மயிலாசனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மயிலாசனத்தில் அமர்ந்திருக்கும் ஷாஜகான்
மயிலாசனத்தில் அவுரங்கசீப்

மயிலாசனம் (Peacock Throne, பாரசீகம்: تخت طاووس, Takht-e Tâvus) என்பது பாரம்பரியம் மிக்க ஒரு அரியணை ஆகும் இதன் உண்மையான பெயர் "Mughal Throne Of India" (இந்திய முகலாய அரியணை). இது முகலாய பேரரசில் மிகவும் பெயர் பெற்ற ஒரு அரியாசனம் ஆகும். இதை பின்னாளில் நாதிர்ஷா அஃப்சாரி என்கிற பாரசீக பேரரசன் கவர்ந்து சென்றான். இந்த பேரரசர் இதை பாரசீகத்திற்கு கவர்ந்து சென்ற பின்பு இது பாரசீகத்தின் அரியணை என்றும் அழைக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

இந்த மயிலாசனதிற்க்கு இந்த பெயர் இதன் தோற்றத்தினாலேயே வந்தது. இரண்டு மயில்கள் தொகை விரித்து நிற்பது போல இதன் தோற்றம் அமைந்திருந்தமையால் இதற்க்கு மயிலாசனம் என்ற பெயர் நிலைத்தது. மேலும் இதில் அனைத்து வகையான விலைமதிப்பற்ற வைரம், வைடூரியம், பவளம், நீளம் என அனைத்து வகையான ஆபரண கற்க்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இது 17ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசன் ஷாஜஹானுக்காக வடிவமைக்கப்பட்டு அது அவரது தலைநகரான தில்லியில் குடிமக்களை சந்திக்கும் உப்பரிகையின் மீது நிறுவபட்டிருந்தது. இதில் பேரரசர் ஷாஜஹான் புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை பதித்து வைத்திருந்தார். தில்லியில் 1665ஆம் ஆண்டு இதை பார்த்த பிரான்சு நாடு ஆபரண வணிகர் தவேர்நியர் மயிலாசனம் 6 அடிக்கு 4 அடி என்ற அளவில் சிலாகித்தலான இட வசதியுடன், நான்கு தங்க கால்களுடனும், இருபது முதல் இருபத்தைந்து அங்குலம் உயரத்துடனும் இருந்ததாகவும். ரோஜா வடிவிலான பன்னிரு தூண்களால் தாங்கப்பட்ட விதானத்தில் அமைக்கபடிருந்ததாகவும் விவரிக்கிறார். மேலும் இது அனைத்துவிதமான நவரத்தினங்கள் பதிக்கப்பட்டு ஜொலிக்கும் அழகுடன் 108 சிவப்புகற்க்களாலும் 116 மரகதங்களாலும் அலங்கரிக்கபடிருந்ததகவும் கூறியுள்ளார். இதன் பன்னிரு தூண்களும் விலை உயர்ந்த முத்துக்கள் பாதிக்கப்பட்டு அழகு நிறைந்திருந்ததாகவும் குறிபிட்டுள்ளார். 1747 இல் நாதிர் ஷாவின் மரணத்துக்குப் பின் இவ்வாசனம் என்ன ஆனது என்று தெளிவாகத் தெரியவில்லை.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மயிலாசனம்&oldid=1364381" இருந்து மீள்விக்கப்பட்டது