பொருளாதாரப் புலனாய்வுக் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொருளாதாரப் புலனாய்வுக் குழு (Economic Intelligence Council) இந்தியப் பொருளாதாரப் புலனாய்வு அமைப்புகளின் தலைமையான அமைப்பாகும். இக்குழு இந்தியா முழுவதும் 30 மண்டலப் புலனாய்வுக் குழுக்களைக் கொண்டுள்ளது. இக்குழு இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.[1] It was formed in 1990.[2]

பணிகள்[தொகு]

இந்தியாவில் உளவு, கடத்தல், பணமோசடி, வரி ஏய்ப்பு மற்றும் பொருளாதார குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு பொறுப்பான அரசு புலனாய்வு அமைப்புகள் மற்றும் விசாரணை அமைப்புகளை ஒருங்கிணைத்தல், மூலோபாயம் மற்றும் தகவல் பகிர்வுக்கு பொருளாதாரப் புலனாய்வுக் குழு பொறுப்பாகும்.[1] இந்தியாவின் நிதியமைச்சர் மற்றும் இந்திய அமைச்சரவைக் குழ நிதித் துறையை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் மற்றும் பொருளாதாரக் குற்றங்களை எதிர்த்துப் போராடுகிறது. [1]

குழுவின் உறுப்பினர்கள்[தொகு]

பொருளாதாரப் புலனாய்வுக் குழுவின் தலைவராக நிதி அமைச்சர் செயல்படுகிறார்.[1]மத்திய பொருளாதார புலனாய்வு பணியகத்தின் துணை இயக்குநர் இக்குழுவின் செயலாராக செயல்படுபார்.[2][3] இக்குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு:

  1. ஆளுநர், இந்திய ரிசர்வ் வங்கி
  2. தலைவர், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்
  3. இயக்குநர், வருவாய் புலனாய்வு இயக்குநரகம்
  4. இயக்குநர், நடுவண் புலனாய்வுச் செயலகம்
  5. இயக்குநர், தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு
  6. செயலாளர், வருவாய்த் துறை, நிதி அமைச்சகம்
  7. செயலாளர், பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம்
  8. கூடுதல் செயலாளர், வங்கித் துறை
  9. தலைவர், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்
  10. தலைவர், மத்திய நேரடி வரிகள் வாரியம்
  11. இயக்குனர், அமலாக்க இயக்குனரகம்

இக்குழுவின் கூட்டங்களுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய உளவுத்துறையின் இயக்குநர் மற்றும் வெளிநாட்டு வணிகஙகளுக்கான தலைமை இயக்குனர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Economic Intelligence Council". National Informatics Centre. Archived from the original on 12 September 2011. பார்க்கப்பட்ட நாள் 2009-07-18.
  2. 2.0 2.1 Central Economic Intelligence Bureau – Ministry of Finance. Ministry of Finance. http://finmin.nic.in/the_ministry/dept_eco_affairs/budget/annual_report/9596rev5.PDF. பார்த்த நாள்: 2009-07-18. 
  3. "Central Economic Intelligence Bureau". National Informatics Centre. Archived from the original on 5 April 2016. பார்க்கப்பட்ட நாள் 2009-07-18.