பேச்சு:மருத்துவப் பாடத் தலைப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதனை தானே விளங்குமாறு இன்னும் விரிவாக மருத்துவப் பாடத்தலைப்புத் தொகுப்பு என்று பெயரிடலாமோ ? --மணியன் 06:25, 2 ஏப்ரல் 2011 (UTC)

  • Medical Subject Headings (MeSH®) என்பது ஒரு திட்டம் என்றபடியால் நீங்கள் கூறியவாறு மாற்றுவது சரியாகுமா என்பது தெரியவில்லை.--சி. செந்தி 07:22, 4 ஏப்ரல் 2011 (UTC)
அப்படியானால் மருத்துவப் பாடத்தலைப்புத் தொகுப்புத் திட்டம் என்று மாற்றி விடலாமே...?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:06, 4 ஏப்ரல் 2011 (UTC)
செந்தி, (MeSH®) என்பது பதியப்பட்ட(®) தலைப்பு எனில் தமிழிலும் மெஷ் என்றே குறிப்பிடுவது தகும். மொழிமாற்றினால் பொருத்தமாக மொழிமாற்றுவது சிறப்பல்லவா? மருத்துவப் பாடத் தலைப்பு என்பது துறைசார் பயனர்களுக்கு மட்டுமே மெஷ் என்று அறியக்கூடியதாக உள்ளது. பிறருக்கு கடினமாக இருக்கும். தேனியார் கூறுவதுபோல மருத்துவப் பாடத்தலைப்புத் தொகுப்புத் திட்டம் (மெச்) என்றுகூட மாற்றலாம்.--மணியன் 12:30, 4 ஏப்ரல் 2011 (UTC)
  • அப்படியானால் மருத்துவப் பாடத்தலைப்புத் தொகுப்புத் திட்டம் (மெச்) என்றோ அல்லது மருத்துவப் பாடத்தலைப்புத் தொகுப்பு (மெச்) என்றோ மாற்றலாம். மாற்றியபின்னர் உள்ளடக்கத்தில் மாற்றம் செய்கின்றேன். --சி. செந்தி 13:28, 4 ஏப்ரல் 2011 (UTC)
இப்படி மாற்றலாமா?

மருத்துவப் பாடத் தலைப்புத் தொகுப்பு (Medical Subject Headings) அல்லது மெஷ் (MeSH) என்பது எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் மருத்துவ சம்பந்தமான சொற்களை அட்டவணைப்படுத்தும் நோக்கில் உள்ளடக்கிய சொற்களஞ்சியம் ஆகும். மருத்துவ சொற்கள், சஞ்சிகைகள், நூல்கள் என்பன இங்கு எளிதில் தேடிக்கொள்ளக் கூடியவாறு அமைந்துள்ளன. ஐக்கிய அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தால் இத்திட்டம் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு தலைப்பிற்கும் தனித்துவ அடையாள எண் உண்டு. விக்கிப்பீடியாவில் ஒவ்வொரு நோய்களுக்கும் மெஷ் அடையாளம் இடப்படுகிறது. இணையத்தில் இலவசமாக பப்மெட் (PubMed) ஊடாக மருத்துவப் பாடத் தலைப்புத் தொகுப்பு (MeSH) நோக்கலாம், தரவிறக்கலாம்.

--சி. செந்தி 13:34, 4 ஏப்ரல் 2011 (UTC)