பேச்சு:வண்ணாத்திக்குருவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலையாளத்தில் இந்தக்குருவியின் பெயர் மண்ணாத்திப்புள் என்பது குறிப்பிடத்தக்கது. புள் என்ற சொல் இன்னும் பயன்பாட்டில் உள்ளது கண்டு மகிழ்ச்சி. -- சுந்தர் \பேச்சு 05:28, 29 மே 2010 (UTC)[பதிலளி]

Dravidian Languages like Telugu, kannada and Malayalam are backup languages for ancient Tamil :) --ரவி 05:40, 29 மே 2010 (UTC)[பதிலளி]
அந்தப் பதிவின் தலைப்பு சற்று உறுத்தலானது, குறிப்பாக இன்றைய சூழலில். மொழிகளின் படிவளர்ச்சிக்கும் உயிரினங்களின் படிவளர்ச்சிக்கும் சில வேறுபாடுகள் உண்டு. (வேறு நிலையில் பல ஒற்றுமைகளும் உண்டு.) மொழிகளின் வளர்ச்சி நிலைகளில் இந்த மொழியின் தோற்றம் இப்போது தொடங்குகிறது என்று சொல்லும் குரோமோசோம் எண்ணிக்கை போன்ற அளவை இல்லை என்பது எனது புரிதல். அதனால் திராவிட மொழிகள் அனைத்தையும் உறவு மொழிகளாக மட்டும் கொள்ளுதல் நல்லது. அம்மொழி பேசுபவர்களின் உணர்வும் இதனால் அச்சுறுத்தப்படாது. மற்றபடி அப்பதிவிலுள்ள சில காட்டுகள் நன்று. -- சுந்தர் \பேச்சு 06:36, 29 மே 2010 (UTC)[பதிலளி]
சரி சுந்தர். --ரவி 07:19, 29 மே 2010 (UTC)[பதிலளி]

தலைப்பு குறித்த கருத்து[தொகு]

தமிழ்நாட்டிலுள்ள பறவை ஆர்வலர்களும் எழுத்தாளர்களும் ஒருமித்த கருத்தாக வைப்பது, வண்ணாத்தி(க்குருவி), (தோட்டக்)கள்ளன், கள்ள(ப்பருந்து) இது போன்று தொழிலையோ சாதியையோ அடையாளப்படுத்தும் பெயர்களைக் கூடுமான வரையில் தவிர்த்தல் நலம் என்பதே. இக்கருத்தின் அடிப்படையில் தலைப்பை குண்டுக்கரிச்சான்[1]. என்று மாற்றலாம். மாற்றுக் கருத்து இருந்தால் வைக்கவும்.--PARITHIMATHI (பேச்சு) 17:20, 4 சூலை 2021 (UTC)[பதிலளி]

வண்ணாத்திக் குருவி என்ற தலைப்பு பொருத்தமாகத் தோன்றவில்லை. தென்னிலங்கையில் இதன் பெயர் பாலகன்.--பாஹிம் (பேச்சு) 06:12, 9 செப்டம்பர் 2021 (UTC)

மேற்கோள்[தொகு]

  1. இராமநாதபுரம் வன உயிரின கோட்டம் (தமிழ்நாடு வனத்துறை). இராமநாதபுரம் மாவட்டப் பறவைகள் - அறிமுகக் களக்கையேடு. பக். 195