பேச்சு:முடிச்சுக் கணிதம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்ல கட்டுரை செல்வா. இதை நிறைவு செய்து, மயூரநாதன் எழுதியுள்ள முடிச்சுகளைப் பற்றிய கட்டுரைகளின் பட்டியலுக்கு இணைப்பு தர வேண்டும். அதன்பின் முதல் பக்கத்தில் இட்டால் வருபவர்கள் வியந்து மகிழ்வர். -- சுந்தர் \பேச்சு 17:47, 27 ஏப்ரல் 2009 (UTC)

நன்றி சுந்தர், கணிதவியல் முடிச்சுகளைவிட, கயிறுகளைக் கொண்டு பொதுப்பயன்பாட்டு செய்முறை முடிச்சுகள் முதன்மையானவை. கணிதவியல் முடிச்சுகள் இடவியல் சார்ந்ததாகையால் சற்று கடினமானது, என்றாலும் மிகவும் சுவையான சுழற்றும், கலக்கும் கருத்துகளும் உண்டு. டொராண்ட்டோ பல்கலையில் உள்ள பேரா. டிரோர் பார்-நாதன் (Dror Bar-Natan) என்பாரும் இசுக்காட் மாரிசன் (Scott Morrison) என்பாரும், மிக அருமையாக முடிச்சியல் பற்றி ஒரு தனிவிக்கி உருவாக்கி வருகிறார்கள். இவற்றில் இருந்தும் இது போன்ற பிற பல கருவூலங்களில் இருந்தும் கருத்துகளைத் தொகுத்து, கற்றுப் பயன்படுமாறு இங்கு இடுதல் வேண்டும். முடிச்சியல் தனி விக்கியின் தொடுப்பு: http://katlas.math.toronto.edu/wiki/Main_Page --செல்வா 17:58, 27 ஏப்ரல் 2009 (UTC)
அப்படியெனில் முடிச்சுக் கணிதத்துக்கும் கயிறுகளில் இடும் முடிச்சுக்கும் தொடர்பில்லையா? ஒரு ஆட்டுக்குட்டியைக் கட்டும் முடிச்சைக்கூடச் சரியாகப் போடத்தெரியவில்லை என் தாத்தாவிடம் சிறு வயதில் ஏச்சு வாங்கியிருக்கிறேன். உண்மை என்னவென்றால் இன்றுவரை எனக்கு சரியாக இரண்டே வகை முடிச்சுகளைத் தான் போடத்தெரியும். :-) மயூரநாதனின் கட்டுரைகளைப் படித்துப் பழக வேண்டும். -- சுந்தர் \பேச்சு 18:04, 27 ஏப்ரல் 2009 (UTC)
ஆம் கணித முடிச்சு வேறானது. ரால்'வ்சன் அட்டவணையில் கொடுத்திருந்த 166 கணித முடிச்சுகளில் இரண்டு முடிச்சுகள் ஒன்றே என்று நிறுவியவர் பெர்க்கோ (Perko) என்னும் ஒரு வழக்குரைஞர். 75 ஆண்டுகளாக வேறு யாரும் கண்டுபிடிக்கவில்லை. ஆகவே இப்பொழுது 10 "கடப்புகள்" கொண்ட கணித முடிச்சுகள் 165 ஐ இங்கே பார்க்கலாம். நுனிகள் ஏதும் இல்லாமல் இருப்பதைப் பாருங்கள். செய்முறை/பயன்முறை முடிச்சுகள் வேறு கணித முடிச்சுகள் வேறு. ஆனால் செய்முறை/பயன்முறை முடிச்சில் உள்ள இரு நுனிகளை இணைத்துவிட்டால் அது கணிதவியல் முடிச்சில் ஒன்றாக இருக்கலாம். ஆம் ஒவ்வொருவருக்கும் 10-20 முடிச்சுகள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இவற்றையெல்லாம், பள்ளிகளில் கூடச் சொல்லித்தருதல் வேண்டும். --செல்வா 18:15, 27 ஏப்ரல் 2009 (UTC)

முடிச்சியல், அல்லது முடிச்சுக் கோட்பாடு[தொகு]

ஆங்கிலத் தலைப்புக்கு நேர் இணையான தலைப்பு முடுச்சுக் கோட்பாடு. இந்தக் கட்டுரை இயலைப் பற்றியது என்றால் முடிச்சியல் என தலைப்பிடலாமே!...--Natkeeran 21:19, 5 மே 2009 (UTC)[பதிலளி]