பேச்சு:முத்துநகர் கிராம அலுவலர் பிரிவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் உள்ள அட்டவணையில் கிறீஸ்தவர் என்று கொடுக்கப்பட்டுள்ளது. இது இலங்கை வழக்கா? இல்லையெனில் கிறித்துவர் என்ற மாற்றப்பரிந்துரைக்கிறேன். இது போலவே தானியங்கி மூலம் உருவாக்கப்பட்டுள்ள கட்டுரைகளிலும் திருத்த வேண்டும்.--சிவகுமார் \பேச்சு 13:47, 7 மார்ச் 2008 (UTC)

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சிவகுமார், ஆம் இங்கு கிறீஸ்தவர்கள் அல்லது வேதக்காரர் என்றவாறு அழைப்பதைக் கேட்டுள்ளேன் கிறித்துவர் என்று உச்சரிப்பதை இன்னமும் கேட்கவில்லை. இக்கட்டுரைகள் எல்லாம் ஒரே பகுப்பில் வருவதால் இலகுவாக விக்கி தானுலாவி ஊடாகவோ அல்லது நேரடியாகவோ திருத்திவிடலாம். அதில் ஒரு சிக்கலும் இல்லை. என்றாலும் மாற்றங்களை உண்டு பண்ண முன்னர் மற்றவர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன். --உமாபதி \பேச்சு 00:40, 8 மார்ச் 2008 (UTC)

கிறீஸ்தவர்கள் அல்ல கிறிஸ்தவர்கள். ஆனாலும் சிவகுமார் சுட்டிக்காட்டியதைப் போல கிறித்துவர் எனத் தமிழ்ப்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்பது என் கருத்து.--Kanags \பேச்சு 06:58, 8 மார்ச் 2008 (UTC)
டயல்-அப் இணைப்பு ஆமை வேகத்தில் இயங்குவதால் இன்று சரிசெய்ய இயலவில்லை. நாளை மீண்டும் விக்கி தானுலாவியை இயக்க முயற்சி செய்கின்றேன் சரிவராவிட்டால் நாளை ஒவ்வொன்றாக மாற்றிவிடுகின்றேன் --உமாபதி \பேச்சு 02:56, 15 மார்ச் 2008 (UTC)