மாலத்தீவின் கலாச்சாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாலத்தீவின் கலாச்சாரம் (Culture of the Maldives) பல ஆதாரங்களில் இருந்து பெறப்பட்டுள்ளது. அவற்றில் மிக முக்கியமானது இலங்கை மற்றும் தென்னிந்தியாவின் கரையோரங்களுக்கு அருகாமையில் காணப்படுகிறது. மானுடவியல் பார்வையில் மாலத்தீவின் மக்கள் முக்கியமாக இந்தோ-ஆரியர்கள் ஆவர்.

தாக்கங்கள்[தொகு]

இங்கு பேசப்படும், திவெயி மொழி இந்தோ-ஈரானிய சமஸ்கிருத தோற்றம் கொண்டது, எனவே சிங்களத்துடன் நெருங்கிய தொடர்புடையது. இது வடக்கிலிருந்து வந்த துணைக் கண்டத்தின் செல்வாக்கை சுட்டிக்காட்டுகிறது. புராணங்களின் படி, கடந்த காலத்தில் மாலத்தீவை ஆட்சி செய்த அரச வம்சம் அதன் தோற்றத்தை அங்கே கொண்டுள்ளது.

மாலத்தீவில் இருந்த பண்டைய மன்னர்கள் பௌத்தத்தை துணைக் கண்டத்திலிருந்து கொண்டு வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆனால் அது பற்றிய சான்றுகள் இல்லை. இலங்கையில், இதே போன்ற பல மன்னர்கள் இருந்துள்ளனர். ஆனால் பண்டைய மாலத்தீவு அரசர்களும், பௌத்தமும் அந்த தீவிலிருந்து வந்தன என்பது சாத்தியமற்றது. ஏனென்றால் இலங்கை நாளிதழ்கள் எதுவும் மாலத்தீவைப் பற்றி குறிப்பிடவில்லை. அதன் இராச்சியத்தின் பகுதிகள் மாலத்தீவு தீவுகள் வரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் இலங்கையின் பண்டைய நாளேடுகள் மாலத்தீவைப் பற்றி குறிப்பிடத் தவறியிருக்க வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.

கி.பி 12 ஆம் நூற்றாண்டிலிருந்து, மாலத்தீவின் மொழி மற்றும் கலாச்சாரத்தில் அராபிய தீபகற்பத்தின் தாக்கங்கள் இருந்தன. ஏனெனில் அந்த நேரத்தில் இஸ்லாமிற்கு பொதுவான மாற்றம், மற்றும் மத்திய இந்தியப் பெருங்கடலில் ஒரு குறுக்கு வழியாக இத் தீவு அமைந்துள்ளது.

தீவுகளின் கலாச்சாரத்தில், ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சில கூறுகளும் உள்ளன. அரச குடும்பத்தினரால் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட அடிமைகளிலிருந்தும் மற்றும் பிரபுக்கள் கடந்த காலங்களில் தங்கள் ஹஜ் பயணங்களிலிருந்து அரேபியாவுக்கு சென்றதனாலும் இந்த ஆப்பிரிக்க வம்சாவளி வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், இங்கு, வடக்கு அரி அட்டோலில் ஃபெரிடு மற்றும் மால்ஹோஸ் போன்ற தீவுகளும், தெற்கு மல்ஹோஸ்மதுல்ஹு அட்டோலில் கோயுடு போன்ற தீவுகளும் உள்ளன. அங்கு விடுவிக்கப்பட்ட ஆப்பிரிக்க அடிமைகளுக்கு குடியிருப்பாளர்கள் பலர் தங்கள் வம்சாவளியைக் கண்டுபிடிக்கின்றனர்.[1]

சமூகம்[தொகு]

நான்கு சுல்தான்கள் இருப்பதன் மூலம் மாலத்தீவில் பெண்களின் நிலை பாரம்பரியமாக மிகவும் உயர்ந்ததாக இருந்தது. பெண்கள் இங்கு, முக்காடு போடுவதில்லை. மேலும், அவர்களை ஒதுக்கி வைக்கப்படவில்லை. ஆனால் பொது இடங்களில், அரங்கங்கள், மசூதிகள் போன்றவற்றில் சிறப்பு பிரிவுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பெண்கள் திருமணத்திற்குப் பிறகு தங்கள் கணவரின் பெயர்களை ஏற்றுக்கொள்வதில்லை, ஆனால் அவர்களின் முதல் பெயர்களை பராமரிக்கிறார்கள். பரம்பரை சொத்தின் வாரிசு உரிமை ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதாக உள்ளது.

குடும்பத்திலும் சமூகத்திலும் பெண்களுக்கு எப்போதும் முக்கிய பங்கு உண்டு. மாலத்தீவின் ஆரம்பகால வரலாற்றில், ஒரு பெண்ணை சுல்தானா அல்லது ஆட்சியாளராகக் கொண்டிருப்பது வழக்கமற்றதாக இருந்தது. இந்தச் சமூகம் ஒரு காலத்தில் ஆணாதிக்கமாக இருந்தது என்று கூறப்படுகிறது. இன்றைய சமுதாயத்தில் பெண்கள் அரசு மற்றும் வணிகத்தில் வலுவான பதவிகளை வகிக்கின்றனர். அரசு ஊழியர்களில் பெரும் சதவீதம் பெண்களாக உள்ளனர். மேல்நிலைப் பள்ளித் தரங்களுக்கு மாணவர் சேர்க்கை மற்றும் கல்வியை நிறைவு செய்வதற்கான ஆண் பெண் விகிதம் சமமாக உள்ளது. அமைச்சரவையிலும் நாடாளுமன்றத்திலும் பெண்கள் பணியாற்றுகிறார்கள்.

