பேச்சு:பெரிப்ளசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தமிழ் எழுத்துக்களால் தலைப்பிட்டுத் தரம் மிக்க கட்டுரையை உருவாக்கிய இறையியல் பேராசிரியர் வறுவேல் அவர்களுக்கு வணக்கம். நான் தொடங்கிய கட்டுரைக்குப் பெரிப்ளஸ் எனத் தலைப்பிட்டதற்கு வெட்கப்பட்டு இப்போது திருத்திக்கொண்டுள்ளேன். அருள் பாலிக்க வேண்டுகிறேன். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 00:43, 23 சனவரி 2013 (UTC)[பதிலளி]

பெரிப்ளசு என்றால் கடற்செலவு என்று தானே அர்த்தம். இதை கடற்செலவு என்னும் தமிழ் தலைப்புக்கே மாற்றலாமே?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:25, 24 சனவரி 2013 (UTC)[பதிலளி]

பண்டைத் தமிழகம் பற்றி பெரிப்ளசு, செங்கடல் செலவு போன்ற கட்டுரைகள்[தொகு]

தென்காசி சுப்பிரமணியன், மேலே கண்ட கருத்துப் பரிமாற்றத்தின் அடிப்படையில் பெரிப்ளசு என்னும் தலைப்பு அப்படியே இருக்கலாம் என்றும், அதற்கு "கடற்செலவு (பெரிப்ளசு)", "கடற்பயணம் (பெரிப்ளசு)" என்று வழிமாற்றுகள் கொடுக்கலாம் என்றும் நினைக்கிறேன்.

மூல மொழித் தலைப்பை அப்படியே கொடுப்பதற்கு த.வி.யில் ஏற்கெனவே பல உதாரணங்கள் உள்ளன. காண்க: "அட்லசு", "கொலோசியம்", "ஆடிசி", "இலியட்" போன்ற தலைப்புகள்.

"செங்கடல் செலவு" என்னும் கட்டுரைக்குப் பொருத்தமான தலைப்பு "எரித்திரேய கடல் வழிக்கையேடு" என்பதால் அதையே வழிமாற்றாக ஏற்கெனவே கொடுத்திருக்கிறேன். "செங்கடல் பயணம்" என்பதும் நன்றே. எனவே, தற்போது உள்ள "செங்கடல் செலவு" என்னும் குறுங்கட்டுரையில் காணும் செய்திகளை இன்னும் அதிகமாக விரித்து எழுத வேண்டும். இப்பொருள் பற்றிய எல்லாக் கட்டுரைகளுக்கும் குறுக்கு இணைப்புகள் தரவும் வேண்டும்.

செங்கை பொதுவன் அவர்கள் "பெரிப்ளசு கண்ட தமிழகம்" என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையும் தேவையானதே. அதில் கி.பி. முதல் நூற்றாண்டுப் பயணக் கையேடுகளில் குறிப்பிடப்படுகின்ற தமிழகத் துறைமுகங்கள், வணிகத் தளங்கள் பற்றிய விரிவான செய்திகளைத் தாம் வழங்க விரும்புவதாக அவர் ஏற்கெனவே கருத்துத் தெரிவித்துள்ளார். அது த.வி.க்குச் சிறப்புச் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துகள்!--பவுல்-Paul (பேச்சு) 15:01, 24 சனவரி 2013 (UTC)[பதிலளி]

பகுப்பு[தொகு]

  • கிரேக்க எழுத்துக்கள் என்னும் பகுப்பில் அஸ்வின் இணைத்துள்ளது பாராட்டுக்குரியது.

சொல்[தொகு]

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் - திருக்குறள் | பழந்தமிழ் வழக்கை அழிக்க வேண்டாம். --Sengai Podhuvan (பேச்சு) 19:59, 19 மார்ச் 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெரிப்ளசு&oldid=2039794" இலிருந்து மீள்விக்கப்பட்டது