பஃகுடிங்கு

ஆள்கூறுகள்: 27°45′N 86°43′E / 27.750°N 86.717°E / 27.750; 86.717
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஃகுடிங்கில் இருந்து இலுக்குலா நோக்கிச் செல்லும் கரட்டுப்பாதை.

பஃகுடிங்கு (Phakding) ஊர் நேபாளத்தில் கும்புப்பகுதியில் இருக்கின்றது. இது இலுக்குலா ஊருக்கு வடக்கேயும், மாஞ்சோ ஊருக்குத் தெற்கேயும் 2,160 மீட்டர் உயரத்தில் தூதுகோசி ஆற்றுப்பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஓர் ஊர்.[1][2][3] இவ்வூர் 1979 ஆம் ஆண்டுமுதல் யுனெசுக்கோவின் உலகப் பாரம்பரியக் களத்தில் ஒன்றாக விளங்குகின்றது.

இலுக்குலாவில் தொடங்கி வடக்கே செல்லும் கரட்டுப்பாதையில் பஃகுடிங்கே பெரும்பாலும் முதலில் நிற்கும் இடமாக இருக்கும். இப்பாதை எவரெசுட்டு அடிவார முகாமுக்குச் செல்லும் முக்கிய பாதையாகும்.[2]

இவ்வூரின் முக்கியப் பொருளாதாரம் சுற்றுலா மற்றும் மலையேறு பயணிகளுக்கு தங்குமிடம் உணவகம் ஆகியவற்றின்வழி ஈட்டுவதே.[2]

இதனையும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. [1] பரணிடப்பட்டது 2020-09-26 at the வந்தவழி இயந்திரம் Nepal Map Publisher Ltd.& பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9937-8062-1-3;
  2. 2.0 2.1 2.2 Bradley, Mayhew; "Trekking in the Nepal Himalaya"; (2009); 9 ed.; p. 94 (map)+ pp 103-104; Lonely Planet; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781741041880
  3. Bezruchka Stephen; "Trekking in the Nepal: a traveler’s guide"; The Mountaineers ed.; Seattle; (2004); page 220; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89886-535-2


"https://ta.wikipedia.org/w/index.php?title=பஃகுடிங்கு&oldid=3411571" இலிருந்து மீள்விக்கப்பட்டது