மரியா பசீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரியா பசீர்
தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில் மரியா பசீர், எறாத்து
பிறப்பு1970
தேசியம்ஆப்கானியர்
கல்விசட்டம்
படித்த கல்வி நிறுவனங்கள்காபுல் பல்கலைக்கழகம்
பணிதலைமை வழக்கரிஞர் அலுவலகம், எறாத்து நகரம்
செயற்பாட்டுக்
காலம்
4
பணியகம்Attorney General's Office, Afghanistan
அறியப்படுவதுஆப்கானித்தானின் முதல் பெண் வழக்கரிஞர் (2009 நிலவரப்படி)
பிள்ளைகள்சஜித் (மகன்)
யாசமான் (மகள்)
விருதுகள்சர்வதேச வீரதீர பெண்கள் விருது, 2011

மரியா பசீர் (Maria Bashir) ஆப்கானித்தானைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் ஆவார். இவர் 2009 நிலவரப்படி நாட்டில் இத்தகைய பதவியை வகித்த ஒரே பெண்ணாக இருக்கிறார்.[1] ஆப்கானித்தானின் அரசுப் பணியுடனான் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலான தனது அனுபவத்துடன் - தாலிபான், ஊழல் காவலர்கள், கொலை மிரட்டல்கள், கொலை முயற்சிகள் தோல்வி - இவை அனைத்தையும் இவர் சந்தித்துள்ளார். தாலிபான்கள் காலத்தில் இவர் தனது பணியைச் செய்யத் தடை விதிக்கப்பட்டார். தெருவில் செல்வது சட்டவிரோதமானது என்று ஆண்களால் பெண்கள் தடுக்கப்பட்ட போது இவர் தன் வீட்டில் சட்டவிரோதமாக அவர்களுக்கு பள்ளிப் படிப்பைச் சொல்லித்தந்தார்.[2] தலிபானுக்கு பிந்தைய காலத்தில், இவர் மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டார். 2006 இல் எறாத்து மாகாணத்தின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.[1][3] ஊழல் மற்றும் ஒடுக்குமுறையை ஒழிப்பதில் இவர் முக்கிய கவனம் செலுத்தி, 2010இல் மட்டும் 87 வழக்குகளை கையாண்டுள்ளார்.[4]

இவரது பணியை அங்கீகரித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை, தலைமைத்துவம், தைரியம், திறமை மற்றும் மற்றவர்களுக்காக தியாகம் செய்ய விருப்பம் காட்டும் உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு வழங்கப்படும் சர்வதேச வீரதீரப் பெண்கள் விருதை வழங்கியது. குறிப்பாக பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்காக, பெரும்பாலும் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அறித்தும் செயல்படும் பெண்களுக்கு இத்தைகைய விருது வழங்கப்படுகிறது.[5] இவர் 2011ல் டைம் இதழின் உலகில் மிகவும் செல்வாக்குள்ள 100 மனிதர்கள் அடங்கிய டைம் 100 என்ற பட்டியலில் இவர் இடம் பெற்றார்.

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

தனது குடும்பத்தில் மூத்த குழந்தையாக் இவர், பள்ளி நாட்களில் இருந்தே ஒரு பிரகாசமான மாணவியாக இருந்தார் . நாட்டில் பெண்கள் மீதான அணுகுமுறையில் மிகவும் கட்டுப்பாடு உள்ள நிலையில் பள்ளி நிலைக்கு அப்பாலும் படிக்க வேண்டுமென இவர் தனது மறைந்த தந்தையால் ஊக்குவிக்கப்பட்டார்.[6] தனது பட்டதாரிப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளில் மூன்று விருப்பங்களைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, அவைகள் அனைத்தின் கீழும் 'சட்டத்தை' நிரப்பினார்.[6] விண்ணப்பங்களை பரிசீலித்து ஒப்புதல் அளிக்கும் உயர்கல்வி அமைச்சர், இவரது உறுதியால் ஈர்க்கப்பட்டு, சட்டம் படிக்க ஒப்புதல் அளித்தார்.[6] இவர் 1994இல் காபுல் பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டு சட்டப் படிப்பில் பட்டம் பெற்றா. பின்னர் காபுலில் ஒரு வழக்கறிஞராக ஒரு வருடம் பயிற்சி பெற்றார்.[6]

சொந்த வாழ்க்கை[தொகு]

1996இல், பட்டம் பெற்ற பிறகு, சீனாவைச் சேர்ந்த ஒரு இறக்குமதி வணிகத்தின் உரிமையாளரை மணந்தார். மேலும் தனது நகரமான எறாத்துக்கு சென்றார்.[7] இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் ஜெர்மனியில் படிக்கிறார், மற்ற இருவர் (சஜத் மற்றும் யாசமன்) வீட்டிலேயே படிக்கிறார்கள். ஏனெனில் இவருக்கும் இவரது குடும்பத்திற்குமான மரண அச்சுறுத்தல்கள் முறையான பள்ளி படிப்பை கடினமாக்குகிறது.[8]

தலிபான்களின் கீழ்[தொகு]

