பேச்சு:மு. ஸ்ரீனிவாசன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தினேசு, நீங்கள் எதிர்பார்க்கும் கூடுதல் உள்ளடக்கம் என்ன?--இரவி (பேச்சு) 12:36, 16 மே 2014 (UTC)[பதிலளி]

இரவி, இக்கட்டுரை அடிப்படை ஆதாரமாக சொல்லப்படும் மடல் எங்குள்ளது? விக்கிப்பீடியாவில் இவ்வாறு தனியொருவருக்கு கொடுக்கப்பட்ட மடலை ஆதாரமாகக் கொண்டு கட்டுரைகளை உருவாக்கும் கொள்கைகள் உள்ளனவா? இக்கட்டுரையில் இவர் இரண்டு நூல்கள் எழுதியுள்ளார் என்ற தகவல் மட்டுமே உள்ளது, அவற்றை குறித்த வேறெந்த தகவலும் இல்லை. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 02:04, 17 மே 2014 (UTC)[பதிலளி]
தினேசு, நீங்கள் தவறான வார்ப்புருவை இணைத்திருக்கிறீர்களோ என்று சந்தேகப்படுகிறேன். இவ்வெழுத்தாளர் பற்றிய கட்டுரை விக்கிப்பீடியாவில் இருப்பதற்கு தகுதிகள் போதுமானவையாகவே உள்ளன. இரண்டு நூல்கள் பற்றிய அடிப்படைத் தகவல்கள் (நூல் பெயர்கள்) உள்ளன தானே. வேறு என்ன தகவல்கள் அடிப்படையாக இருக்க வேண்டும். மேற்கோள்கள் போதியளவு இல்லை என்பது உண்மையே. ஆனாலும், தமிழ்நாடு அரசின் விருது பெற்றிருக்கிறார். அதற்கான ஆதாரமும் தரப்பட்டுள்ளது. இவ்வாறான கட்டுரைகளை நீக்க வெளிக்கிட்டால், விக்கியில் உள்ள பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளை நீக்க வேண்டி வரும். விக்கியில் பல எழுத்தாளர்களுக்கு நூல்களின் பட்டியல்களே தரப்பட்டுள்ளன. இவை போதுமானவை இல்லையா?--Kanags \உரையாடுக 02:21, 17 மே 2014 (UTC)[பதிலளி]
நீக்கல் வார்ப்புருவை நீக்கியுள்ளேன்.--Kanags \உரையாடுக 02:28, 17 மே 2014 (UTC)[பதிலளி]
தரப்பட்டுள்ள மேற்கோள் ஒரு அரசு ஆவணம் என்பதால் நம்பகத்தன்மை உடையதே. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டால் ஒரு படி அளிப்பார்கள் என்று எண்ணுகிறேன். இல்லை, பயனர்:Theni.M.Subramani , இக்கடிதத்தை எங்காவது பொதுப்பட பதிவேற்றினாலும் உதவும். தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய குறிப்பிடத்தக்கமை உரையாடலுக்கு பகுப்பு பேச்சு:தமிழ் எழுத்தாளர்கள் வாருங்கள்.--இரவி (பேச்சு) 13:08, 17 மே 2014 (UTC)[பதிலளி]
தற்பொழுது விக்கிப்பீடியா கட்டுரைபோல் காட்சியளிக்கின்றது. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:11, 17 மே 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மு._ஸ்ரீனிவாசன்&oldid=1661386" இலிருந்து மீள்விக்கப்பட்டது