பேச்சு:பூலன்குளம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருண், இவ்விடத்தின் பெயர் பூலன் குளம். அதனைப் பாலன் குளம் என்று நீங்கள் தலைப்பிட்டது உங்கள் அனுமானத்தின் பேரிலா அல்லது அப்படி ஒரு பெயர் இதற்கு இருந்ததா? உங்கள் அனுமானத்தின் படி இப்பெயரை வைத்தீர்கள் என்றால் அது பற்றிய குறிப்புகளை அகற்றிவிட்டு தலைப்பை பூலன் குளம் என்றே மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். அல்லது ஆதாரம் தாருங்கள்.--Kanags \உரையாடுக 00:28, 9 ஏப்ரல் 2011 (UTC)

மேலும், இது உண்மையில் குளமா அல்லது குளத்தைச் சார்ந்த ஊரின் பெயரா. அநேகமாக இது ஊரின் பெயராகவே இருக்க வேண்டும். மாங்குளம் போன்று இதன் பெயர் பூலன்குளம் என இருக்கவேண்டும்.--Kanags \உரையாடுக 00:37, 9 ஏப்ரல் 2011 (UTC)

பாலன் குளம் பெயர் அனுமானத்தில் வைத்ததுதான். ஏனெனில் "பூலன்" எனும் பெயர் எங்கும் நான் காணப்படாததே காரணம். இருப்பினும் பூலன் குளம் என்று மாற்றுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. //இது உண்மையில் குளமா அல்லது குளத்தைச் சார்ந்த ஊரின் பெயரா?// தமிழரின் வழக்கின் படி ஒரு குளத்திற்கு இடும் பெயர் கொண்டே குளத்தை அண்டிய ஊருக்கு பெயரிடுவது வழமை. நீங்கள் குறிப்பிட்ட மாங்குளம், அக்கராயன் குளம், இரணைமடு குளம் என நூற்றுக்கணக்கான குளங்களின் பெயர்தான் ஊரின் பெயருமாக உள்ளது. எனவே ஊரின் பெயராகவும் இருக்கலாம். ஆனால் கொடுக்கப்பட்டிருக்கும் மேற்கோள் இணைப்பின் வரைப்படத்தில் குளத்தின் பெயராகவே காட்டியுள்ளனர்.

மேலும் சரியாக எதனையும் என்னால் உறுதிப்படுத்த முடியாது. ஏதேனும் வரலாற்றாய்வு நூல்களில் கண்டால் மேலதிக விபரங்களை சேர்க்கலாம். அல்லது நாளை எவரேனும் ஆய்வு செய்துதான் விபரங்களைப் பெறவேண்டியிருக்கும். தமிழரின் அடையாளங்கள், தமிழில் இடப்பட்ட பெயர்கள், தமிழர் வாழ்ந்த தடங்கள் என எல்லாம் தேடித்தேடி அழிக்கப்பட்டுவருவதை நீங்களும் அறிவீர்கள், பலரும் அறிவோம். இங்கே எனக்கு கிடைத்து, ஒரு வரைப்படத்தில் காணப்பட்ட தமிழ் பெயர் மட்டும் தான். அதனை ஆவணப்படுத்தியுள்ளேன். --HK Arun 04:02, 9 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி அருண், நீங்கள் இதனை பாலன் எனக் கூறி இதனையே ஆதாரமாகக் கொண்டு இக்குளம் பாலன்குளம் ஆகிவிடும் அபாயம் உள்ளது. இப்படியான வரலாற்றுத் தவறுகளை நாம் தெரிந்தே செய்யக்கூடாது. தமிழ்ப் பெயர் என்று தெரிகிறது, அவ்வளவே போதும். பாலன் பற்றிய குறிப்பை அகற்றியிருக்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 05:03, 9 ஏப்ரல் 2011 (UTC)

பூலன் குளம் என மாற்றியதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், //வரலாற்றுத் தவறுகளை நாம் தெரிந்தே செய்யக்கூடாது.// எனும் சொற்றொடர் "நான் வரலாற்று தவறை தெரிந்தே செய்வது போன்ற" ஒரு குற்றசாட்டை முன்வைக்கிறது. நான் பூலன், பாலன் என்பது தொடர்பான சொல்விளக்கம் கொடுத்துள்ளேன். --HK Arun 05:13, 9 ஏப்ரல் 2011 (UTC)

பாலன் என்பது உங்கள் அனுமானமே அன்றி ஏன் அப்பெயர் இருந்திருக்கலாம் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஏன் பூலன் அல்லது அதற்கொத்த தமிழ்ப் பெயர் இருந்திருக்கக்கூடாதா? மேலும் சொந்த ஆய்வுகள் விக்கிப்பீடியாவில் சேர்க்கப்படுவதில்லை.--Kanags \உரையாடுக 05:16, 9 ஏப்ரல் 2011 (UTC)

