போர்லாண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போர்லாண்ட் மென்பொருள் நிறுவனம் (முன்னர் பொர்லாண்ட் சர்வதேச நிறுவனம்) ஸ்கொட்ஸ் பள்ளத்தாகு, கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. இது நன்கு பிரசித்தி பெற்ற ரேபோ பஸ்கால் நிரலாக்கல் மொழியானால் வளர்ந்த இன்றைய டெல்பி மொழியினால் பிரபலமாகியுள்ளது.

80களில் உருவாக்கம்[தொகு]

1981 ஆகஸ்டில் ஓர் மிகச்சிறிய நிறுவனமாக அயர்லாந்தில் மூன்று டென்மார்க் நாட்டவர்களால் ஆரம்பிக்கப் பட்டது.

போர்லாண்ட் சர்வதேசம் ஓர் தனியர் நிறுவனம் என்ற நிலையிலிருந்து மாறி பொது நிறுவனமாக 2 மே 1983 இல் கலிபோர்னியாவில் ஆரம்பிக்கப் பட்டது.பிலிப்பி ஹான் என்னும் அமெரிக்கரைத் தலைவராகக் கொண்டு இந்நிறுவனம் ஆரம்பிக்கப் பட்டது.

பிலிப்பி ஹான் தொடர்ச்சியாக மென்பொருட்களை விருத்தி செய்யும் கருவிகளை வெளிவிடுவதன் மூலம் போர்லாண்டை வெற்றி கரமாக வழிநடத்தினார். இதன் முதலாவது பதிப்பான ரேபோ பஸ்கால் அண்டரஸ் ஹிஜல்ஸ்பேர்க் இனால தயாரிக்கப் பட்டது. 1984 இல் கணினியின் நினைவகத்தில் இருந்து பணியாற்றும் கணிப்பான், நேர ஒழுங்கமைப்பு, குறிப்புப் புத்தம் ஆகியன உள்ள சைட்கிக் en:SideKick மென்பொருளை உருவாக்கினார்கள். 1987 செப்டம்பரில் அனாசா மென்பொருள் நிறுவனத்தை அதன் தகவற் தளக் கருவியான பரடொக்ஸ் உடன் வாங்கியது. 1989 இல் வரைபடங்களைக் காட்டும் குவாட்டறோபுறோ en:Quattro Pro எனும் மென்பொருளையும் உருவாக்கினார்கள்.

ரேபோ பஸ்கால் வெளிவரமுன்னர் நிரலாக்கல் மொழிகளில் ஆதிக்கம் செலுத்திய மைக்ரோசாப்ட் போர்லாண்டின் ரேபோ பஸ்கால் வருகையைத் தொடர்ந்து மைக்ரோசாப்ட் இயங்குதளங்கள், பாவனைக்குதவும் மென்பொருட்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கினர் ஏனெனில் ரேபோ பஸ்காலின் கூட்டிணைந்த மென்பொருளை உருவாக்கும் சூழலானது மைக்ரோசாப்ட்டின் தூய வரிக்கு வரி மொழிபெயர்க்கும் இண்டபிறிட்டர், மற்றும் கம்பைலர்கள் en:Compilers, விடச் சிறந்ததாக இருந்தது.

90களில் எழுச்சியும் வீழ்ச்சியும்[தொகு]

1981 செப்டெம்பரில் போர்லாண்ட் அஷன்ரேற் நிறுவனத்தில் இருந்து dBase ஐ வாங்கிக் கொண்டது. இதை வாங்கும் போது கொடுத்த அபரிமிதமான விலையே தொடர்ந்த நிதி நெருக்கடிகளிற்குக் காரணமாக அமைந்தது. விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல் மைக்ரோசாப்ட்டும் இதற்குப் போட்டியாக மைக்ரோசாப்ட் அக்ஸஸ் என்னும் மென்பொருளை வெளியிடுவதோடு நிற்காது dBase உடன் ஒத்தியங்கிய FoxPro ஐயும் வாங்கி போர்லாண்டை' விட விலைக்குறைப்புச் செய்து விற்பனை செய்தனர்.

வர்த்தகரீதியான சந்தைப் படுத்தலைக் கொண்டிருந்த மைக்ரோசாப்ட்டை விட போர்லாண்ட்டின் சி++ நிரலாக்கல் மொழி மற்றும் ObjectPAL நிரலாக்கல் மொழியுடன் விருத்தி செய்யப்பட்ட பரடொக்ஸ் மைக்ரோசாப்ட் அக்ஸஸ் இலும் சிறந்ததாகக் கருதப் பட்டது.

90 களின் நடுப்பகுதியில் போர்லாண்ட் மென்பொருட் கருவிகளைச் செய்யும் நிலையில் முதலாமிடத்தில் இருந்து கீழ் தள்ளப்பட்டது. இதற்குச் சிலர் மைக்ரோசாப்ட்டே காரணம் எனக் குறை கூறினர்.

1995 இதன் தலைவரான பிலிப்பி ஹானைப் பதவி நீக்கம் செய்தனர்.

அண்டரஸ் ஹிஜல்ஸ்பேக்கினால் டெல்பி துரித மென்பொருளை உருவாக்கும் கருவியானது அறிமுகம் செய்யப் பட்டது.

தற்போதைய தயாரிப்புக்கள்[தொகு]

போர்லாண்டின் தற்போதைய தயாரிப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்லாண்ட்&oldid=1342682" இலிருந்து மீள்விக்கப்பட்டது