பொட்டங்கி ஒல்லார் கடாபா மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பொட்டங்கி ஒல்லார் கடாபா | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | ஒரிஸ்ஸா | |
| பேசுபவர்கள்: | 15,000 (2000) | |
| மொழிக் குடும்பம்: | திராவிடம் நடுத் திராவிடம் பார்ஜி-கடாபா பொட்டங்கி ஒல்லார் கடாபா |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | gdb | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
ஒல்லார் பொட்டாங்கி கடாபா மொழி பார்ஜி-கடாபா பிரிவைச் சேர்ந்த ஒரு நடுத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஒரிஸ்ஸா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 15,000 மக்களால் பேசப்படுகிறது. ஒல்லார் கடாபா, ஒல்லாரி, ஒல்லாரோ, ஹல்லாரி, ஹொல்லார் கட்பாஸ், சான் கடாபா, கடாபா, சானோ, கோண்டேகார், கோண்ட்கோர் போன்ற மாற்றுப் பெயர்களிலும் இது குறிப்பிடப்பட்டு வருகிறது. இது புழங்கும் இரண்டு மாநிலங்களிலுமாக 5 கிளைமொழிகள் அறியப்பட்டுள்ளன.
ஒரியா எழுத்து, தெலுங்கு எழுத்து ஆகியவற்றில் எழுதப்பட்டு வரும் இம் மொழியைப் பேசுவோர் அன்றாட நடவடிக்கைகளின் பல துறைகளிலும் தங்கள் மொழியையே பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் தமது மாநிலத்தின் முதன்மை மொழிகளில் சிறப்பான அறிவு பெற்றவர்கள் அல்ல.