்டத்தில் பாய்கிறது. முனிவர் மௌத்கல்யா தனது ஆன்மீக சக்தியால் இந்த நதியை உருவாக்கக் கம்மத்தில் தவம் செய்ததாகக் கூறப்படுவதால் இவரது நினைவாக இந்த நதிக்கு பெயரிடப்பட்டது.[2]

முனியேறு ஆறு மற்றும் பழைய பாலம் ̠ கிருஷ்ணா மாவட்டத்தின் கீசரா கிராமத்தால் உருவான மணல் திட்டுகள்

தோற்றம்[தொகு]

இது தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தின் மகபூபாபாத் நகருக்கு அருகில் உருவாகிறது.[3]

ஓட்டம்[தொகு]

இது டோர்னக்கல் ஏரி வழியாகப் பாய்ந்து, கம்மத்தின் புறநகர் பகுதியான தனவாய்குடம் வழியாக காமஞ்சல் வழியாக வருகிறது. இங்கு நீர் சேகரிப்பு வசதிக்காக ஒரு சிறிய அணை உள்ளது. முன்னேறு கம்மம் நகருக்கு நீர் ஆதாரமாக உள்ளது. இது கம்மம் நகரின் மஞ்சிகண்டி நகர், கலவோடு, மோதி நகர், பிரகாஷ் நகர் மற்றும் தம்சலம்புரம் புறநகர் வழியாகச் செல்கிறது. இது கிருஷ்ணா மாவட்டத்தின் சின்ன மாண்டவா மற்றும் லிங்கலா கிராமங்களைச் சென்றடைகிறது. இது பெனுகஞ்சிப்ரோலு நகரம், கீசரா கிராமம் [4] ஆகியவற்றில் பாய்ந்து இறுதியாக புளிச்சிந்தலா அணையின் கீழ் நந்திகம அருகே உள்ள ஏதுரு கிராமத்தில் கிருஷ்ணா ஆற்றில் கலக்கிறது. இந்த ஆற்றில் சுமார் 6,650 எக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிக்காக ஜக்கையப்பேட்டை அருகே முனியேறு தடுப்பணை 1898ஆம் ஆண்டு கட்டப்பட்டது. [5]

பாலங்கள்[தொகு]

கம்மம் நகரில் முனியேறு ஆற்றின் குறுக்கே இரண்டு பாலங்கள்.

கம்மம் நகரம் மற்றும் கம்மம் மாவட்டத்தில் உள்ள பிற பகுதிகளுக்கு நாகார்ஜுன்சாகர் தண்ணீர் செல்வதற்காக முனியேறு குறுக்கே ஒரு நீர்ப்பாலம் கட்டப்பட்டுள்ளது. கம்மம் புதிய பாலத்தின் வழியாகக் கனரக வாகனங்களும் பழைய பாலம் வழியாகப் பிற வாகனங்களும் செல்கின்றன.

நெலகொண்டப்பள்ளி மற்றும் கோடாட்டை பிரகாஷ்நகர் வழியாகக் கம்மம் வரை இணைக்க புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியுள்ளது.[6] இந்த பாலம் பயண தூரத்தை மிச்சப்படுத்துவதுடன், முனியேறு ஆறு எளிதில் செல்ல உதவும்.

கிருஷ்ணா மாவட்டத்தில் லிங்கலா கிராமத்தில் சாலை மற்றும் ரயில் பாலம் உள்ளது. பெனுகஞ்சிப்ரோலுவில் சாலைப் பாலம் உள்ளது, நந்திகமவில் தேசிய நெடுஞ்சாலை 9-ல் ஒரு பாலம் உள்ளது. ,

வெள்ளம்[தொகு]

கம்மத்துடன் மகபூபாபாத், டோர்னக்கல் மற்றும் பிற பகுதிகளில் பெய்யும் அதிகப்படியான மழையால் முனியேறு ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.[7][8] 2013 முனியேறு ஆற்றில் அதிக அளவில் நீர் சென்றது. இதனால் ஆற்றின் கரையோரத்தில் வெள்ளத்தினைத் தடுக்க கரை கட்டும் திட்டம் உருவாக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 2 February 2014. பார்க்கப்பட்ட நாள் 27 January 2014.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "About Temple | Temple Info | TAPGPL". tms.ap.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-03-22.
  3. "Water level at Munneru goes up". The Hindu. 24 March 2010. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/water-level-at-munneru-goes-up/article734043.ece. 
  4. "Archived copy". articles.timesofindia.indiatimes.com. Archived from the original on 2 February 2014. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. "Muniyeru Anicut A00145". Archived from the original on 11 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 30 June 2014.
  6. "Work on Munneru bridge to commence today". The Hindu. 6 October 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/work-on-munneru-bridge-to-commence-today/article3971194.ece. 
  7. "Archived copy". www.hindu.com. Archived from the original on 28 March 2008. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  8. "Archived copy". www.hindu.com. Archived from the original on 21 November 2010. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=முனியேறு&oldid=3429790" இலிருந்து மீள்விக்கப்பட்டது