மணியம்பாடி வெங்கட்ரமண சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு வெங்கட்ரமண சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தர்மபுரி
அமைவிடம்:மணியம்பாடி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பாப்பிரெட்டிப்பட்டி
மக்களவைத் தொகுதி:தர்மபுரி
கோயில் தகவல்
மூலவர்:வெங்கட்ரமணசுவாமி
தாயார்:மங்கம்மாள்
சிறப்புத் திருவிழாக்கள்:பங்குனித் தேரோட்டம், வைகுண்ட ஏகாதசி, 5 சனிக்கிழமைகள்
வரலாறு
கட்டிய நாள்:கி.பி. 1285[சான்று தேவை]
அமைத்தவர்:பையம்மா ராணி

மணியம்பாடி வெங்கட்ரமண சுவாமி கோயில் தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் அடுத்த மணியம்பாடி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1] இக்கோயில் மணியம்பாடியில் மூக்கனூர் மலை அடிவாரத்தில், ஒன்பது ஏக்கர் பரப்பளவில், உள்ளது.

வரலாறு[தொகு]

இக்கோயில் 1285 ஆம் ஆண்டு, பையம்மா ராணி என்பவரால் கட்டப்பட்டதாக கிழக்குபுறம் உள்ள கல்வெட்டு செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் வெங்கட்ரமணசுவாமி, மங்கம்மாள் சன்னதிகளும், துளசியம்மாள் உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் 5 சனிக்கிழமைகள் திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் பங்குனி உத்திர தேரோட்டவிழா நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் அபிஷேகம், பூசைகள் நடைபெறுகிறது. கிருஷ்ணஜெயந்தி, நவராத்திரி விழா ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நாள்தோறும் ஒரு கால பூஜைகள் நடந்து வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)