முக்கால் (செய்யுள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முக்கால் என்பது தமிழ்ச் செய்யுள் வகைகளில் வழங்கும் ஒரு பாவினம். இதில் நிரையசையில் முடியும் விளச்சீரால் ஆன ஆறு சீர்களும் , நேரசையில் முடியும் மாச்சீரால் ஆன் ஒரு சீருமாக ஏழுசீர்கள் கொண்ட ஒன்றே முக்கால் அடிகள் இரண்டு முறை வருமாறு அமைந்த பாவினம்.


விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் மா

என ஒன்றே முக்கால் அடியில் ஏழு சீர்களாக, இரண்டு ஒன்றே முக்கால் அடிகளாக வருவன. தேவாரத்தில் திருமுக்கால் என்னும் பதிகத்தலைப்பில்[1] உள்ள பாடல்கள் இவ்வகைப் பாக்களால் ஆனவை. முதல் ஒன்றே முக்கால் அடியில் உள்ள கடைசி மூன்று சீர்களை ஒற்றி இரண்டாவது ஒன்றே முக்கால் அடியின் முதல் மூன்று சீர்கள் வருவது இயல்பாய் உள்ளது.

எ.கா:
சம்பந்தர் திருச்சிறுகுடி என்னும் ஊரில் பாடிய பதிகத்தின் முதல் இரு பாடல்கள் (சாதாரிப் பண்)

திடமலி மதிளணி சிறுகுடி மேவிய
படமலி யரவுடை யீரே
படமலி யரவுடை யீருமைப் பணிபவர்
அடைவது மமருல கதுவே

சிற்றிடை யுடன்மகிழ் சிறுகுடி மேவிய
சுற்றிய சடைமுடி யீரே
சுற்றிய சடைமுடி யீரும தொழுகழல்
உற்றவர் உறுபிணி இலரே

மேலே உள்ள இரண்டு பாடல்களில் முதல் ஒன்றே முக்கால் அடியில் உள்ள கடைசி மூன்று சீர்களில் உள்ள "படமலி யரவுடை யீரே" என்னும் அடி இரண்டாவது ஒன்றே முக்கால் அடியில் மீண்டும் முதல் மூன்று சீர்களில் ஆளப்படுவதைக் காணலாம்.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

  1. சென்னை பல்கலைக்கழக அகரமுதலி [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்கால்_(செய்யுள்)&oldid=3225099" இலிருந்து மீள்விக்கப்பட்டது