மன்ரீத் சோதி சோமேஷ்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்ரீத் சோதி சோமேஷ்வர்
பிறப்புபஞ்சாப்
தொழில்நாவலாசிரியர்
தேசியம்இந்தியன்
கல்வி நிலையம்இந்திய மேலாண்மை கழகம் கொல்கத்தா
வகைபுனைகதை
துணைவர்பிரசன்னா சோமேஸ்வர்
பிள்ளைகள்மாளவிகா சோமேஷ்வர்
இணையதளம்
manreetsodhisomeshwar.com

மன்ரீத் சோதி சோமேஷ்வர், இந்தியாவின் பஞ்சாபை சேர்ந்த எழுத்தாளராவார். தி லாங் வாக் ஹோம் மற்றும் தி தாஜ் சதி ஆகிய முக்கிய நாவல்களுக்காக பரவலாக அறியப்படுகிறார்.[1][2]

மன்ரீத் சோதி, இந்திய மேலாண்மை கழகம் கொல்கத்தாவின் முன்னாள் மாணவராவார். ஐஐஎம்-சி பட்டம் பெற்ற இவர், ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தில் குஜராத் மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்களுக்கான விற்பனை மேலாளராக பணிபுரிந்துள்ளார். இவரது எழுத்து வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பாக பல்வேறு சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.[3]

சோமேஷ்வரின் முதல் நாவலான எர்னிங் த லாண்டரி ஸ்ட்ரைப்ஸ் 2006 ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அவரது இரண்டாவது புத்தகமான, தி லாங் வாக் ஹோம் 2009 ம் ஆண்டில் ஹார்பர்காலின்ஸ் இந்தியா நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. விறுவிறுப்பான நாவலான தி தாஜ் கான்ஸ்பிரசி, அவரது மூன்றாவது நாவல் மற்றும் [4] 2012 ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

படைப்புகள்[தொகு]

புதினங்கள்[தொகு]

  • எர்னிங் த லாண்டரி ஸ்ட்ரைப்ஸ் (2006)
  • தி லாங் வாக் ஹோம் (2009)
  • தாஜ் சதி (2012)
  • கோஹினூர் வேட்டை (2013)
  • மயில் சிம்மாசனம் தீர்க்கதரிசனம் - இன்னும் வெளியிடப்படவில்லை
  • ஆயிரம் சூரியன்களின் கதிர்வீச்சு (2019)

மேற்கோள்கள்[தொகு]

  1. Sana Amirjanu Narayan (15 June 2012). "Weaving tales around the Taj". தி இந்து. http://www.thehindu.com/life-and-style/metroplus/article3532655.ece. பார்த்த நாள்: 20 June 2012. 
  2. Khushwant Singh (9 May 2009). "TALKING TO THE NAVEL". The Telegraph. http://www.telegraphindia.com/1090509/jsp/opinion/story_10932750.jsp. பார்த்த நாள்: 20 June 2012. 
  3. "Shades of grey". http://www.thehindu.com/arts/books/article3892511.ece. 
  4. "Taj on alert". mid-day (in ஆங்கிலம்). 2012-09-12. பார்க்கப்பட்ட நாள் 2020-06-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்ரீத்_சோதி_சோமேஷ்வர்&oldid=3741894" இலிருந்து மீள்விக்கப்பட்டது