மாலத்தீவு கலாச்சாரம் ஒரு வலுவான திருமண மரபின் பல அம்சங்களை பண்டைய திராவிட கலாச்சாரத்துடன் பகிர்ந்து கொள்கிறது. மாலத்தீவு சமுதாயத்தின் ஒரு தனித்துவமான அம்சமாகக் கருதப்படுவது, அதன் அதீத திருமண முறிவு விகிதமாகும். இது குழந்தைத் திருமணத்தின் காரணமாக ஏற்பட்டது என்று சிலரால் கூறப்படுகிறது. ஆனால் பெரும்பான்மையாக திருமணமுறிவு பற்றிய இசுலாமியத்தின் தாராளவாத விதிகள் மற்றும் வேளாண்மைத் துறையில் வளர்ச்சி அடைந்த சமுதாயத்தின் போதிய வரலாறுகள் இன்மை, வேளாண்மை, சொத்துரிமை போன்றவற்றிற்கான கோட்பாடு போன்றவற்றினால் திருமண பந்தத்தில் பிணைப்பு ஏற்படாததே திருமண முறிவு பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகக் கருதப்படுகிறது.[2]

மாலத்தீவில் பலதுணை மணம் சட்டபூர்வமானது. இருப்பினும் இதுபோன்ற திருமணங்கள் மிகவும் அரிதாகவே நடக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், ஐம்பத்தொன்பது பலதார மணங்கள் 1998 இல் நடந்தன.[3] பலதுணை மணம் குறிப்பாக 2001 மாலத்தீவின் சட்டத்தால் தடுக்கப்பட்டுள்ளது, இது ஒரு ஆணின் வேறொரு மனைவியை அழைத்துச் செல்வதற்கு முன் அந்த மனிதனின் நிதிகளை மதிப்பிட நீதிமன்றங்களுக்கு உத்தரவிடுகிறது.[4]

உணவு[தொகு]

மீன்பிடித் தொழில் நாட்டின் இரண்டாவது பெரிய தொழிலாக இருப்பதால் மாலத்தீவின் முக்கியமான உணவாக மீன் உள்ளது. தினசரி உணவில் அரிசி மற்றும் மீன் ஆகியவை மிகவும் பொதுவான உணவுகளாகும். சராசரி உணவில் மீன் புரதத்தின் மிக முக்கியமான ஆதாரமாக உள்ளது. நாட்டில் விவசாய நிலங்கள் இல்லாததால் மிகக் குறைந்த காய்கறிகளே இத் தீவு மக்களால் சாப்பிடப்படுகின்றன. பெரியவர்கள் குடுகுடா, என்கிற ஒரு நீளமான குழாய் மூலமாக புகைபிடிக்கின்றனர். சுற்றுலா ஓய்வு விடுதிகளில் வழங்கப்படும் பெரும்பாலான உணவு வகைகள் இறக்குமதி செய்யப்படுகிறது. சடங்கு சந்தர்ப்பங்களில், பன்றி இறைச்சி தவிர வேறு இறைச்சி சாப்பிடப்படுகிறது. சுற்றுலா ஓய்வு விடுதிகளில் தவிர வேறெங்கும் மதுவுக்கு அனுமதி இல்லை. உள்ளூர் பானமாக "போகாரு" என்னும் பானம் மதுபானங்களுக்கு பதிலாக உட்கொள்ளப்படுகிறது. அரிசி, சர்க்கரை, மாவு போன்ற அடிப்படை பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

நாட்டுப்புற கதைகள்[தொகு]

மாலத்தீவின் நாட்டுப்புறவியலின் தொன்மங்கள், கதைகள் மற்றும் நிகழ்வுகள் பாரம்பரியமாக வாய்வழியாக சொல்லப்பட்டவை ஆகும். மாலைதீவு நாட்டவர்கள், சில மாலத்தீவு கட்டுக்கதைகள் ஏற்கனவே 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சிலோன் எச்.சி.பி பெல்லில் பிரித்தானிய கமிஷனரால் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும்,[5] அவர்களின் ஆய்வு மற்றும் வெளியீடு ஸ்பெயினின் எழுத்தாளரும் கலைஞருமான சேவியர் ரோமெரோ-ஃப்ரியாஸ் அவர்களால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில் அந்த மூதாதையர் உலகக் கண்ணோட்டம் விரைவில் மறைந்து கொண்டிருந்தது.

குறிப்புகள்[தொகு]

  1. Xavier Romero-Frias, The Maldive Islanders, A Study of the Popular Culture of an Ancient Ocean Kingdom. Barcelona 1999,
  2. Marcus, Anthony. 2012. “Reconsidering Talaq: Marriage, Divorce and Sharia Reform in the Republic of Maldives” in Chitra Raghavan and James Levine. Self-Determination and Women’s Rights in Muslim Societies. Lebanon, NH: Brandeis University Press "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-10-10. பார்க்கப்பட்ட நாள் 2019-11-30.
  3. Maldives: Gender and Development Assessment பரணிடப்பட்டது 2012-04-24 at the வந்தவழி இயந்திரம்
  4. Maldives divorce rate soars
  5. HCP Bell, The Máldive Islands: An account of the Physical Features, History, Inhabitants, Productions and Trade. Colombo, 1883
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலத்தீவின்_கலாச்சாரம்&oldid=3925557" இலிருந்து மீள்விக்கப்பட்டது