மண்டு தேப்நாத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண்டு தேப்நாத்து
Mantu Debnath
தனிநபர் தகவல்
குடியுரிமைஇந்தியா
வசிப்பிடம்அகர்த்தலா, திரிபுரா, இந்தியா
விளையாட்டு
விளையாட்டுசீருடற்பயிற்சி விளையாட்டு

மண்டு தேப்நாத்து (Mantu Debnath) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் தலைநகரமான அகர்த்தலாவைச் சேர்ந்த ஒரு சீருடற்பயிற்சி விளையாட்டு வீரராவார். மோண்டு தேப்நாத் என்றும் இவர் பெயர் உச்சரிக்கப்படுகிறது. [1][2]

தேசிய அளவிலான போட்டிகளில் இவர் தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார். [1] 1969 ஆம் ஆண்டு உருசியாவில் நடந்த அனைத்துலக சீருடற்பயிற்சிப் போட்டியில் வென்ற முதல் இந்திய சீருடற்பயிற்சி விளையாட்டு வீரர் என்ற சிறப்புக்குரியவர் என்ற பெருமையை தேப்நாத் பெற்றுள்ளார். [3][4]

சீருடற்பயிற்சி விளையாட்டில் இவர் செய்த சாதனைகளுக்காக இந்திய அரசாங்கம் 1975 ஆம் ஆண்டு மோண்டு தேப்நாத்திற்கு அருச்சுனா விருதை வழங்கி சிறப்பு சேர்த்தது. [1][5][6] சாம் லாலுக்குப் பின்னர் சீருடற்பயிற்சி விளையாட்டுக்காக அருச்சுனா விருது பெற்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. [6][5] திரிபுராவில் அருச்சுனா விருது பெற்ற முதலாவது நபர் மோண்டு தேபநாத் என்பது இவருக்குக் கிடைத்த கூடுதல் பெருமையாகும். [1][4] அரியானா மாநிலத்தைச் சேர்ந்த தலிப் சிங் தேப்நாத்திற்கு பயிற்சியாளராக இருந்தார். [5]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Flipping through the pages of Tripura's gymnastics glory - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
  2. "Battling odds to make name in sport". Deccan Herald (in ஆங்கிலம்). 2016-09-10. பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
  3. "How a giant leap by Dipa Karmakar bolstered the aspirations of tiny Tripura - Sports News , Firstpost". Firstpost. 2016-04-26. பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
  4. 4.0 4.1 "Leap to gold". The Indian Express (in ஆங்கிலம்). 2014-08-19. பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
  5. 5.0 5.1 5.2 "Dipa revives gymnastics legacy in Tripura – Mysuru Today" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. 6.0 6.1 "Arjuna Award Winners 2020 | List of Previous Arjuna Awardees By Year". The Prize Winner (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-02-06. Archived from the original on 2020-08-15. பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டு_தேப்நாத்து&oldid=3590657" இலிருந்து மீள்விக்கப்பட்டது