பேச்சு:வருடு ஊடுருவு நுண்ணோக்கி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெயர் மாற்றக் கோரிக்கை:[தொகு]


வாருதல் வகை புரை ஊடுருவு மின்னோட்ட நுண்ணோக்கி எனும் பெயர் மிகவும் நீளமான ஒன்றாகவும் அதனை விவரிக்கும் விதமாகவும் உள்ளது. ஒரு பொருளுக்குப் பெயரிடுகையில் அதன் பொருள் விளங்குவதைக் காட்டிலும் அதனை சுருக்கமாக அழைக்கும் முறைமையே கையாளப்பட வேண்டும் என்பது திரு.மா.நன்னன் அவர்களின் கருத்து. அதை நான் ஒப்புகிறேன். ஆனால் விக்கியின் கொள்கை என்னவென்று அடியேன் அறிகிலம். எனவே உங்கள் அனைவரின் கருத்தும் தேவை. அதைக் கொண்டு இந்த சாதனத்திற்கு இப்பெயரே இருக்கட்டுமா அல்லது சுருக்கமாக வேறொரு பெயரிடலாமா என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இது குறித்து பொதுவான ஓர் அறிவிப்பை நிர்வாகி அவர்கள் அனைவருக்கும் வெளியிட வேண்டுகிறேன். அதாவது 'தமிழில் பெயரிடும்போது அப்பெயர் அதன் பயன்பாட்டை விளக்கும் வகையில் இருக்க வேண்டுமா அல்லது அதனை எளிதில் நினைவு வைத்துக் கொண்டு செயல்படுவது போல் இருக்க வேண்டுமா'--சூர்ய பிரகாசு.ச.அ. 10:40, 2 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

தலைப்பு சுருக்கமாக இருப்பது எப்போதுமே விரும்பத்தக்கது. இக்கட்டுரையின் தலைப்பில் மின்னோட்ட என்பது தேவையற்றது.--Kanags \உரையாடுக 11:12, 2 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
கட்டாயம் சுருக்கமாகத்தான் இருக்க வேண்டும். வருடு ஊடுருவு நுண்ணோக்கி என்பது போதும்.வ. ஊ.நு என்றும் சொல்லிப்பழக வேண்டும். ஒரு 5-10 முறை சொன்னால் பழகிவிடும். --செல்வா 03:11, 3 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
தமிழில் 2000-2500 ஆண்டுகளாகப் பெயரிடும் மரபு உள்ளது. முதலில் தோன்றிய பெயரை யாரும் இடலாம், மிக விரைவாக அது திருந்தி சுருங்கிவிடும். பலரும் அறியாதது என்னவென்றால், பெயரிடும்பொழுது ஒரு பண்பைச் சுட்டி இட்டால் போதும். கரி என்பது யானைக்கு ஒரு பெயர். கருப்பாக இருப்பதால். கரி என்றால் கரிய நிறத்தில் உள்ள அடுப்புக்கரியையும் குறிக்கும். யானைக்குக் வெறும் கரி என்று மட்டும் பெயரிடலாமா, பெரிய காது உண்டே, பெரிய விலங்காயிற்றே என்றெல்லாம் கவலைப் பட வேண்டியதில்லை. கோடு என்னும் எயிறு (பல்) உள்ளதால் கோட்டுமா என்று பெயர்.. இப்படி. சொல் என்பது ஒரு சுட்டு (சிறப்பானதைச் சுட்டினால் போதும்). --செல்வா 03:22, 3 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
தலைப்பை சுருக்கலாமா?--செல்வா 06:04, 7 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
ஆம். வருடு ஊடுருவு நுண்ணோக்கி என்பதே எளிதில் நினைவில் கொள்வது போல உள்ளது.--சோடாபாட்டில் 07:23, 7 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
"வருடு ஊடுருவு நுண்ணோக்கி" என்பதே சுருக்கமாகவும் நன்றாகவும் இருக்கிறது. --இரா.செல்வராசு 13:18, 7 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]