தனது பயிற்சிக்குப் பிறகு, முதலில் காபுலிலும் பின்னர் எறாத்திலும் குற்றவியல் புலனாய்வாளராக தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[9] எறாத்துக்குச் சென்ற சிறிது காலத்தில், 1995இல், தலிபான்கள் நகரத்தை ஆக்கிரமித்து, பெண்களை வேலை செய்வதைத் தடுத்தனர். 2001ஆம் ஆண்டில் அமெரிக்கப் படையெடுப்பு நிகந்த பின்னர் பெண்கள் மீண்டும் வேலை செய்யத் தொடங்கும் வரை, இவரும் மற்ற பெண்களைப் போலவே வீட்டுக்குள் இருக்க வேண்டியிருந்தது, அந்த நேரத்தில் இவர் குற்றவியல் புலனாய்வாளராக தனது முந்தைய பாத்திரத்தை மீண்டும் தொடங்கினார்.[8] தாலிபான்கள், பெண்கள் படிக்க அல்லது வேலை செய்வதை சட்டவிரோதமாக்கி, அவர்கள் ஆண்களைச் சார்ந்து இருப்பதை உறுதி செய்தனர். இவர் பெண்களுக்கு இரகசியமாக, தனது இல்லத்தில், மாணவிகளுக்கு படிப்பதற்குத் தேவையான மற்ற பொருட்களை கடத்த ஆரம்பித்தார்.[7] தலிபான் ஆட்சி வீழ்ச்சியடையும் என்று இவர் நம்பினாள், இது நடந்தபோது பெண்கள் வேலைக்கு சேர தயாராக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.[8] தாலிபான்கள் இவருடைய செயல்பாடுகளை அறிந்திருந்தார்கள். இவர் என்ன செய்கிறார் என்பதை அறிய இரண்டு முறை இவரது கணவனை அழைத்து விளக்கம் கேட்டனர்.[7]

கொலை முயற்சிகள்[தொகு]

இவரது நியமனம் ஒரு பெண்ணாக இருந்ததால், தாலிபாங்களால் சரியாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் கணவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல இவருக்கு தைரியம் அளித்தது. இவர் பதவி விகக் கோரி, தொலைபேசி மிரட்டல்களைப் பெறத் தொடங்கினார்.[8] எறாத்தை சேர்ந்த சில அடிப்படை மதகுருமார்கள் பொது இடங்களில் வரம்பற்ற பெண்கள் மீது பத்வா வெளியிட்டனர்.[8] இதனால் பதறிப்போன இவர், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு மாநில அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். ஆனால் மாநில அதிகாரிகள் இவருடைய கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை, பின்னர் 2007 இல், இவருடைய குழந்தைகள் பொதுவாக வெளியே விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில், இவருடைய வீட்டிற்கு வெளியே ஒரு வெடிகுண்டு வெடித்தது. அப்போது மழை பெய்தது. அதனால் குழந்தைகள் வீட்டுக்குள் இருந்தனர்.[8] இவரது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதைக் கண்ட அமெரிக்க அரசு, ஆயுதம் ஏந்திய காவலர்களை நியமித்து. மற்றொரு சம்பவத்தில், இவரது பாதுகாவலரின் மகன் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகள் அவரை இவரது மகன் என்று தவறாக கருதினர். இது போன்ற நிகழ்வுகள் இவரது குழந்தைகளை வீட்டுப் படிப்பை எடுக்க கட்டாயப்படுத்தியது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Corbin, Jane (Aug 16, 2009). "What are we fighting for". பிபிசி. http://news.bbc.co.uk/panorama/hi/front_page/newsid_8204000/8204286.stm. 
  2. Hegarty, Stephanie (Apr 12, 2011). "Maria Bashir: Afghanistan's fearless female prosecutor". பிபிசி. https://www.bbc.co.uk/news/world-south-asia-13048968. 
  3. Kadirova, Diloro (Jan 28, 2010). "Interview with Ms. Maria Bashir, Chief Prosecutor of Herat Province". UNODC, Kabul. http://www.unodc.org/afghanistan/en/frontpage/2010/January/interview-maria-bashir.html. 
  4. Baker, Aryn (Apr 21, 2011). "The 2011 Time 100 : Maria Bashir, Law enforcer". Time இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 24, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130824020027/http://www.time.com/time/specials/packages/article/0,28804,2066367_2066369_2066487,00.html. 
  5. Office of the Spokesperson (Mar 4, 2011). "International Women of Courage Award recipients - 2011". United States Department of State.
  6. 6.0 6.1 6.2 6.3 Kadirova, Diloro (Jan 28, 2010). "Interview with Ms. Maria Bashir, Chief Prosecutor of Herat Province". UNODC, Kabul. http://www.unodc.org/afghanistan/en/frontpage/2010/January/interview-maria-bashir.html. 
  7. 7.0 7.1 7.2 Hegarty, Stephanie (Apr 12, 2011). "Maria Bashir: Afghanistan's fearless female prosecutor". பிபிசி. https://www.bbc.co.uk/news/world-south-asia-13048968. 
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 8.6 Garcia, Malcolm J. (January–February 2011). "Abusive Afghan Husbands Want This Woman Dead". Mother Jones. http://motherjones.com/politics/2011/01/self-immolation-afghanistan-maria-bashir-herat. 
  9. Garcia, Malcolm J. (January–February 2011). "Abusive Afghan Husbands Want This Woman Dead". Mother Jones. http://motherjones.com/politics/2011/01/self-immolation-afghanistan-maria-bashir-herat. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_பசீர்&oldid=3774948" இலிருந்து மீள்விக்கப்பட்டது