மாதவ் சவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாதவ் சவான்
பிறப்பு1954 (அகவை 69–70)
மகாராட்டிரம்
பணிகல்வியில் சமூக தொழில்முனைவோர்

மாதவ் சவான் (Madhav Chavan) (பிறப்பு 1954) ஓர் சமூக ஆர்வலரும் மற்றும் தொழில்முனைவோரும் ஆவார். இவர் இலாப நோக்கற்ற பிரதம் என்ற நிறுவனத்தின்[1] இணை நிறுவனரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். [2] இந்தியா முழுவதும் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடிப்படை வாசிப்பு, எழுதுதல் மற்றும் எண்கணிதம் ஆகியவற்றைக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்ட ரீட் இந்தியா என்ற பிரச்சாரத்தையும் இவர் தொடங்கினார். கல்வித் துறையில் ஒரு சமூக தொழில்முனைவோர் அமைப்பாக அதன் புதுமை மற்றும் தலைமைத்துவத்திற்காக 2011 ஆம் ஆண்டு ஸ்கோல் விருதைப் பெற்றார்.[3] மேலும், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பல்லாயிரக்கணக்கான பின்தங்கிய குழந்தைகளின் கற்றல் தேவைகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்ததன் விளைவாக, மேம்பாட்டு ஒத்துழைப்பில் 2013 பிபிவிஏ அறக்கட்டளை அறிவு எல்லைகள் விருதைப் பெறுள்ளார். 2012 ஆம் ஆண்டில் சவான் கல்விக்கான உலகக் கண்டுபிடிப்பின் உச்சி மாநாட்டில் முன்னணி-சமூக-பங்களிப்பாளர் விருதை பெற்றுள்ளார். செயல்பாட்டுத் துறையில் முன்மாதிரியான பணிக்காக இந்தியாவின் மிக உயர்ந்த விருதான் இது கல்வித் துறையில் நோபல் பரிசுக்கு சமமானதாகக் கருதப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு சமூக தொழில்முனைவோருக்கான ஸ்கோல் விருதையும் பெற்றார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

மாதவ் சவான் மகாராட்டிராவில் யஷ்வந்த் சவான் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை விளாதிமிர் லெனினால் ஈர்க்கப்பட்டு லால் நிஷான் என்ற கட்சியை நிறுவியவர். மாதவ் சவான் காரில் உள்ள பிபிஎம் உயர்நிலைப் பள்ளியிலும் ஜெய் இந்த் கல்லூரியிலும் படித்தார். மும்பையில் உள்ள அறிவியல் தொழிநுட்ப நிறுவனத்தில் வேதியியலில் இளம் அறிவியல் மற்றும் முது அறிவியல் பட்டம் பெற்றார். மேலும் இவர் 1983 இல் ஒகையோ மாநில பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

தொழில்[தொகு]

1989 இல் மும்பை சேரிகளில் தேசிய எழுத்தறிவுத் திட்டத்தில் வயது வந்தோருக்கான கல்வியறிவை வழங்குவதற்காகான பிரதம் என்ற திட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பு மாதவ் சவான் ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் ஹியூஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் மும்பை, வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம்ஆகியவற்றில் வேதியியலைக் கற்பித்தார்.

1983ல் இந்தியா திரும்பிய இவர் சில வருடங்கள் தூர்தர்ஷனுக்காக கல்வியறிவுத் திட்டங்களைத் தயாரித்த பிறகு, மும்பையின் சேரிகளில் கற்பிக்க ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் திட்டத்தில் பணியாற்ற அழைக்கப்பட்டார்.

மாதவ் சவான் 2004 முதல் 2008 வரை தேசிய ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தார் [4] இந்திய அரசாங்கத்தின் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் தலைமைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். மேலும், அதன் நான்கு அரையாண்டு கூட்டு மறுஆய்வு பணிகளில் உறுப்பினராக உள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

மாதவ் சவான் பழைய உலக சர்வதேசத் திரைப்படங்களின் தீவிர ரசிகர். தொழில்முறை புகைப்படக் கலைஞரான இவர், மராத்தியில் 'சம்பவ்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Murthy named to Pratham DC board". http://thedailyrecord.com/movers-and-shakers/2012/02/22/murthy-named-to-pratham-dc-board/. 
  2. "Dr. Madhav Chavan (SSIR)".
  3. "Madhav Chavan gets 'Skoll Award for Social Entrepreneurship'". 16 March 2011.
  4. "Putting education on fast-track- Hindustan Times". Archived from the original on 2010-05-27. பார்க்கப்பட்ட நாள் 2010-06-05.
  5. Sambhav. https://akshardhara.com/27769-sambhav-madhav-chavan-granthali-buy-marathi-books-online-at-akshardhara.html. பார்த்த நாள்: 31 May 2023. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவ்_சவான்&oldid=3937020" இலிருந்து மீள்விக்கப்பட்டது