போதாவூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போதாவூர்
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்2,594
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

போதாவூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் தாலுக்காவில் அந்தநல்லூர் வட்டார போதாவூர் ஊராட்சிக்குட்பட்ட ஒரு கிராமம்.[1][2]

மக்கள் தொகை விவரம்[தொகு]

2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, போதாவூர் 2,594 மக்கள்தொகை இதில் 1,301 ஆண்களும் 1,293 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் 994 மற்றும் கல்வியறிவு விகிதம் 61.79 ஆகும்

தேசிய வாழை ஆராய்ச்சி மையம்[தொகு]

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் பரிந்துரையின்படி 1993 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 21 ஆம் நாளன்று தேதி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் (National Research Center for Banana – NRCB) போதாவூரில் ஆரம்பிக்கப்பட்டது.[3]இது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் ஒரு பிரிவாகும்.

கண்டுபிடிப்பு[தொகு]

இந்த மையம் வாழைக்கு என நுண் சத்துக்கள் கொண்ட தாவர வளர்ச்சி ஊக்கி ஒன்றை கண்டுபிடித்து உள்ளது. இதற்கு, “வாழை சக்தி” என்று பெயர். இந்த தாவர வளர்ச்சி ஊக்கியில் ஜிங்க், இரும்பு, போரான், செம்பு போன்ற தாதுக்கள் மட்டும் அல்லாமல், மற்ற நுண் சத்துக்களும் நிறைந்துள்ளன.

முக்கிய பணிகள்[தொகு]

  • வாழை உற்பத்தி மற்றும் பயன்பாட்டினை அதிகரிக்கத் தக்க தொழில்நுட்பங்களை மேம்படுத்த அடிப்படை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்.
  • பழங்கால மற்றும் உயிர்த் தொழில்நுட்ப முறைகளிலிருந்து மேம்படுத்தப்பட்ட இரகங்களை உருவாக்குதல் மற்றும் வேறுபாடுகளைப் பராமரித்தல்.
  • வாழை பற்றிய அனைத்துத் தகவல்களுக்கும் களஞ்சியமாகவும் உற்பத்தித்திறன் மற்றும் மகசூல் அளவை அதிகரிக்கும் தகவல்களைப் பரப்பவும் ,தேசிய வாழை பண்பகப் பண்ணையாகவும் செயல்படுகிறது.
  • வாழையில் இடம் சார்ந்த இரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்கவும், அவற்றில் ஏற்படும் பிரச்சினைகளைக் களையவும் ஆராய்ச்சியினை ஒருங்கிணைத்து வழிநடத்துவதாகவும் இந்நிலையம் திகழ்கின்றது.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. National Research Center for Banana – NRCB
"https://ta.wikipedia.org/w/index.php?title=போதாவூர்&oldid=3726223" இலிருந்து மீள்விக்கப்பட்டது