மாஞ்சோ

ஆள்கூறுகள்: 27°47′N 86°43′E / 27.783°N 86.717°E / 27.783; 86.717
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாஞ்சோ என்பது நேபாளத்தில் வடகிழக்கே உள்ள கும்புப் பகுதியில் உள்ள ஒரு சிற்றூர். இது தூதுகோசி ஆற்றுப்பள்ளத்தாக்கில், பஃகுடிங்கு ஊருக்கு வடக்காகவும், சோர்சாலே ஊருக்குத் தெற்காகவும் அமைந்துள்ளது. இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து 2835 மீட்டர் உயரத்தில் உள்ளது[1]. இவ்வூருக்குச் சற்று வடக்கே சாகர் மாதா தேசியப் பூங்காவின் தடுப்புக்காவல் நுழைவாயில் உள்ளது[2][3]. இவ்வூரும் 1979 முதல் யுனெசுக்கோவின் உலகப் பாரம்பரியக் களம் ஆக இருக்கின்றது.

எவரெசுட்டு மலைக்கோ அதன் அடிவார முகாமுக்கோ போகும் மலையேறிகளும் கரட்டு நடையாளர்களும் இலுக்குலாவில் தொடங்கி மாஞ்சோ வழியாக அங்கு நின்று செல்லும் இடமாகவுள்ளது.[2]

இவ்வூரின் முதன்மையான பயன் சுற்றுலாத் துறையில் மலையேறிகளுக்கும், மலைப்ப்பாதைவழி நடக்கும் கரட்டு நடையாளர்களுக்கும் உணவக வசதியும் தங்குவிடுதிகள் வசதியும் தருவதாகும்.[2]

இதனையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

  1. [1] பரணிடப்பட்டது 2020-09-26 at the வந்தவழி இயந்திரம் Nepal Map Publisher Ltd.& பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9937-8062-1-3
  2. 2.0 2.1 2.2 Bradley, Mayhew; "Trekking in the Nepal Himalaya"; (2009); 9 edição; p 94 (map)+ pp 103-104; Lonely Planet; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781741041880
  3. Bezruchka Stephen; "Trekking in the Nepal: a traveler’s guide"; The Mountaineers ed.; Seattle; (2004); page 220; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89886-535-2

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாஞ்சோ&oldid=3440155" இலிருந்து மீள்விக்கப்பட்டது