//ஏன் பூலன் அல்லது அதற்கொத்த தமிழ்ப் பெயர் இருந்திருக்கக்கூடாதா?// என்பது கூட அனுமானங்கள் தான். கூறப்போனால் Kulama எனும் சொல்லை வைத்து அது "குளம்" எனும் அறிந்து, அது தமிழ் பெயர் என அறிகிறோம். அதனை இங்கே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இங்கே ஆய்வுகள் எதுவும் செய்யவதற்கில்லை. மாங்குளம் எனும் பெயர் ஊராக இருப்பதால், இதுவும் ஊராக இருக்கலாம் என நீங்கள் கூறியது அனுமானமல்ல; அறியாமை. அறியாமையை அனுமானங்களாக முன்வைப்பதே ஆபத்தானது. அதைவிடுத்து "தெரிந்தே வரலாற்று தவறை செய்வதாக// என்மீது ஒரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. வரலாற்று தகவல்களை யார் யாரோ செய்துக்கொண்டிருக்கும் போது, என்மீது இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைப்பது எந்தவகையிலும் சரியானதல்ல. --HK Arun 05:33, 9 ஏப்ரல் 2011 (UTC)

உங்கள் மீது நான் குற்றச்சாட்டை வைக்கவில்லை. விக்கியில் சொந்த ஆய்வுகள் சேர்க்கப்படுவதில்லை. அதனாலேயே வெறும் அனுமானங்களைக் கொண்டு நாம் வரலாற்றை எழுத முடியாது. அப்படித்தான் பலர் எழுதுகிறார்கள். அவை வரலாறாகி விடுகின்றன. அதனால் தான் நாம் தெரிந்தே தவறான வரலாற்றை எழுதி விடக் கூடாது. யாழ்ப்பாணத்து வரலாற்றாய்வாளர்கள் நிச்சயம் இக்குளம் குறித்து அறிந்திருப்பார்கள் என்றே எண்ணுகிறேன். இணையத்தில் இல்லாவிட்டாலும், நூல் வடிவில் யாராவது எழுதி இருக்கலாம். அல்லது போர்ச்சூழலில் அழிந்து போயிருக்கலாம்.--Kanags \உரையாடுக 05:51, 9 ஏப்ரல் 2011 (UTC)
அருண், விக்கி முதல் கட்ட ஆய்வுகளை/அனுமானங்களை வெளியிடும் இடமல்ல. பிறர் வெளியிட்டுவற்றை சுருக்கமாகப் பதிவு செய்யுமிடம் மட்டுமே. புதிய அனுமானங்கள் (அவை மிகச்சரியாக இருப்பினும்) இங்கு வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது விக்கியின் ஐம்பெரும் தூண்களில் ஒன்று. வரலாற்றுத் தவறுகளைத் திருத்தும் இடமும் நாமல்ல என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் இங்கே “சொல்விளக்கம்” பகுதியில் இட்டிருப்பவை, இதற்கு முன்னரே யாரேனும் எழுதியுள்ளார்களெனில் அதை மேற்கோளாக வைத்து கொடுங்கள். இல்லை, இந்தத் தொடர்பை நீங்கள் தான் முதலில் கண்டுபிடித்தீர்கள் எனில் அதை இங்கு இட வேண்டாம்.
இது வரை வெளியிடப்படாத புதிய வரலாற்று செய்திகளை ஆவணப்படுத்துதலும் விக்கிப்பீடியாவில் நிகழக் கூடாது. இது போன்ற விசயங்களைச் செய்வதற்காகத் தான் விக்கி நூல்கள் திட்டம் உருவாக்கபப்ட்டது. இந்த ஆய்வினை ஒரு ஆய்வுக்கட்டுரையாக எழுதி நீங்கள் விக்கி நூல்களில் வெளியிடுவது பொருத்தமானதாக இருக்கும்.--சோடாபாட்டில்உரையாடுக 06:14, 9 ஏப்ரல் 2011 (UTC)

குறிப்பு[தொகு]

அதே வரைபடத்தில் ISSURUMUNIYAGALA எனும் பெயர் ஈஸ்வர் முனியர் பாறை என ஒரு நூலில் வாசித்த நினைவு உள்ளது. இவற்றை தேடி ஆவணப்படுத்துதல் எமது கடமைகளில் ஒன்றாக இருக்கவேண்டும். வரலாற்று ஆய்வு நோக்கில் இவை மிகவும் முக்கியமானவை. நாளை வரலாறு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வோருக்கு இவை நிச்சயம் பயனுள்ள தகவல்களாக இருக்கும்.--HK Arun 04:18, 9 ஏப்ரல் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பூலன்குளம்&oldid=739171" இலிருந்து மீள்விக்கப்பட்டது