மாலி (ஓவியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாலி என்னும் புனைபெயரால் அறியப்படும் டி. ஆர். மகாலிங்கம் என்பவர் விடுதலைக்கு முந்தைய இந்தியாவின் தமிழகத்தில் இருந்த ஓவியரும் கோலிச்சித்திரக்காரரும் ஆவார்.[1] தி இந்துவில் சென்னை வரலாற்றாசிரியர் எஸ். முத்தையாவின் கூற்றுப்படி, தமிழ் பத்திரிக்கையின் முதல் கேலிச்சித்திரக்காரர் இவரே.[2] விகடனுக்காக அதன் புகழ்பெற்ற ஆசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி தனது எழுத்துக்களால் சிறப்பு சேர்த்ததைப் போலவே மாலி தனது கீறல்களால் பங்களித்ததாக முத்தையா வேறொரு இடத்தில் எழுதியுள்ளார்.

ஆனந்த விகடனில் பணியாற்றிய இவர், சாமா, ரவி, சேகர், ராஜு, தாணு, சித்ரலேகா மற்றும் கோபுலு போன்ற ஓவியர்கள் விகடனில் வரைவதற்கு உறுதுணையாக இருந்தார்.

சீனிவாசன் என்ற ஓவியரின் கோவில் கோட்டோவியத்தை கண்டு அவரை ஆனந்த விகடனில் இணைத்துக்கொண்டார். சீனிவாசனுக்கு சில்பி என பெயரிட்டார்.[3] தமிழகத்திலுள்ள பல கோவில்களுக்கு சென்று ஓவியம் வரைய கூறினார். அவை ஆனந்த விகடனில் வெளியிடப்பட்டன.

சில்பி போன்ற அடுத்த தலைமுறை ஓவியர்கள் மாலியின் ஓவியங்களை கண்டு ஓவியரானவர்கள்.[4]

மாலி கோட்டோவியங்கள், வரைகலை ஓவியங்கள் போன்றவற்றை வரைவதில் வல்லவராக இருந்தார்.

தமிழ் திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கையின் கூற்றுப்படி, ஜெமினி ஸ்டுடியோவுக்கான பிரபலமான சின்னமான எக்காளம் வாசிக்கும் இரட்டையர் சின்னத்தை மாலி வடிவமைத்தார்.[5]

தி இந்தியன் ரிவ்யூவில் vgys'qi ஒரு இரங்கல் படி மாலி சு 1947 இல் இறந்தார்.[6]

மாலி குறித்து[தொகு]

மாலி என்றழைக்கப்படும் மகாலிங்கம் விகடனில் ஒரு சகாப்தம். ஆனந்த விகடன் என்பது என்ன மாதிரியான பத்திரிகை, அதன் காரக்டர் என்ன என்பதில் தொடங்கி இன்று நம் கையில் தவழும் விகடனுக்கான அஸ்திவாரம் அமைத்தவர் மாலிதான் என ஓவியர் ‘கோபுலு’ கூறினார்.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Vēṅkaṭācalapati, Ā. Irā (2006). In those days there was no coffee: writings in cultural history. Yoda Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788190227278. https://books.google.com/books?id=tk-KZmcUEvAC. 
  2. Muthiah, S. (Aug 8, 2003). "The House of Humour". தி இந்து இம் மூலத்தில் இருந்து November 6, 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031106212148/http://www.hindu.com/mp/2003/10/08/stories/2003100800400300.htm. 
  3. முத்திரை பதித்த முன்னோடிகள்!: ஓவியர் "சில்பி! - லக்ஷ்மி பாலசுப்ரமணியன், கடுவெளி. 23 டிசம்பர் 2017
  4. சில்பியே சிகரம்- கோகுல் சேஷாத்ரி. வரலாறு இணையதளம்
  5. Guy, Randor. "Round the city's old studios". Madras Musings.
  6. Natesan, G. A. (Jan–Dec 1947). "Mali of Ananda Vikatan". The Indian Review 48. https://books.google.com/books?id=F64NKay6zNYC&q=mali. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலி_(ஓவியர்)&oldid=3854414" இலிருந்து மீள்விக்கப்பட்டது