பொட்டாசியம் பெர்ரோ ஆக்சலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் பெர்ரோ ஆக்சலேட்டு
Potassium ferrooxalate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் இரும்பு(II) ஆக்சலேட்டு
வேறு பெயர்கள்
பொட்டாசியம் பெர்ரோ ஆக்சலேட்டு
பொட்டாசியம் பிசு ஆக்சலேட்டோ பெர்ரேட்டு(II)
இனங்காட்டிகள்
28288-62-2 Y
InChI
  • InChI=1S/2C2H2O4.Fe.2K/c2*3-1(4)2(5)6;;;/h2*(H,3,4)(H,5,6);;;/q;;+2;2*+1/p-4
    Key: LDRXJDFKHOUYMS-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [K+].[K+].O=C(-C(=O)O1)O[Fe-2]12OC(-C(=O)O2)=O
பண்புகள்
K
2
[Fe(C
2
O
4
)
2
] (நீரிலி)
K
2
[Fe(C
2
O
4
)
2
]·2H
2
O
(இருநீரேற்று)
தோற்றம் ஆரஞ்சு-மஞ்சள் திண்மம் (நீரிலி), தங்க-மஞ்சள் படிகங்கள் (இருநீரேற்று) [1]
உருகுநிலை 470 °செல்சியசு வெப்பநிலையில் சிதைவடையும் [1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பொட்டாசியம் பெர்ரோ ஆக்சலேட்டு (Potassium ferrooxalate) என்பது K2Fe(C2O4)2(H2O)x என்ற பொது மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் பிசு ஆக்சலேட்டோ பெர்ரேட்டு(II) என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. இடை உலோக ஆக்சலேட்டு அணைவு இந்த உப்பில் எதிர்மின் அயனியாக உள்ளது. இந்த அயனியில் இரும்பு +2 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் ஆக்சலேட்டு மற்றும் தண்ணீருடன் பிணைக்கப்பட்டுள்ளது.[2]

நீரற்ற K2Fe(C2O4)2 இரும்பு குளோரைடிலிருந்து நீர் வெப்ப முறைகளால் தயாரிக்கப்படுகிறது. இச்சேர்மம் முக்கோணப் பட்டக Fe(C2O4)3 மையங்களைக் கொண்ட ஓர் ஒருங்கிணைப்பு பலபடியாகும். பாதிக்கு மேற்பட்ட ஆக்சலேட்டு ஈந்தணைவிகள் பாலமாக இணைந்துள்ளன.[3]

இருநீரேற்று[தொகு]

K2Fe(C2O4)2(H2O)2 என்ற சேர்மமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.[1] ஆனால் இது சரிபார்க்கப்படவில்லை. பொட்டாசியம் பெர்ரி ஆக்சலேட்டு K3[Fe(C2O4)3] கரைசல் ஒளியால் சிதைக்கப்படும் போது பொட்டாசியம் பெர்ரோ ஆக்சலேட்டு உருவாகும் என நம்பப்படுகிறது. ஒளிக்கதிர் விளைவுமானி அளவீட்டு முறையில் இது ஒரு பொதுவான முறையாகும். அல்லது 296 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் பொட்டாசியம் பெர்ரி ஆக்சலேட்டு சூடாக்கப்பட்டு பொட்டாசியம் பெர்ரோ ஆக்சலேட்டு தயாரிக்கப்படுகிறது.[1] நீரற்ற உப்பு தண்ணிரில் கரைந்து ஆரஞ்சு-மஞ்சள் மற்றும் சிவப்பு நிற கரைசலை கொடுக்கிறது. இருநீரேற்று K2Fe(C2O4)2(H2O)2 படிகங்கள் தங்க மஞ்சள் நிறத்தில் உள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 J. Ladriere (1992): "Mössbauer study on the thermal decomposition of potassium tris (oxalato) ferrate(III) trihydrate and bis (oxalato) ferrate(II) dihydrate". Hyperfine Interactions, volume 70, issue 1, pages 1095–1098. எஆசு:10.1007/BF02397520
  2. Amanchar, Sara; Schweitzer, Thierry; Mazet, Thomas; Malaman, Bernard; Diop, Leopold V. B.; Francois, Michel (2023). "Structure of the new iron(II) oxalate potassium salt K2Fe[(C2O4)2(H2O)2]·0.18H2O". Acta Crystallographica Section B Structural Science, Crystal Engineering and Materials 79 (4): 263–270. doi:10.1107/S2052520623004602. பப்மெட்:37347140. https://hal.science/hal-04185823. 
  3. Hursthouse, Michael B.; Light, Mark E.; Price, Daniel J. (2004). "One-Dimensional Magnetism in Anhydrous Iron and Cobalt Ternary Oxalates with Rare Trigonal-Prismatic Metal Coordination Environment". Angewandte Chemie International Edition 43 (4): 472–475. doi:10.1002/anie.200352406. பப்மெட்:14735538.